செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் தையல் இயந்திரம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் தையல் இயந்திரம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தையல் இயந்திரத்தை திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் பயன்படுத்துவது பெருகி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், ஊசியின் அமைப்புகளை மாற்றும் வரை துணி தைக்கும் தொழிலாளர்கள் காத்திருக்க தேவையில்லை என்றும் மூன்று வகையான துணிகளையும் தைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் பொறியாளர் மனோஜ் விளக்கினார்.

இந்த தையல் இயந்திரம் மிக மெல்லிய துணி முதல் 15 லேயர் கொண்ட துணிகள் வரை தைக்கக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தையல் இயந்திரத்தில் தேவையான தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறுகிறார் ஏஐ தையல் இயந்திர பொருளியாளர் மனோஜ்.

தயாரிப்பு - கலைவாணி பன்னீர்செல்வம்

ஒளிப்பதிவு/படத்தொகுப்பு - மதன் பிரசாத்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)