இந்தோனீசியா சிறையில் இருந்து 53 கைதிகள் தப்பி ஓட்டம்

இந்தோனீசியா சிறையில் இருந்து 53 கைதிகள் தப்பி ஓட்டம்

இந்தோனீசியாவில் உள்ள ஒரு சிறையில் இருந்து கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.

கடந்த மார்ச் 10-ம் தேதி ஆச்சே மாகாணத்தில் உள்ள சிறையின் பிரதான வாயிலை உடைத்து குறைந்தது 53 கைதிகள் தப்பியோடினர்.

தப்பியவர்களில் 21 பேர் பிடிக்கப்பட்ட நிலையில் மீதி 32 பேரை காவல்துறை தேடி வருகிறது.

100 பேர் இருக்க வேண்டிய சிறையில் அளவுக்கு அதிகமாக 368 பேர் அடைக்கப்பட்டதே இதற்கு காரணம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)