ப்ளூடூத் ஹெட்போன் சில நேரம் வெடிப்பது ஏன்? அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பேசிக் கொண்டிருக்கும் போதும் சார்ஜ் செய்யும் போதும் செல்போன் வெடித்த சம்பவங்கள் குறித்து நாம் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால், புளூடூத் இயர்பாட் வெடித்து முதியவர் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கிறது.
புளூடூத் இயர்பாட், ஹெட்போன்கள் வெடிப்பதற்கான காரணங்கள் என்ன, அவை வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வயர் இல்லாமல் செயல்படும் இத்தகைய புளூடூத் இயர்பாட், ஹெட்போன்கள் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன, அவை வெடிக்காமல், நம்மை பாதுகாத்துக்கொள்ள என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து, அண்ணாமலை பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியர் சக்திவேல் வழங்கிய தகவல்கள் இந்த வீடியோவில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.
புளூடூத் ஹெட்போனில் உள்ள மின்சுற்று (circuit) வெடிப்பதற்கு பெரியளவில் வாய்ப்பில்லை, மிகவும் அரிதானதே. ரீசார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய எல்லா மின்சாதன பொருட்களிலும் லித்தியம் அயன் பேட்டரிகள் இருக்கும். அத்தகைய இரு சிறிய லித்தியம் அயன் பேட்டரிகள் மூலமாகவே புளூடூத் ஹெட்போன்கள் இயங்குகின்றன. எச்சரிக்கை உணர்வுடன் இல்லாமல் ஹெட்போன்களை பயன்படுத்தும்போது அந்த பேட்டரி வெடிக்க வாய்ப்புகள் உண்டு. நீண்ட நேரம் பயன்படுத்தும்போது பேட்டரிகள் சூடாகி ஹெட்போன் வெடிக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



