குடும்பத்தினர் சம்மதித்தும் இந்த லெஸ்பியன் திருமணம் சர்ச்சைக்கு உள்ளாவது ஏன்?

குடும்பத்தினர் சம்மதித்தும் இந்த லெஸ்பியன் திருமணம் சர்ச்சைக்கு உள்ளாவது ஏன்?

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் நடந்த இந்த தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் கடந்த சில நாட்களாக விவாதப் பொருளாக மாறியுள்ளது.

டிம்பிள் மற்றும் மணிஷா ஆகியோர் தங்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி பதிண்டாவில் உள்ள குருத்வாரா ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர்.

டிம்பிள் ஜாட் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர், மணிஷா இந்து தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர். இருவரும் தங்கள் குடும்பத்தினரின் ஆதரவை பெற்றிருந்தாலும் குருத்வாராவில் நடைபெற்ற இந்த திருமணத்தால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், சீக்கிய உயர் அமைப்பான அகல் தக்த் சாஹிப், இதனை நெறி தவறியது என்றும் மதரீதியான மீறல் என்றும் அறிவித்துள்ளது.(முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: