திருப்பூரில் சிலிண்டர் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்
திருப்பூரில் அடுத்தடுத்த வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் வெடித்ததில் 42 வீடுகள் தரைமட்டமானது.
திருப்பூரில் எம்ஜிஆர் நகர் புளியம் தோட்டம் பகுதியில் 42 வீடுகள் தகர கொட்டைகள் அமைத்து வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
இதில் வடமாநில தொழிலாளர்களும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், ஜூலை 9-ம் தேதி மதியம் அருகருகே இருந்த வீடுகளில் வீட்டு சமையலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன.
"மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் திருப்பூர் காவல் துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின்போது வீடுகளில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



