புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து எண்ணெய், எரிவாயு போன்றவற்றை பயன்படுத்த டிரம்ப் ஊக்குவிக்கிறாரா?

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து எண்ணெய், எரிவாயு போன்றவற்றை பயன்படுத்த டிரம்ப் ஊக்குவிக்கிறாரா?

அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை விரிவுபடுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

டிரம்பை பின்பற்றும் முடிவை இந்தோனீசியாவும் அர்ஜென்டினாவும் பூடகமாக வெளிப்படுத்தியுள்ளன.

தென் ஆப்பிரிக்கா புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதை தாமதிக்கக்கூடும் என்ற அச்சமும் உள்ளது.

எரிசக்தி துறை ஜாம்பவான்களான ஈக்வினார் (Equinor) மற்றும் பிபி (BP) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மீதான முதலீடுகளைக் குறைத்துள்ளன.

உலகம் முழுவதும் அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு விற்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தியா, அமெரிக்காவிடமிருந்து அதிகளவில் எரிவாயு மற்றும் எண்ணெயை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தென் கொரியா மற்றும் ஜப்பானும் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

புதைபடிவ எரிபொருள் எடுப்பதை குறைப்பதே பூமிக்கு நல்லது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களே புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்று என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு மந்தமடைந்து வருவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

சீனா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஒப்பிட முடியாத அளவுக்கு விரிவாக்கியுள்ளது.

ஆனால் அங்கும் புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

அமெரிக்கா, புதைபடிவ எரிபொருட்களுக்குத் திரும்பினால்,

கார்பன் உமிழ்வை வேகமாக குறைக்க வேண்டும் என மற்ற பெரிய நாடுகள் மீதிருக்கும் அழுத்தம் குறையும் என எரிசக்தி நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதைப்பற்றிய கூடுதல் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)