கும்பமேளாவில் புனித நீராடுவது தவிர பக்தர்கள் வேறு என்னவெல்லாம் செய்கின்றனர்? (காணொளி)

காணொளிக் குறிப்பு,
கும்பமேளாவில் புனித நீராடுவது தவிர பக்தர்கள் வேறு என்னவெல்லாம் செய்கின்றனர்? (காணொளி)

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகின் மாபெரும் மதம் சார்ந்த ஒன்றுகூடலான கும்பமேளா தற்போது நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து கொண்டிருப்பதால் பிரயாக்ராஜ் நகரம் திணறிக் கொண்டிருக்கிறது. கும்பமேளா என்றதும் அனைவரது நினைவுக்கும் வருவது உடல் முழுவதும் விபூதியைப் பூசிய நாகா சாதுக்கள்தான்.

ஆனால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தக் கும்பமேளா, வெறும் நாகா சாதுக்களைப் பற்றியது அல்ல, இது பல கோடி மக்களின் மாபெரும் நம்பிக்கை.

புனித நதிகளில் நீராடுவதன் மூலம் மோட்சம் பெறலாம் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட கும்பமேளா, பிரயாக்ராஜ், ஹரித்வார், நாசிக், உஜ்ஜயினி என இந்தியாவின் நான்கு நகரங்களில் நடைபெறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)