காணொளி: வெள்ளி விலை உயர்வால் சிறுதொழில் வாய்ப்புகளை இழந்து தவிக்கும் பெண்கள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: வெள்ளி விலை உயர்வால் சிறுதொழில் வாய்ப்புகளை இழந்து தவிக்கும் பெண்கள்

தீபாவளிக்குப் பிறகு, தங்கம், வெள்ளியின் விலை சர்வதேச சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. குறிப்பாக வெள்ளியின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

இதனால் ராஜ்கோட்டில், வெள்ளியில் பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் உள்ளூர் தொழிலை வெகுவாகப் பாதித்துள்ளது. தங்க வியாபாரிகள் சங்கத்தின் கூற்றுப்படி, வெள்ளி விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால், ராஜ்கோட்டின் வெள்ளித் தொழில் மந்தநிலையை எதிர்கொண்டுள்ளது.

வெள்ளி விலை உயர்வால் வீட்டிலிருந்தபடி பணியாற்றும் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை கிடைக்கும் அளவு குறைந்ததால், பல குடும்பங்கள் வேறு வேலைகளுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு