கோவை: தாயைப் பறிகொடுத்த குட்டி யானையை சேர்க்க மறுக்கும் யானைக் கூட்டம்

காணொளிக் குறிப்பு, கோவை: தாய் இறந்துவிட்டதால் வேறொரு யானை கூட்டத்தோடு சேர போராடும் குட்டி யானை
கோவை: தாயைப் பறிகொடுத்த குட்டி யானையை சேர்க்க மறுக்கும் யானைக் கூட்டம்

தாயை பறிகொடுத்த இந்த குட்டி யானையின் கதை கேட்போரை நெகிழ்சசி அடைய செய்கிறது.

தனது தாய் இறந்துவிட்டதால் வேறொரு யானை கூட்டத்தோடு சேர இந்த குட்டி யானை போராடி வருகிறது.

கோவை அருகே தடாகம் பகுதியில் தாய் இறந்ததால் தனியாக பிரிந்து வந்த இந்த குட்டி யானையை வேறு யானை கூட்டங்கள் தங்களோடு சேர்க்க மறுப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24-ம் தேதி தாய் யானை இறந்த நிலையில் அதனை வனத்துறையினர் அடக்கம் செய்து அதன் குட்டியை மற்ற யானை கூட்டங்களோடு சேர்க்க முயன்றனர்.

குட்டி யானையை பார்த்ததும் மற்ற யானைகள் வேறு வழியில் செல்வதாக வனத்துறை கூறுகிறது.

இரண்டு முறை முயன்றும் குட்டியானையை மற்ற யானை கூட்டங்கள் சேர்த்துக்கொள்ள மறுப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

வனத்துறை, யானை கூட்டத்தை தேடி வரும் நிலையில் குட்டி யானைக்கு உணவு அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)