வெள்ளத்தில் தவித்த 800 பயணிகளுக்கு உணவளித்த புதுக்குடி கிராமம் இப்போது எப்படி இருக்கிறது? - காணொளி

'புதுக்குடி மேலூர் கிராம மக்களின் உதவி கிடைக்காமல் போயிருந்தால் நாங்கள் உயிர் பிழைத்திருப்போமா என்பது சந்தேகம்தான்,' இதுவே திருச்செந்தூர் விரைவு ரயிலில் இருந்து இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ரயில் பயணிகள் பலரின் கருத்து.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய சாலையில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் 100 வீடுகளை மட்டுமே கொண்ட ஒரு சிறிய கிராமம் புதுக்குடி மேலூர்.

மழை நின்று 4 நாட்களை கடந்த பிறகும் கூட மின்சாரம் இன்றி இந்த கிராம மக்கள் தவித்து வருகின்றனர். தங்களது கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதும், உணவின்றி தவித்த செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு இரண்டு நாட்களாக உணவு சமைத்து வழங்கியுள்ளனர் கிராம மக்கள்.

புதுக்குடி மேலூர் கிராமம் தற்போது எப்படி உள்ளது?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)