கேமராவில் பதிவான ஐஸ்லாந்து எரிமலை வெடிக்கும் காட்சி

கேமராவில் பதிவான ஐஸ்லாந்து எரிமலை வெடிக்கும் காட்சி

தென்மேற்கு ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள இந்த எரிமலை, பல வாரங்களாக ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் வெடித்துள்ளது.

2010ல் ஏற்பட்ட அதே அளவிலான பாதிப்புகள் தற்போது ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்கள்.

எரிமலை பகுதிக்கு அருகிலுள்ள சுமார் 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எரிமலை வெடிக்கத் தொடங்கிய தருணம் கேமராவில் பதிவாகியுள்ளது.

அக்டோபர் மாதக்கடைசியில் இருந்து அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவது அதிகரித்து. அதன், நீட்சியாகவே தற்போது இந்த எரிமலை வெடித்துள்ளது

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)