You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீரஜ் சோப்ராவை முந்தி நதீம் தங்கம் வென்றது பற்றி பாகிஸ்தானில் என்ன பேசுகிறார்கள்? - காணொளி
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், ஈட்டி எறிதலுக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்ற நாடுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம் பெற்றிருந்தது.
ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா இந்த முறை தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து, இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியை உறுதி செய்தார்.
"அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு நாள் வரும். இன்று நதீமின் நாள். விளையாட்டு வீரர்களின் உடல் மாறுபடும். இன்று அர்ஷதுக்கு எல்லாம் சிறப்பாக அமைந்தது," என்று குறிப்பிட்டார் நீரஜ் சோப்ரா.தன்னுடைய மகன் வெள்ளி பதக்கம் வென்றிருப்பது குறித்து பேசிய நீரஜின் தாயார் சரோஜ் தேவி, "நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எங்களுக்கு வெள்ளியும் தங்கமும் ஒன்றுதான். தங்கம் வென்ற நதீமும் என் மகன் தான். அதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்," என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானும் இந்தியாவும் இறுதிப் போட்டியில் பங்கேற்றதால் பல்வேறு விவாதங்கள் போட்டிக்கு முன்பே துவங்கியிருந்தன.
இருவரும் பதக்கங்களை வென்ற பிறகு, சமூக வலைதளங்களில், பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் இது குறித்த கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)