கேரளா: கோவில் திருவிழா ஊர்வலத்தின்போது மதம் பிடித்து மிரண்டோடிய யானை
கேரளா: கோவில் திருவிழா ஊர்வலத்தின்போது மதம் பிடித்து மிரண்டோடிய யானை
கேரளாவின் திருச்சூரில் கோவில் திருவிழாவிற்காக யானை ஒன்று கொண்டுவரப்பட்டது. ஊர்வலத்தின்போது யானைக்கு மதம் பிடித்து மிரண்டோடியது. அப்போது, அதன் காலில் கட்டப்பட்டிருந்த சங்கிலியில் பைக் சிக்கிக்கொண்டது.
இதனால், பைக்கை இழுத்தப்படியே யானை அங்குமிங்கும் நடந்தது. நீண்ட முயற்சிக்கு பின், சங்கிலியில் சிக்கியிருந்த பைக் விடுவிக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



