மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன?
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி யும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து அமோக வெற்றி பெறும் நிலையில் பாஜக கூட்டணி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி, அடுத்து வந்த ஐந்தே மாதங்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
ஜார்க்கண்டைப் பொருத்தவரை, காங்கிரசை உள்ளடக்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதனை அடுத்து இந்த இரண்டு மாநிலத்திலும் தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? மூத்த பத்திரிகையாளர் பிரியன் பகுப்பாய்வு செய்து பிபிசி தமிழ் உடனான நேர்காணலில் தெரிவிக்கிறார்.
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



