You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உங்கள் மூளையில் ஜி.பி.எஸ். இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் மூளையில் ஜி.பி.எஸ் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
பயப்படாதீர்கள், யாரும் உங்கள் மூளையில் சிப் எதுவும் பொருத்தவில்லை. நீங்கள் பிறக்கும்போதே உங்களுக்குள் ஒரு வழிகாட்டும் அமைப்பு இருந்தது.
மூளை குறித்து நமக்கு அதிகம் தெரிவதில்லை என்பதுதான் உண்மை.
நம் இதயம் எப்படி துடிக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால், நம் மூளை எப்படி நினைவுகளை உருவாக்குகிறது என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ளத் துவங்கியுள்ளோம்.
நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மூளையில் ஒரு வரைபடமாக மாற்றும் செல்கள் குறித்து கண்டுபிடித்த மூன்று நரம்பியல் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இக்கண்டுபிடிப்பு, நம் மூளையின் இயக்கத்தைப் பற்றிய புரிதலில் பெரும் திருப்புமுனையாகும். நினைவுகள் குறித்து புரிந்துகொள்வதற்கான ஒரு படியாகும்.
இந்தப் பகுதியில் உள்ள செல்கள் ஒன்றாக வேலை செய்வதன் மூலம், ஏதாவது ஒரு விஷயம் எங்கு நடக்கிறது என்பதை மட்டுமல்ல, அது எப்போது நடந்தது என்பதையும் அறிய உதவுகிறது.
எனவே, இந்த செல்கள் நீங்கள் செல்லும் திசையை ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளி வரை கண்டறிய உதவும்.
நீங்கள் வாழ்க்கையில் சரியான திசையைத் தேடினால், அதற்கும் உங்கள் மூளையிடம் பதில் இருக்கிறது.
வாழ்க்கையில் சரியான திசை என்பது இலக்குகளை நிர்ணயிப்பது.
ஒரு உயர்ந்த லட்சியத்தை நிர்ணயிப்பதும், அதை அடையக்கூடிய வகையில் சிறிய படிகளாக உடைப்பதும், வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்லவும் சிக்கல்களைத் தீர்க்கவும் உதவும் என்று மே-பிரிட் கூறுகிறார்.
இது ஜி.பி.எஸ்-ஐ பயன்படுத்துவது போன்றது. உங்களின் இலக்குதான் அடையக்கூடிய இடம். அதனை அடைவதற்கு நீங்கள் படிகளைக் கடக்க வேண்டும்.
ஆனால், நீங்கள் எந்தப் பிரச்னையைத் தீர்க்க முயன்றாலும், அதைச் சிறிய படிகளாகப் பிரித்துக்கொள்வது, அதற்கானத் தீர்வைக் கண்டறிய உதவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)