போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
ஆமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்துக்குப் பிறகு, போயிங் ட்ரீம்லைனர் விமானம் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
இந்த வகை விமானம் இவ்வாறு விபத்தில் சிக்கியது இதுவே முதல் முறையாகும். போயிங் நிறுவனம் இந்த விமானத்தை 14 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது.
இந்த ட்ரீம்லைனர் விமானங்களில் 1 பில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர் என்று ஆறு வாரங்களுக்கு முன், நிறுவனம் அறிவித்தது. உலகளவில், 1,175 போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
போயிங் 787 ட்ரீம்லைனர்
விபத்தில் சிக்கிய விமானம் போயிங் 787-8 மாடல் ஆகும். நீண்ட தூரம் ஒரே நேரத்தில் பயணிக்கக் கூடிய திறன் கொண்டதால், இந்த விமானங்கள் தொடர்ச்சியான (non-stop) விமானப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
போயிங் 787 ட்ரீம்லைனர் விவரக்குறிப்புகள்
• மொத்த பயணிகள் கொள்ளளவு: 248
• பயண தூரம்: 13,530 கிமீ
• விமான நீளம்: 186 அடி
• இறக்கைகள் விரிப்பு: 197 அடி
• உயரம்: 56 அடி
• எஞ்சின்கள்: GEnx-1B / Trent 1000
இந்த விபத்து குறித்து பேசிய போயிங் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி Kelly OrtBerg, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு முகமை நடத்தும் விசாரணைக்கு போயிங் ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



