You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நலிவடைந்த நிறுவனங்கள் வருவாயை விட அதிகமாக கட்சிகளுக்கு நன்கொடை - தேர்தல் பத்திரத்தால் அம்பலம்
தேர்தல் பத்திர திட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு State bank on India-க்கு நெருக்கடியை அளித்திருக்கிறது.
தேர்தல் பத்திரம் அரசமைப்புக்கு எதிரானது என கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு, தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தரவுகளையும் மார்ச் 6ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கும்படி எஸ்.பி.ஐக்கு உத்தரவிடப்பட்டது.
அதிக தரவுகள் இருப்பதால் அனைத்தையும் சரி பார்த்து சமர்பிக்க ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் என எஸ்.பி.ஐ கேட்டுக்கொண்டது. ஆனால் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மார்ச் 15ம் தேதிக்குள் அனைத்து தரவுகளையும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து எஸ்.பி.ஐயும் தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளை வெளியிட்டது. என்னெந்த நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள் எவ்வளவு தொகைக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கினர் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
2019 முதல் ஜனவரி 11 2024 வரை 12,156 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பாஜக, 6061 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. அதாவது மொத்த தேர்தல் பத்திரங்களில் 47 சதவீதம் பாஜக உடையது.
மேலும் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி வாங்கியுள்ளன, இதுகுறித்து நடந்து வரும் விவாதங்கள் என்ன என்பதை இந்த காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)