மல்யுத்த போட்டிகளை விட்டு வெளியேறிய சாக்ஷி மாலிக் கூறியது என்ன?
மல்யுத்த போட்டிகளை விட்டு வெளியேறிய சாக்ஷி மாலிக் கூறியது என்ன?
சஞ்சய் சிங் வெற்றி பெற்ற செய்தி வெளியானவுடன் டெல்லியில் உள்ள பிரஸ் கிளப்பில் மல்யுத்த வீரர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அதே செய்தியாளர்கள் சந்திப்பில், சாக்ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது பேசிய சாக்ஷி மாலிக், "இன்னும் ஒன்றை நான் கூற விரும்புகிறேன்.
மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர், பிரிஜ் பூஷனின் நண்பர், தொழில் கூட்டாளி என்பதுடன் அவரைப் போன்ற ஒரு நபராகவே இருந்தால்,அவர் இந்த கூட்டமைப்பில் நீடித்தால், நான் எனது மல்யுத்தக் கனவை விட்டுவிடுவேன்.
இன்றைக்குப் பிறகு என் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். என்னை அங்கே பார்க்கவே முடியாது," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



