ஜப்பான் நிலநடுக்கம்: சாலைகள் கடும் சேதம்; குடியிருப்புப் பகுதியில் தீ

காணொளிக் குறிப்பு, ஜப்பான் நிலநடுக்கம் - சாலைகள் கடும் சேதம்; தீப்பிடித்த குடியிருப்புப் பகுதி
ஜப்பான் நிலநடுக்கம்: சாலைகள் கடும் சேதம்; குடியிருப்புப் பகுதியில் தீ

ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48-ஐ தொட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு புத்தாண்டு ஜப்பான் மக்களுக்கு அதிர்ச்சியுடன் தொடங்கியது. திங்கட்கிழமை 7.6 என்ற அளவில் ஜப்பானின் மத்திய பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அவை தளர்த்தப்பட்டுள்ளன.

பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இஷிகாவா நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 32,500 வீடுகளில் மின் தடை ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோளிட்டு கியோடோ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இங்குள்ள பல வீடுகள் நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இஷிகவா மாகாணத்தின் கனாசாவா பகுதியில் உள்ள கோவில் நிலநடுக்கத்தால் குலுங்கியதை சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். ஜப்பானின் இஷிகவா பிராந்தியத்தில் நிலநடுக்கத்தால் தீ விபத்து ஏற்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஜப்பானுக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)