You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் - ரோகித் நீக்கத்தின் பின்னணி என்ன?
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா இருப்பார் என நேற்று அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்புவதாக ஐபிஎல் நிர்வாகம் கடந்த நவம்பர் 27ஆம் தேதி அறிவித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா எம் அம்பானி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவேற்கிறோம். மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் மீண்டும் அவரை இணைப்பது மகிழ்ச்சிக்குரிய தருணம்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான ஹர்திக் இன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம். அவரின் வருகை எங்களுக்கு உற்சாகமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். ரோகித்
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அந்த அணியின் உலகளாவிய செயல்திறன் தலைவர் மகிளா ஜெயவர்தனே, சச்சின் முதல் ஹர்பஜன் வரை, ரிக்கி பாண்டிங் முதல் ரோஹித் வரை சிறந்த தலைமைகளால் மும்பை இந்தியன்ஸ் அணி ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
"இவர்கள் உடனடி வெற்றிக்கு பங்களிக்கும் அதே வேளையில் எதிர்காலத்திற்கான அணியை வலுப்படுத்துவதில் எப்போதும் கவனமாக இருந்தனர். இந்த தத்துவத்தின் அடிப்படையில் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)