'இனி பா.ம.க.வின் தலைவர் நானே' - ராமதாஸ் பேசியது என்ன?
'இனி பா.ம.க.வின் தலைவர் நானே' - ராமதாஸ் பேசியது என்ன?
"இனி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நானே", என்று அக்கட்சியின் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும் தற்போது தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலைவராக செயல்படுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
"தலைவராக பொறுப்பேற்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை எல்லாம் சொல்ல முடியாது. 2026 தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு எடுப்போம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதைப்பற்றிய கூடுதல் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



