காணொளி: செங்கல்பட்டில் விழுந்து நொறுங்கிய விமானப்படை விமானம்
காணொளி: செங்கல்பட்டில் விழுந்து நொறுங்கிய விமானப்படை விமானம்
திருப்போரூர் உப்பளம் பகுதிக்கு மேலே நவம்பர் 14-ம் தேதியான இன்று பறந்துகொண்டிருந்த பயிற்சி விமானம் தனியார் ஆலை ஒன்றுக்கு சொந்தமான இடத்தில் விழுந்தது.
இது குறித்து இந்திய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் Pilatus PC-7 எனும் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் விழுவதற்கு முன்பு விமானி பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் விழுந்து நொறுங்கியதின் காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



