You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'வேட்டையன்' என்கவுன்டரை ஆதரிக்கும் படமா? - இயக்குநர் ஞானவேல் பேட்டி
ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேலின் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வியாழக்கிழமையன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்தப் படத்தில் ரஜினி, அமிதாப்பச்சன் தவிர, ராணா டக்குபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரீத்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
வேட்டையன் திரைப்படம் ரஜினியின் 170வது திரைப்படம். இதற்கு முன்பாக அந்தா கானூன், கிராஃப்தார், ஹம் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்த ரஜினியும் அமிதாப் பச்சனும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அந்த ட்ரெய்லரில் காவல்துறையின் மோதல் மரணங்களுக்கு ஆதரவாக சில வசனங்கள் இடம்பெற்றிருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. ஞானவேல் இதற்கு முன்பாக இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிரான குரலாக வெளிப்பட்டது. இந்த நிலையில், வேட்டையன் திரைப்படத்தில் இதுபோன்ற வசனங்கள் இடம்பெற்றிருப்பது, பலரது புருவங்களை உயர்த்தியது.
ஆனால், படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேலிடம் இது குறித்துக் கேட்டால், "படத்தைப் பார்த்துவிட்டு விமர்சித்தால் பரவாயில்லை. ட்ரைலரைப் பார்த்துவிட்டே கேள்விகேட்டால் எப்படி?" என்று கேட்டுச் சிரிக்கிறார். படம் வெளியாக இரு நாட்களே இருக்கும் நிலையில், பெரும் பரபரப்பிற்கு இடையில் பிபிசியிடம் பேசினார் ஞானவேல்.
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)