ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக மொட்டையடித்து இறுதிச்சடங்கு நடத்திய ஒடிஷா கிராமம்

காணொளிக் குறிப்பு, ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக மொட்டையடித்து இறுதிச்சடங்கு நடத்திய ஒடிஷா கிராமம்
ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக மொட்டையடித்து இறுதிச்சடங்கு நடத்திய ஒடிஷா கிராமம்

ஒடிசா ரயில் விபத்து நடந்து 10 நாட்கள் கழிந்துவிட்ட நிலையில், அவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களுக்கு ஈமக்கிரியைகள் செய்யும் வகையிலும், ஜூன் 11ஆம் தேதியான நேற்று பாலாசோரைச் சேர்ந்த மக்கள் கூட்டாக மொட்டையடித்து அருகிலிருந்த நீர்நிலையில் குளித்துச் சடங்குகள் செய்தனர்.

மேலும், விபத்து நடந்து 10 நாட்கள் ஆனதைக்குறிக்கும் வகையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், சமூக அர்வலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் மூன்று நாள் அஞ்சலி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். அதன் ஒரு பகுதியாக இந்த மொட்டையடிக்கும் சடங்கு மேற்கொள்ளப்பட்டது.

ஒடிஷா கிராமம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: