டெல்லி: தடுப்புக் காவலில் இருந்து நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட அபிஜித் திப்கே

காணொளிக் குறிப்பு,
டெல்லி: தடுப்புக் காவலில் இருந்து நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட அபிஜித் திப்கே
பிரசுரிக்கப்பட்டது

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லைவ் லா தகவலின்படி , மூன்று பேரும் டெல்லி கண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இவர்களை விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

மேலும் அடுத்த ஓராண்டுக்கு அமைதி மற்றும் நிம்மதியைக் குலைக்கும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 10ஆம் தேதியன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்காக மும்பையில் இருந்து டெல்லி வந்தபோது விமானத்தில் வைத்தே அதிகாரிகள் இவர்களை தடுப்புக்காவலில் எடுத்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு