பாகிஸ்தான் வெற்றி: ரிஸ்வான், நவாஸ் ஆட்டத்தில் அடங்கியது இந்தியாவின் பந்துவீச்சு

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் இந்திய அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டன.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. விராட் கோலி 60 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டத்தில் எந்தக் கட்டத்தில் உறுதியான ரன்குவிப்பு இல்லை.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 1 பந்து மீதம் இருக்கையில் 182 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லீக் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு இதன் மூலம் பாகிஸ்தான் அணி பதிலடி கொடுத்திருக்கிறது.

பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. கடைசி ஓவரில் இந்தியா வெற்றிபெறக்கூடும் என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது.

4 பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் அர்ஷ்தீப் சிங் வீசிய ஒரு பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. அடுத்த பந்தில் விக்கெட் விழுந்தது. எனினும் அடுத்த பந்தில் இரண்டு ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் இந்திய அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டன.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. விராட் கோலி 60 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டத்தில் எந்தக் கட்டத்தில் உறுதியான ரன்குவிப்பு இல்லை.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 1 பந்து மீதம் இருக்கையில் 182 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லீக் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு இதன் மூலம் பாகிஸ்தான் அணி பதிலடி கொடுத்திருக்கிறது.

பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. கடைசி ஓவரில் இந்தியா வெற்றிபெறக்கூடும் என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

4 பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் அர்ஷ்தீப் சிங் வீசிய ஒரு பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. அடுத்த பந்தில் விக்கெட் விழுந்தது. எனினும் அடுத்த பந்தில் இரண்டு ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்தியாவின் ஆட்டம்

முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மாவாவும் கே.எல். ராகுலும் சீராக ரன்களைக் குவித்தனர். முதல் ஓவரிலேயே மிட்விக்கெட் திசையில் சிக்சரை அடித்து ரோஹித் ஷர்மா ரன் குவிப்பை வேகப்படுத்தினார்.

பதிலுக்கு மூன்றாவது ஓவரில் ராகுல் இரண்டு சிக்சர்களை அடித்தார். ரோஹித் ஷர்மா 28 ரன்களை எடுத்திருந்தபோது ஹேரிஸ் ராஃப் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு வந்த விராட் கோலி மிக மெதுவாகவே ரன்களை எடுக்கத் தொடங்கினார்.

ஆறாவது ஓவரில் ஷதாப் கான் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் வெளியேறியதால் இந்தியா இரண்டு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து சற்று தடுமாறியது. அடுத்து வந்த சூர்ய குமார் யாதவும் 13 ரன்களுக்கு வெளியேறினார்.

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

10 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை எடுத்திருந்தது. கோலியும் ரிஷப் பண்ட்டும் ஆடிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ரன் குவிப்பு வேகம் குறைந்திருந்தது. 14-ஆவது ஓவரில் ஷதாப் கானின் பந்துவீச்சில் ரிஷ்ப் பண்ட் ஆட்டமிழந்தார்.

தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட அவர் வெறும் 14 ரன்களை மட்டுமே எடுத்தார்.

இதற்கு முன் பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் கடைசி ஓவரில் சிக்சர் அடித்து வெற்றிக்கு உதவிய ஹர்திக் பாண்ட்யா இந்தப் போட்டியில் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அது ஆட்டத்தின் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது.

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

தீபக் ஹோடாவும் விராட் கோலியும் 16 மற்றும் 17-ஆவது ஓவர்களில் மிக மெதுவாகவே ரன்களை எடுத்தார்கள். 18-ஆவது ஓவரில் சிக்சர் அடித்து தனது அரைச்சதத்தை கடந்தார் விராட் கோலி. அதைத் தவிர கடைசி 5 ஓவர்களில் சிக்சர் எதுவும் அடிக்கப்படவில்லை.

கடைசி ஓவரில் கோலி சந்தித்த முதல் மூன்று பந்துகளில் ஒரு வைட் தவிர வேறு ரன்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. நான்காவது பந்தில் இரண்டாவது ரன்னுக்கு முயன்ற கோலி ரன் அவுட் ஆனார். 44 பந்துகளில் ஒரு சிக்சர் 4 பவுன்டரிகள் உள்பட 60 ரன்களை அவர் எடுத்திருந்தார்.

அடுத்த இரு பந்துகளையும் ரவி பிஷ்னோய் பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் இந்திய அணி 181 ரன்களை எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் இந்தியாவின் ராகுல், பண்ட் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

காணொளிக் குறிப்பு, ஆசிய கோப்பை கிரிக்கெட்: விராட் கோலி அதிரடியில் வென்ற இந்தியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: