You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய கிரிக்கெட்: சச்சினுக்கு மாற்று விராத் கோலியா?
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று 4 ஆண்டுகள் நிறைவாகிறது. "சச்சினின் இடம் சர்வதேச கிரிக்கெட்டிலும், இந்திய அணியிலும் நிரப்பப்பட்டுள்ளதா? இளைய வீரர்கள் சச்சினை விஞ்சி அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டனரா?" என்று பிபிசி தமிழின் சமூக வலைத்தள நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.
"அது மிகவும் கடினம். விராத் கோலியை அனைவரும் சச்சினின் இடத்தை விரைவில் பிடிப்பார் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் இருவருக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் பொறுமையே. அப்பண்பை அவர் வளர்த்து கொண்டால் அவரது இடத்தை நெருங்க வாய்ப்புள்ளது," என்று கூறியுள்ளார் அபுல் கலாம் ஆசாத் எனும் பிபிசி நேயர்.
"ஆம். விராத் கோலியால் அவரது இடம் நிரப்பட்டுவிட்டது," என்கிறார் சையது ரசூல். அதே கருத்தைக் கூறியுள்ளனர் கவியரசு மாயக்கண்ணன் மற்றும் ரோஷன் ராக் ஆகிய ஃபேஸ்புக் நேயர்கள்.
பலர் அவரைப் பின்பற்றலாம். ஆனால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு அவர் இடத்தை யாரும் பிடிக்க முடியாது என்கிறார் சரவண பிரியன் எனும் ட்விட்டர் பயன்பாட்டாளர்.
"வரலாற்றை திருப்பி பாருங்கள் ஒன்றை விட அடுத்த ஒன்று சிறப்பானதாக வந்துகொண்டுதான் இருக்கிறது. எதுவுமே கிடைக்கும் வாய்ப்புகளை பொருத்துதான்." என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல்.
பிற செய்திகள்:
- குடும்பத்திற்கு உதவ பேருந்தை திருடிய 13 வயது சிறுவன்!
- ஜிம்பாப்வே: ராணுவத்தின் அடுத்த நடவடிக்கை என்ன?; காத்திருக்கும் குடிமக்கள்
- மனிதக் கழிவுகளின் ஆற்றலில் இயங்கும் கழிவறைகள்
- தாயிடமிருந்து பிரிந்த சிறுத்தை குட்டிகள்: மீண்டும் சேர்ந்தது எப்படி?
- கலிஃபோர்னியா: துப்பாக்கிதாரியிடமிருந்து குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்