கவிழும் இரு சக்கர சூட்கேசுகள்: தீர்வு சொல்லும் ஆராய்ச்சி முடிவு?

மிகவும் பாரமான இரு சக்கர சூட்கேசுகளை தூக்கிக் கொண்டு விமானத்தையோ அல்லது ரயிலையோ பிடிப்பதற்கு அவசரமாக பயணம் செய்வதென்பது பொதுவான ஓர் அனுபவம்தான்.

அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது சூட்கேசுகள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு ஆட்டம் கண்டு, கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால், அன்றாட வாழ்வில் நடக்கும் இந்த இயற்பியல் சார்ந்த புதிரை ஆராய்ந்த விஞ்ஞானிகள் சூட்கேசின் வேகத்தை குறைப்பதைவிட, அதனை அதிகப்படுத்துவது இந்த சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு மாறாக, தரைக்கு சற்று நெருக்கமாக சூட்கேசின் கைப்பிடி இருக்கும் வகையில் மையமாக நகர்த்திச் செல்வதன் மூலமும் இதனை சரி செய்ய இயலும்.

அதிகப்படியான வேகத்தில் சூட்கேஸ் எவ்வாறு தனது கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதை சோதனை செய்ய பிரெஞ்ச் விஞ்ஞானிகள் ஒரு மாதிரி சூட்கேசை ட்ரெட்-மில்லில் வைத்து ஆய்வு நடத்தினர்.

மேலும், இரு சக்கர சூட்கேஸ்களில் உள்ள சக்கரங்கள் எவ்வாறு தடுமாறுகின்றன என்பதை விளக்குவதற்கு சமன்பாடுகளையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

சாதரணமாக பக்கவாட்டில் சுழலும் செயல்பாடு உருவாகும் நிலையில், அவைகளை வேகமாக இழுத்துச் சென்றால் குறைவான சுழற்சிகளே உருவாவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வேகத்தை குறைப்பதை விட அதை அதிகப்படுத்துவதன் மூலம் சுழற்சிகளை கட்டுப்படுத்த இயலும் என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

" ஆனால், இதுபோன்ற சூட்கேஸ்களை பயன்படுத்திய அனுபவம் இல்லாதவர்களால், இந்த வழிமுறைகளை கடைபிடிக்க இயலாமலும் போகலாம். சூட்கேஸ்களை இழுக்கும் போது இது பெரிய விளைவுகளை உருவாக்காது . ஆனால், அதேசமயம் சூட்கேஸ்களை சுமந்து செல்லும் வாகனமான ட்ராலிகளை இயக்கும் போது இது தொந்தரவாக அமையும்".

HRoyal Society Proceedings A. என்ற இதழில் வெளியாகியுள்ள இந்த ஆராய்ச்சி முடிவுகளில் முக்கியமான பொருள் இருக்கிறது.

"சூட்கேஸ் உதாரணம் ஒரு வேடிக்கையான வழிமுறையாக இருந்தாலும், இரண்டு சக்கரங்களைக் கொண்ட ட்ராலிகள் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களுக்கும் இதே ஆய்வு முறைதான் உள்ளது" என்று ஆய்வை மேற்கொண்டவரும் பாரிஸ்-டைடெரோட் பல்கைலைக்கழத்தைச் சேர்ந்தவருமான சில்வையன் கோரச் டூ பாண்ட் பிபிசியிடம் தெரிவித்தார்.

" ஆகையால், விமானம் மற்றும் கேரவன் போன்ற வாகனங்களுக்கும் இதே நடைமுறைதான் " என்றும் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம், அன்றாட வாழ்வில் ஏற்படும் மற்றொரு இயற்பியல் சார்ந்த பிரச்சனையான சூ லேசஸ் ( shoe laces ) தளர்வதில் உள்ள புதிருக்கான தீர்வையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

பாதங்கள் தரையில் ஏற்படுத்தும் அழுத்தம் சூ லேசில் உள்ள முடிச்சுகளை தளர்த்துகின்றன என்றும், அதேசமயம் காலின் சுழற்சியினாலும் முடிச்சுகள் தளர்கின்றன என்றும் கண்டறிந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்