"தாஜ்மஹால் பாதுகாக்கப்பட வேண்டும் அல்லது மூடப்பட வேண்டும். அதற்கு பிறகும் பிரச்சனை சரியாகாவிட்டால்,அது தகர்க்கப்பட வேண்டும்..."
தாஜ்மஹாலின் நிலைமை தொடர்ந்து மோசமாவதைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் இத்தகைய கடுமையான அவதானிப்பை வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
17ஆம் நூற்றாண்டின் இந்த அற்புதமான பாரம்பரிய சின்னத்தை காப்பாற்றுவதற்காக, நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர் விசாரணை மேற்கொண்டது. எனவே, “உலகின் மிக நேர்த்தியான கட்டடம் ஆபத்தை எதிர்கொள்கிறதா?”என்ற கேள்வி நம் முன் எழுகிறது. தாஜ்மஹாலின் பாதுகாப்பு தொடர்பான ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதா? தாஜ்மஹால் சேதமடைந்துவிடுமா?அழிந்துவிடுமா?
இந்த கேள்விகள் எழுவதற்கு அடிப்படையாக இருப்பது தாஜ்மஹாலை சுற்றியிருக்கும் பகுதியில் தொடர்ந்து அதிகரித்துவரும் காற்று மற்றும் நீர் மாசுபாடுதான்.
பளிங்கு கற்களால் கட்டப்பட்டு பிரகாசிக்கும் தாஜ்மஹால், தற்போது ஒளியை இழந்து வருகிறது. ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட மிகவும் விலையுயர்ந்த பளிங்குக் கற்களால் தாஜ்மஹாலை கட்டமைத்தார் முகலாய பேரரசர் ஷாஜகான். இந்த பளிங்கு கற்கள், காலையில் இளஞ்சிவப்பு நிறத்திலும், பிற்பகலில் வெண்மையாகவும், மாலையில் பால் வண்ணத்திலும் தோன்றும் சிறப்புடையது.
ஆனால் அதிகரிக்கும் மாசு, அனைத்தையும் மாற்றிவிட்டது.கட்டடத்தின் பிரகாசம் மங்கிவிட்டது.
தாஜ்மஹாலின் அஸ்திவாரம் பலவீனமாகிவிட்டது. ஷாஜகானின் காலத்தில் உருவாக்கப்பட்ட தாஜ்கஞ்ச் பகுதியும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.
தாஜ்மஹாலில் ஏற்கனவே ஏற்படத் தொடங்கிய விரிசல்கள், தற்போது மிகவும் ஆழமாகி வருகின்றன.தாஜ்மஹாலின் சிறப்பம்சங்களில் ஒன்றான தூண்களின் மேற்பகுதிகள் உடைந்துவிழும் நிலையில் உள்ளன. தாஜ்மஹாலில் ஏற்படும் விரிசல்களை மூடி, பழுதுபார்க்கும் பணிகளும் போதுமான அளவு மேற்கொள்ளப்படவில்லை.
'காதல் சின்னம்' என்று அழைக்கப்படும் தாஜ்மஹாலை பாதுகாக்கும் முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படாவிட்டால், அதில் ஏற்பட்டிருக்கும் பிளவுகள் மேலும் ஆழமாகலாம், அது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என சுற்றுச்சூழல் நிபுணர்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும், இந்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் எச்சரிக்கின்றனர்.

இந்த வரலாற்று கட்டடம் புகைப்படங்களில் வெறும் நினைவுகளாக மட்டுமே தங்கிவிடுமோ என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
‘ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதி அல்ல’ என மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஏற்கனவே கூறிவிட்டார். அவரது இந்த கருத்து, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் கட்டடங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தாஜ்மஹாலை பாதுகாப்பதில் உத்தரபிரதேச மாநில் அரசு எந்த அளவு அக்கறை கொள்ளும் என்ற கவலையை அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. உலக பாரம்பரிய கட்டடங்களின் பட்டியலை 'யுனெஸ்கோ' இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கிறது.
ஆக்ரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் இருந்து பல தசாப்தங்களாக வெளியேறும் புகை, தூசு மற்றும் கழிவு வெளியேற்றங்களால் யமுனை நதி வடிகாலாக மாறிவிட்டது. இதுவும் தாஜ்மஹாலின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
இவை அனைத்தும் திடீரென்று தொடங்கவில்லை.1970களில் இந்திய எண்ணெய் நிறுவனம் ஐ.ஓ.சி தனது முதல் சுத்திகரிப்பு ஆலையை மதுராவில் தொடங்கிய போது, தாஜ்மஹால் மீது முதன்முறையாக மாசு தாக்குதல் நடைபெற்றது. இந்த தொழிற்சாலையால் தாஜ்மஹால் நேரடியாக பாதிக்கப்பட்டது.
1982 ஆம் ஆண்டில், 10,400சதுர கிலோமீட்டர்களுக்கு மேல் தாஜ் வலய மண்டலம் (Taj Trapezium) உருவாக்கப்பட்டது.ஆக்ராவைச் சுற்றி அமைந்துள்ள அனைத்து மாசுபடுத்தும் தொழிற்சாலைகளையும், குறிப்பாக தாஜ்மஹாலை சுற்றியுள்ள ஆலைகளை மூடவேண்டும் என உத்தரவிடப்பட்டது.தாஜ் வலய மண்டலத்தில், மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டன.
அதன்பிறகும்கூட நிலைமையில் பெரிய அளவில்மாறுதல்கள் ஏற்படாததால், பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் எம்.எஸ். மெஹ்தா, 1984ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். பிறகு உச்ச நீதிமன்றத்தையும் அணுகினார். பல்வேறு முகமைகளை கொண்டு கணக்கெடுப்பு ஒன்றை நடத்திய உச்ச நீதிமன்றம், அவற்றை பகுப்பாய்வு செய்த பின்னர், 1996 ஆம் ஆண்டில் ஆக்ரா நகரில் டீசலால் இயங்கும் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கு தடை விதித்தது.
யமுனை ஆற்றில் விலங்குகளை குளிப்பாட்டுவது, துணி துவைப்பது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. தோல்பதனிடும் மற்றும் சாயம் ஏற்றும் தொழிற்சாலைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. அனைத்து தொழிற்சாலைகளும் எரிவாயுவை பயன்படுத்தவேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டு, நிலக்கரி பயன்பாடும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
1996ஆம்ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் இந்த ஆணையைவழங்கிவிட்டது. அதன்பிறகுதற்போது 22 வருடங்கள் கழித்தும் ஆக்ரா மற்றும் குறிப்பாக தாஜ்மஹாலின் சுற்றுப்புறங்களில், மாசுபாடு ஆபத்தான நிலைக்கு அதிகரித்துள்ளது.
இது பற்றி பிபிசியிடம் பேசிய மெஹ்தா, உச்ச நீதிமன்றத்தின்1996ஆன் ஆண்டு ஆணையை சரிவர நிறைவேற்றியிருந்தால், பலமாற்றங்களை கொண்டு வந்திருக்கலாம் என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.ஆனால் அது நடக்கவில்லை, எனவே அவர் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார்.
யமுனை நதியே மாசுபாட்டை ஏற்படுத்தும் மிகப் பெரிய காரணியாக மாறிவிட்டதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கருதுகின்றனர். சுற்றுச்சூழல்வாதியான பிரிஜ் காண்டெல்வால், யமுனைநதியின் மாசுபாடு தொடர்பான பிரச்சனைகளை முன்வைத்து போராடி வருகிறார்.
பரந்து ஓடும் யமுனா, ஆக்ராவை வந்தடையும்போதுஒரு கால்வாய் போல சுருங்கி விடுகிறது. அதனால், அதன்நீரோட்டம் அங்கேயே தடைபட்டு ஆறு, குட்டையாக தங்கிவிடுகிறது. டெல்லி முதல் ஆக்ரா வரை, ஆற்றின் கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை நேரடியாக யமுனாவில் கொட்டுகின்றன.இது மட்டுமல்ல, ஆக்ரா நகரின் கழிவுகள் அனைத்தும், சுத்திகரிக்கப்படாமல், நேரடியாகயமுனையில் கலக்கிறது. இதன் மாசுஅளவீடு 90 என்பதுநிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
"யமுனா நதி வறண்டுபோவதால், தாஜ்மஹால் மீது காற்றுடன் கலந்து தூசிகளும், மாசும் படிகின்றன. இதைத்தவிர, ஆக்ராவின் குப்பைகள் அனைத்தும் யமுனை நதிக்கரையில் கொட்டப்படுகின்றன. இது கொசுக்களையும், பிறபூச்சிகளையும் உற்பத்தி செய்கின்றன. அவைஅனைத்தும் தாஜ்மஹாலின் பளிங்கு வண்ணத்தை மங்கச் செய்கின்றன. இங்கு வரும் ஒரு வகையான பூச்சி, தாஜ்மஹாலின் மீது விட்டுச் செல்லும் அழுத்து பளிங்கு கற்களை பச்சை நிறமாக மாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது" என்கிறார்கண்டேல்வால்.

தாஜ்மஹாலின் வெளிப்புற சுவற்றின் அருகே இருக்கும் சுடுகாட்டில் தினசரி தோராயமாக 20 சடலங்கள் எரிக்கப்படுகின்றன. அதன் புகை, தாஜ்மஹாலின் பிரதான கட்டடத்தை நேரடியாக தாக்குகிறது.
தாஜ் மஹாலின் அஸ்திவாரத்தில் 180 கிணறுகளும் மரத் தளங்கள் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தாஜ்மஹாலின் குவிமாடத்தின் எடை மட்டுமே 12,500டன் என்று கூறப்படுகிறது.
இதன் பொருள் கட்டிடத்தின் அடித்தளம் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும் என்பதே.
தாஜ்மஹாலின்குவிமாடம் மட்டும் 12,500 டன்கள் என்றால், அதன் மொத்த எடையும் என்னவாக இருக்கும் என்பதை கணித்துப்பாருங்கள்.”
"குவிமாடத்தின் எடை மட்டுமே 12,500 டன்கள் என்றால், தாஜ்மஹாலின் மொத்த எடையின் அடிப்படையில், பிரம்மாண்டமான இந்த கட்டடத்தின் அடித்தளம் எப்போதும் வலுவாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
பெரும்பாலான முகலாய கட்டடங்கள் பசுமையான பூங்காவிற்குள் அமைக்கப்பட்டிருக்கும் என்பதை தன்னுடைய புத்தகத்தில் சுட்டிக்காட்டுகிறார் சரித்திரத்துறை பேராசிரியர் ராம்நாத். ஆனால், தாஜ்மஹால் அமைக்கப்பட்டிருப்பது ஒரு பூங்காவின் மையத்தில் அல்ல, ஒரு மூலையில் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு காரணம், கட்டடத்தின் அடித்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளுக்கும், தேக்கு மரங்களுக்கும் ஆண்டு முழுவதும் நீர் வழங்குவதுதான்.
தண்ணீர் கிடைக்காமல் தாஜ்மஹாலின் அடித்தளம் உலர்ந்து போனால், விட்டால், அஸ்திவாரத்தில்அமைக்கப்பட்டுள்ள தேக்குமரங்கள் உலர்ந்துபோகலாம். அது, 'காதல் சின்னத்தின் மீதான' விரிசலை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
17ஆம் நூற்றாண்டில் நெடுஞ்சாலைகள் இல்லாதிருந்ததால்,வணிகத்திற்கும், பயணத்திற்கும்யமுனை நதியே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. எனவே, ஆக்ரா சில நேரங்களில் 'வெனிஸ் நகரம்' என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் நாளடைவில் மக்கள்தொகையும், தொழிற்சாலைகளும்பெருகியது. யமுனை நதியில் அணைகளும், தடுப்புகளும் கட்டப்பட்டன. ஹரியானாவின் ஹதினிகுண்ட் மற்றும் மதுராவின் தடுப்பணை ஆகியவற்றை உதாரணமாக சொல்லலாம்.
டெல்லியிலிருந்து ஆக்ரா வரை விரிந்திருக்கும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளும், பட்டறைகளும் வெளியிடும் கழிவுகளும் குப்பைகளும்சுத்திகரிக்கப்படாமல் யமுனையில் கலக்கின்றன. அவை தாஜ்மஹால் அருகே வந்து குவிகின்றன.
தாஜ்மஹால் காப்பாற்றப்பட வேண்டுமானால், யமுனை நதிமுதலில் பாதுகாக்கப்படவேண்டும். அது தனது பழைய வடிவிற்கு கொண்டு செல்லபடவேண்டும் என பிரிஜ் கண்டேல்வால் கூறுகிறார். யமுனை நதியில் இருந்து தாஜ்மஹாலுக்கு உண்டான தண்ணீரின் பங்கும் கொடுக்கப்படவேண்டும், அதற்கானஒதுக்கீட்டையும் தீர்மானிக்க வேண்டும் என்று பிரிஜ் கண்டேல்வால் கூறுகிறார்.
மாசுபாட்டின் காரணமாக தாஜ்மஹாலின் சேதமடைந்த அல்லது சிதைந்த கற்களை இந்திய தொல்பொருளியல் துறை சரிசெய்ய வேண்டும். இந்த வேலை பல தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது. தாஜ்மஹாலின் அசல் நிறத்தை மீட்டெடுக்க ரசாயன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தொல்பொருளியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஆர்.கே. தீக்ஷித் கூறுகிறார். இதன் மூலம், தாஜ்மஹால் மீது மாசுபாட்டின் தாக்கத்தை குறைக்கவும், பிரகாசத்தை மீட்டெடுக்கும் வகையில், கட்டடத்தின் வெளிப்புற சுவர்களில் பிரத்யேக ரசாயன பூச்சு பூசப்பட்டதாகஅவர் தெரிவிக்கிறார்.
ஆனால் சுற்றுச்சூழல்வாதிகளின் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ரசாயன பூச்சிடும் பணி நிறுத்தப்பட்டது. தாஜ்மஹாலில்பூசப்படும் ரசாயன பூச்சின் காரணமாக அது பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் நிறம் முன்பை விட துரிதமாக மங்கத் தொடங்கிவிட்டதாக சுற்றுச்சூழல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
பெருமளவிலான சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலுக்கு சுற்றுலா வருவதை இரண்டாவது காரணமாக கூறலாம். அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வருவதால் ஈரப்பதம் அதிகரிப்பதும் பளிங்கு கற்கள் பாதிக்கப்படுவதற்குகாரணமாகிறது.
ரசாயன பூச்சுக்கு எழுந்த எதிர்ப்பிற்கு பிறகு, தொல்பொருள் துறை, தற்போது மண் பூச்சை பயன்படுத்துகிறது; ஆனால்இதுவும் சுற்றுச்சூழல் நிபுணர்களுக்குதிருப்தியளிக்கவில்லை. மண் பூச்சு பளிங்கு கற்களுக்கு மேலும் மோசமான சேதத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.ராஜஸ்தானில் இருந்து வரும் தூசிப்புயலை பளிங்கு கற்களால் தாங்கமுடிவதில்லை.
பாலைவனம் ஆக்ரா நோக்கிய திசையில் விரைவாக விரிவடைகிறது, நகரம் முழுவதும் தடிமனான மரங்களை அமைப்பதுதான் அதை தடுத்து நிறுத்த ஒரே வழி.
தாஜ்மஹால் மற்றும் ஆக்ராவின் பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதற்கான கடமைப் பொறுப்பை உச்ச நீதிமன்றம் மூலம் ஆக்ராவின் ஆணையர் கே. மோகன் ராவிடம் ஒப்படைத்துள்ளது. அவர் தனது அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார். அவர் தாஜ் வலய மண்டலத்தின் தலைவர் ஆவார்.
தாஜ்மஹாலின் சேதத்திற்கு மிகப்பெரிய காரணம் யமுனையில் கலக்கும் தொழிற்சாலைகளின் கழிவுநீர் குழாய்கள் மற்றும் நகரின் வீடுகளில் இருந்து வெளிவரும் குப்பையும் கழிவுநீரும் என்பதை ராவ் ஒப்புக்கொள்கிறார். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், கழிவுப்பொருட்களை நிர்வகிப்பதற்காக, பல குழுக்களை நிர்வாகம் அமைத்திருப்பதாக அவர் கூறுகிறார். இதைத்தவிர, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளும் நிறுவப்பட்டுள்ளன. நகரில் இருந்து நதியில் கலக்கும் கழிவு நீரில் இருந்து குப்பைகளையும், மலத்தையும் இது சுத்திகரிக்கிறது. "இந்த முயற்சிகளைத் தவிர ஆக்ராவை ஸ்மார்ட் நகரமாக தரம் உயர்த்தும் முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம், எங்களது இந்த முயற்சிகள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும்."
ஆக்ராவை சுற்றி மரங்கள் நடுவதும், ஸ்மார்ட் நகரம் பரிந்துரை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, அதனால்ராஜஸ்தானின் பாலைவனங்கள் ஆக்ராவைநோக்கி விரிவடைவது தடுக்கப்படும். உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 'விஷன் ஆவணத்தில்' அரசு இதை கூறியிருக்கிறது.
ஆனால், உள்ளூர் மக்கள், ஆக்ராவை ஸ்மார்ட் நகரமாக மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு எதிர்ப்புதெரிவிக்கின்றனர். ஒரு நகரத்தை ஸ்மார்ட் நகரமாக மாற்றுவது தவறு என்று அவர்கள் நம்புகின்றனர். பாரம்பரிய சின்னமாக அடையாளப்படுத்தப்படும்ஆக்ரா, அதன் தனித்தன்மையை இழந்துவிடும் என்று நம்பப்படுகிறது. நகரின் பாரம்பரியத்தை காப்பாற்றினால் போதும், மற்றவைதானாகவே பாதுகாக்கப்படும் என்று சொல்கிறார் காண்டெல்வால்.
ஆக்ரா நகரம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது முகலாய காலத்து ஆக்ரா, இரண்டாவது பிரிஜ் பூமி மற்றும் மூன்றாவது பிரிட்டிஷ் ஆக்ரா. இந்த மூன்று பகுதிகளுக்கும் அவற்றின் தனிப்பட்ட அடையாளங்கள் உள்ளன. இந்த மூன்றுமே தனித்துவமான பாரம்பரியங்களை கொண்டுள்ளன. எனவே மொத்தப் பகுதியையும் பாதுகாப்பது மாபெரும் சவாலாக உள்ளது.
ஆக்ராவில் இருந்து ஏராளமான செல்வங்களை ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்திருந்தாலும், அவர்கள்தாஜ்மஹாலுக்கு செய்த நன்மைகளும் அதிகம்என வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர்.உதாரணமாக, பிரதான வாயிலின் நுழைவாயிலுக்கு அடுத்ததாக இருக்கும் நீரூற்றுகளும், அங்கு பதிக்கப்பட்டிருக்கு சிவப்பு மணற்கற்களும் லார்ட் கர்சனால் கட்டப்பட்டது.ஆங்கிலேயர் இல்லாவிட்டால், ஒருவேளை தாஜ்மஹால் மேலும் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.தாஜ்மஹால் மற்றும் பிற பாரம்பரியங்களை ஆங்கிலேயர்கள் 1920ஆம் ஆண்டிலிருந்து பாதுகாக்க துவங்கினார்கள்.
இதை நிரூபிக்க பல கல்வெட்டுகள் உள்ளன.
தாஜ்மஹால் வளாகத்திற்குள் தாஜ்கஞ்ச் அமைந்துள்ளது.தாஜ்மஹாலை உருவாக்க உழைத்த கலைஞர்கள் வகிக்கும் காலனியாக இருந்த இங்கே, இப்போது அவர்களின் சந்ததியினர் இங்கே வாழ்கின்றனர்.தாஜ்குஞ்சில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் உயிருள்ள பாரம்பரியம் என உச்ச நீதிமன்றம் கருதுகிறது.
அதேபோல் அங்கு இருக்கும் கட்டடங்களும் அதில் குடியிருப்பவர்களும் தாஜ்மஹால் போன்ற பாரம்பரியத்தை கொண்டவர்கள். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் முடிவு இங்கு வசிப்பவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. ஏனென்றால் பாதுகாப்பு என்ற பெயரால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் குமாஸ்தாக்களே அவர்கள் மீது சுமத்துகிறார்கள்.
பாரம்பரிய அந்தஸ்து உள்ளதால், அவரது வீட்டின் ஒரு சிறிய பகுதி பழுதடைந்தால்கூட அதிகாரிகளின் அனுமதியில்லாமல் பழுதுநீக்க முடியாது என்கிறார் தாஜ்குஞ்ச் பகுதியில் குடியிருக்கும் சந்தீப் அரோரா. அங்கு வசிப்பவர்கள் டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்த முடியாது, அதே நேரத்தில் ஆக்ராவின் மற்ற பெரிய ஹோட்டல்களில் பெரிய டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
"டீசல் வாகனங்களை தடை செய்த உச்ச நீதிமன்றம், தாஜ்கஞ்ச் பகுதியில் வசிப்பவர்கள் அதனால் சிக்கலை எதிர்கொள்ளாமல் இருக்கடீசல் வாகனங்களை பயன்படுத்தும் அனுமதி சீட்டு (பாஸ்) வழங்குமாறுஉத்தரவிட்டிருந்தது. அனுமதிசீட்டு வாங்குவதற்காக நாங்கள் போக்குவரத்துத் துறையை அணுகியபோது, குடியிருப்புபகுதியில் வசிக்கும் மக்களுக்கு 170 பாஸ்களும், அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு5000க்கும் அதிகமான பாஸ் வழங்கப்பட்டது தெரியவந்தது. அவர்கள் தாஜ் மஹாலின் நுழைவாயில் வரை டீசல் வாகனங்களில் வந்துஇறங்குகிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது."
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் இருந்து வசூலிக்கும் மிகையான கட்டணத்தைபெற்றாலும், அவர்களுக்குதேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஒருமுறைஇங்கே வந்து சிரமங்களை எதிர்கொண்டால், மீண்டும் இங்கே வரக்கூடாது என்று அவர்கள் முடிவு செய்திறார்கள் என்று சொல்கிறார் சந்தீப்.
தன்னுடைய பொழிவை மிக வேகமாக இழந்து வருகிறது என்பதும்குறிப்பிடத்தக்கது. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் பெருமை பெற்றதுதாஜ்மஹால் என்பது அது எதிர்கொள்ளும் இரண்டாவது சவால். தற்போது அந்த பெருமையை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பும் குறைந்துவருவது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைக்கு மத்திய அரசு, உத்திரப் பிரதேச மாநில அரசு மற்றும் தொல்பொருளியல் துறை ஆகியவையே காரணம்."
தாஜ்மஹால் வீழ்ந்துவிடாமல் தடுப்பதே மிகப்பெரிய சாதனை என்று அவர் கூறுகிறார். தாஜ்மஹாலின்அஸ்திவாரம் நாள்தோறும் பலவீனமாகிக் கொண்டே செல்கிறது. பிரதான கட்டடத்தில் தொடர்ந்து ஏற்படும் விரிசல்கள், தாஜ்மஹால் சரித்திரத்தின் ஒரு அத்தியாயமாகவே எஞ்சிவிடும் நாட்கள்வெகுதொலைவில் என்பதை கட்டியம் கூறுவதாக தோன்றுகிறது.
காதல் சின்னம், பளிங்குக் கல்அற்புதம், கலை பொக்கிஷம், நாட்டின் அடையாளம்என பல்வேறு அடைமொழிகளை கொண்ட ‘தாஜ்மஹால்’ காப்பாற்ற வேண்டியநேரத்தை நாம் கைநழுவவிட்டோம் என்று ஆதங்கப்படுகிறார் மேத்தா. தனது எண்ணம்பொய்த்துபோகவேண்டும் என்று விரும்புவதாக அவர் துயரத்துடன் கூறுகிறார்.
"பச்சிக்கர் வர்க்கத்த்தை சேர்ந்தவர்கள் இங்கே வசிக்கிறார்கள், இவர்களின் முன்னோர்கள் தாஜ்மஹால் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டனர். தற்போது இவர்கள்தான் தாஜ்மஹாலில் நீங்கள் காணும் சிற்பங்களைக் கையாளும் கைவினைஞர்கள். தாஜ்மஹாலை யார் காப்பாற்றுவது?என்ற கேள்விக்கு இந்த கைவினை கைவினைஞர்கள் மட்டுமே காப்பாற்றுவார்கள் என்ற பதிலைச் சொல்லலாம். ஆனால் அவர்களின் பாரம்பரியக் கலைகளை காப்பாற்றவோ, பிறருக்கு இந்த கலைகளை கற்பிக்கவோ அரசு எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை."
இதுபோன்ற பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு, தாஜ்மஹால் பாதுகாக்கப்படுகிற விதம் பற்றி தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆர்.கே. திக்ஷித் கூறுவது என்ன தெரியுமா? காலம் துரிதமாக கடந்துக் கொண்டேயிருப்பதைப் பற்றி குறிப்பிடும் அவர், நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் எதையுமே விட்டுச் செல்லமாட்டோம் என்று கவலைப்படுகிறார்.
தாஜ்மஹாலை பாதுகாப்பதற்காக 1984ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் சட்ட போராட்டங்களை நடத்திவரும் வழக்கறிஞர் எம்..சி. மேத்தாவுக்கும் தற்போது அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றும் அது அமல்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் பிரகாசமாக இல்லை என்று வருந்துகிறார் எம்.சி. மேத்தா.
மேத்தாவின் கருத்துப்படி: "தாஜ்மஹாலை உலக பாரம்பரியமாக வைத்திருப்பதே முதல் சவால். ஏனென்றால் யுனெஸ்கோ குழு பாரம்பரிய கட்டடங்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறது என்பதும், தாஜ்மஹால் தன்னுடைய பொழிவை மிக வேகமாக இழந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் பெருமை பெற்றது தாஜ்மஹால் என்பது அது எதிர்கொள்ளும் இரண்டாவது சவால். தற்போது அந்த பெருமையை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பும் குறைந்துவருவது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைக்கு மத்திய அரசு, உத்திரப் பிரதேச மாநில அரசு மற்றும் தொல்பொருளியல் துறை ஆகியவையே காரணம்."
தாஜ்மஹால் வீழ்ந்துவிடாமல் தடுப்பதே மிகப்பெரிய சாதனை என்று அவர் கூறுகிறார். தாஜ்மஹாலின் அஸ்திவாரம் நாள்தோறும் பலவீனமாகிக் கொண்டே செல்கிறது. பிரதான கட்டடத்தில் தொடர்ந்து ஏற்படும் விரிசல்கள், தாஜ்மஹால் சரித்திரத்தின் ஒரு அத்தியாயமாகவே எஞ்சிவிடும் நாட்கள் வெகுதொலைவில் என்பதை கட்டியம் கூறுவதாக தோன்றுகிறது.
காதல் சின்னம், பளிங்குக் கல் அற்புதம், கலை பொக்கிஷம், நாட்டின் அடையாளம் என பல்வேறு அடைமொழிகளை கொண்ட ‘தாஜ்மஹால்’ காப்பாற்ற வேண்டிய நேரத்தை நாம் கைநழுவவிட்டோம் என்று ஆதங்கப்படுகிறார் மேத்தா. தனது எண்ணம் பொய்த்துபோகவேண்டும் என்று விரும்புவதாக அவர் துயரத்துடன் கூறுகிறார்.









