ஒரே ஒரு வெட்டுக்கிளி எப்படி அழிவை உருவாக்குகிறது?
பாலைவன வெட்டுக்கிளிகள் பெருந்திரளாக, ஆப்பிரிக்காவின் கொம்பு என்று குறிப்பிடப்படும் பகுதியில், பயிர்கள், உணவு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியபடி ஊடறுத்து செல்கின்றன. கடந்த கால்-நூற்றாண்டில் இதுவே மிகவும் மோசமான பாதிப்பாகும். இது இவ்வளவு மோசமானது ஏன்?

இதைப் போன்ற பாலைவன லோக்கஸ்ட் வெட்டுக்கிளி- சாதாரணமாக ஒதுங்கி, தனிமையில் வாழக் கூடியது. முட்டையில் இருந்து வெளியாகி, வளர்ந்து பறக்கத் தொடங்குகிறது. அது எளிமையான, குறிப்பிடும்படி அல்லாத, வாழ்க்கை.

இந்த பாலைவன வெட்டுக் கிளிகளுக்கு இரண்டு முகங்கள் உண்டு. கூட்டமாக சேரும் போது, தனிமை நிலை மாறி, `கூடி வாழும்' சிறிய வேட்டை விலங்குகள் போல மாறிவிடுகின்றன. பசுமைவெளிகள் குறைவது போன்ற சூழல்களில் இது நடக்கிறது.
புதிதாக ஒன்று சேரும் இந்த வெட்டுக் கிளிகள், குணத்தை மாற்றிக் கொண்டு, குழுக்களாக சேர்ந்து, பெரும் பசி கொண்ட, கூட்டமாக பறந்து செல்லும் படையைப் போல செயல்படுகின்றன.
வெட்டுக் கிளிகளின் இதுபோன்ற கூட்டங்கள் பெரியதாக இருக்கலாம். ஒரு கூட்டத்தில் 10 பில்லியன் வெட்டுக்கிளிகள் கூட இருக்கலாம். அவை சில கிலோமீட்டர் பரப்புக்கு கூட்டமாக பறந்து செல்லும். ஒரு நாளில் அவை 200 கிலோமீட்டர் (120 மைல்கள்) வரை பறந்து செல்லும். பசி வெறியில் இருக்கும் அந்த வெட்டுக் கிளிகள், கிராமப்புற உணவு ஆதாரங்களை, நாசமாக்கிக் கொண்டு, இனப்பெருக்கம் செய்து கொண்டே செல்லும்.
நடுத்தர எண்ணிக்கையில் கூட்டமாக செல்லும் வெட்டுக் கிளிகள் கூட 2,500 பேருக்கு ஓராண்டுக்கு பயன்படக் கூடிய உணவை அழித்துவிடும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
கடைசியாக 2003-2005 காலத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் இந்த லோக்கஸ்ட் வகை வெட்டுக் கிளிகள் கூட்டம் பெருகியபோது 2.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பயிர்கள் நாசமாயின என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
1930கள், 1940கள் மற்றும் 1950களிலும் பெருமளவில் பயிர்கள் நாசம் செய்யப்பட்டுள்ளன. சில நேரம் பல பகுதிகளையும் பாதித்து "பெருவாரி பாதிப்பு" என அறிவிக்கும் சூழ்நிலை கூட உருவாகியுள்ளது.
உலகில் பத்தில் ஒருவரது வாழ்வாதாரத்தை பாலைவன லோக்கஸ்ட் வெட்டுக்கிளிகள் அழிக்கின்றன. இதனால் உலகின் மிக மோசமான வலசை போகும் பூச்சியினமாகிறது இது என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதைப் போன்ற பாலைவன லோக்கஸ்ட் வெட்டுக்கிளி- சாதாரணமாக ஒதுங்கி, தனிமையில் வாழக் கூடியது. முட்டையில் இருந்து வெளியாகி, வளர்ந்து பறக்கத் தொடங்குகிறது. அது எளிமையான, குறிப்பிடும்படி அல்லாத, வாழ்க்கை.
இந்த பாலைவன வெட்டுக் கிளிகளுக்கு இரண்டு முகங்கள் உண்டு. கூட்டமாக சேரும் போது, தனிமை நிலை மாறி, `கூடி வாழும்' சிறிய வேட்டை விலங்குகள் போல மாறிவிடுகின்றன. பசுமைவெளிகள் குறைவது போன்ற சூழல்களில் இது நடக்கிறது.
புதிதாக ஒன்று சேரும் இந்த வெட்டுக் கிளிகள், குணத்தை மாற்றிக் கொண்டு, குழுக்களாக சேர்ந்து, பெரும் பசி கொண்ட, கூட்டமாக பறந்து செல்லும் படையைப் போல செயல்படுகின்றன.
வெட்டுக் கிளிகளின் இதுபோன்ற கூட்டங்கள் பெரியதாக இருக்கலாம். ஒரு கூட்டத்தில் 10 பில்லியன் வெட்டுக்கிளிகள் கூட இருக்கலாம். அவை சில கிலோமீட்டர் பரப்புக்கு கூட்டமாக பறந்து செல்லும். ஒரு நாளில் அவை 200 கிலோமீட்டர் (120 மைல்கள்) வரை பறந்து செல்லும். பசி வெறியில் இருக்கும் அந்த வெட்டுக் கிளிகள், கிராமப்புற உணவு ஆதாரங்களை, நாசமாக்கிக் கொண்டு, இனப்பெருக்கம் செய்து கொண்டே செல்லும்.
நடுத்தர எண்ணிக்கையில் கூட்டமாக செல்லும் வெட்டுக் கிளிகள் கூட 2,500 பேருக்கு ஓராண்டுக்கு பயன்படக் கூடிய உணவை அழித்துவிடும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
கடைசியாக 2003-2005 காலத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் இந்த லோக்கஸ்ட் வகை வெட்டுக் கிளிகள் கூட்டம் பெருகியபோது 2.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பயிர்கள் நாசமாயின என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
1930கள், 1940கள் மற்றும் 1950களிலும் பெருமளவில் பயிர்கள் நாசம் செய்யப்பட்டுள்ளன. சில நேரம் பல பகுதிகளையும் பாதித்து "பெருவாரி பாதிப்பு" என அறிவிக்கும் சூழ்நிலை கூட உருவாகியுள்ளது.
உலகில் பத்தில் ஒருவரது வாழ்வாதாரத்தை பாலைவன லோக்கஸ்ட் வெட்டுக்கிளிகள் அழிக்கின்றன. இதனால் உலகின் மிக மோசமான வலசை போகும் பூச்சியினமாகிறது இது என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
| ஆண்டு | மந்த நிலை | அதிகரித்தது அல்லது சரிவு | பெருவாரி |
| 2019 | 0 | 18 | 0 |
| 2018 | 0 | 0 | 0 |
| 2017 | 0 | 0 | 0 |
| 2016 | 5 | 0 | 0 |
| 2015 | 2 | 0 | 0 |
| 2014 | 7 | 0 | 0 |
| 2013 | 10 | 0 | 0 |
| 2012 | 9 | 0 | 0 |
| 2011 | 7 | 0 | 0 |
| 2010 | 4 | 0 | 0 |
| 2009 | 5 | 0 | 0 |
| 2008 | 8 | 0 | 0 |
| 2007 | 13 | 0 | 0 |
| 2006 | 1 | 0 | 0 |
| 2005 | 0 | 20 | 0 |
| 2004 | 0 | 23 | 0 |
| 2003 | 5 | 0 | 0 |
| 2002 | 0 | 0 | 0 |
| 2001 | 0 | 0 | 0 |
| 2000 | 2 | 0 | 0 |
| 1999 | 4 | 0 | 0 |
| 1998 | 7 | 0 | 0 |
| 1997 | 12 | 0 | 0 |
| 1996 | 15 | 0 | 0 |
| 1995 | 15 | 0 | 0 |
| 1994 | 13 | 0 | 0 |
| 1993 | 20 | 0 | 0 |
| 1992 | 5 | 0 | 0 |
| 1991 | 0 | 0 | 0 |
| 1990 | 3 | 0 | 0 |
| 1989 | 0 | 15 | 0 |
| 1988 | 0 | 0 | 26 |
| 1987 | 15 | 0 | 0 |
| 1986 | 12 | 0 | 0 |
| 1985 | 2 | 0 | 0 |
| 1984 | 0 | 0 | 0 |
| 1983 | 7 | 0 | 0 |
| 1982 | 5 | 0 | 0 |
| 1981 | 5 | 0 | 0 |
| 1980 | 6 | 0 | 0 |
| 1979 | 0 | 4 | 0 |
| 1978 | 0 | 15 | 0 |
| 1977 | 3 | 0 | 0 |
| 1976 | 9 | 0 | 0 |
| 1975 | 7 | 0 | 0 |
| 1974 | 11 | 0 | 0 |
| 1973 | 7 | 0 | 0 |
| 1972 | 5 | 0 | 0 |
| 1971 | 4 | 0 | 0 |
| 1970 | 7 | 0 | 0 |
| 1969 | 0 | 11 | 0 |
| 1968 | 0 | 25 | 0 |
| 1967 | 7 | 0 | 0 |
| 1966 | 2 | 0 | 0 |
| 1965 | 4 | 0 | 0 |
| 1964 | 6 | 0 | 0 |
| 1963 | 0 | 10 | 0 |
| 1962 | 0 | 29 | 0 |
| 1961 | 0 | 29 | 0 |
| 1960 | 0 | 0 | 44 |
| 1959 | 0 | 0 | 47 |
| 1958 | 0 | 0 | 41 |
| 1957 | 0 | 0 | 37 |
| 1956 | 0 | 0 | 35 |
| 1955 | 0 | 0 | 43 |
| 1954 | 0 | 0 | 40 |
| 1953 | 0 | 0 | 43 |
| 1952 | 0 | 0 | 27 |
| 1951 | 0 | 41 | 0 |
| 1950 | 0 | 33 | 0 |
| 1949 | 9 | 0 | 0 |
| 1948 | 12 | 0 | 0 |
| 1947 | 0 | 29 | 0 |
| 1946 | 0 | 36 | 0 |
| 1945 | 0 | 0 | 42 |
| 1944 | 0 | 0 | 47 |
| 1943 | 0 | 0 | 43 |
| 1942 | 0 | 0 | 35 |
| 1941 | 0 | 24 | 0 |
| 1940 | 0 | 6 | 0 |
| 1939 | 5 | 0 | 0 |
| 1938 | 3 | 0 | 0 |
| 1937 | 6 | 0 | 0 |
| 1936 | 6 | 0 | 0 |
| 1935 | 6 | 0 | 0 |
| 1934 | 0 | 9 | 0 |
| 1933 | 0 | 18 | 0 |
| 1932 | 0 | 0 | 27 |
| 1931 | 0 | 0 | 35 |
| 1930 | 0 | 0 | 45 |
| 1929 | 0 | 0 | 41 |
| 1928 | 0 | 0 | 34 |
| 1927 | 0 | 22 | 0 |
| 1926 | 0 | 8 | 0 |
| ஆதாரம்: ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு | |||
| குறிப்பு: மந்த நிலை என்பது வெட்டுக்கிளிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததைக் குறிப்பிடுகிறது; மீட்சி என்பது இனப்பெருக்கம் காரணமாக ஏராளமான வெட்டுக்கிளிகள் உருவானதைக் குறிக்கிறது; பெருவாரி பாதிப்பு என்பது ஓராண்டு காலத்துக்கும் மேலாக பரவலாக மற்றும் பெருமளவில் பயிர் சேதம் ஏற்படுத்தியதைக் குறிக்கிறது; பெருவாரி பாதிப்பு முடியும் காலம் சரிவு என குறிப்பிடப்படுகிறது. | |||
வெட்டுக்கிளி கூட்டங்கள் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானில் பயிர்களை நாசம் செய்கின்றன.
பல தசாப்தங்களில் மிக மோசமானதாக உருவாகியுள்ள பாலைவன வெட்டுக்கிளி கூட்டங்கள் ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா பகுதியில் பயிர்களையும் பசுமைப் பரப்பையும் அழிக்கின்றன. எரித்ரியா, எத்தியோப்பியா, சோமாலியா, ஜிபுட்டி ஆகிய நாடுகளையும், அதைத் தாண்டிய பிராந்தியங்களையும் உள்ளடக்கிய அந்தப் பகுதியில் உணவுப் பாதுகாப்பை இவை அச்சுறுத்துகின்றன.
பசி வெறியுடன் உள்ள இந்த வெட்டுக்கிளிகளின் கூட்டம் இப்போது சோமாலியா, எத்தியோப்பியாவில் பயிர்களை நாசம் செய்துவிட்டு, கென்யாவில் பரவி வருகின்றன. கடந்த 70 ஆண்டுகளில் கென்யாவில் மிக மோசமான பூச்சி பாதிப்பாக இது உள்ளது. எத்தியோப்பியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இது மிகப் பெரிய பூச்சி பாதிப்பாக உள்ளது.
நெருக்கடியை உணர்ந்து இதை தேசிய நெருக்கடி நிலை என சோமாலியா அறிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக இந்த அறிவிப்பை வெளியிட்ட நாடாக சோமாலியா உள்ளது. பாகிஸ்தானில் கிழக்குப் பகுதிகளில் பருத்தி, கோதுமை, சோளம் மற்றும் இதர பயிர்களை இந்த வெட்டுக்கிளி கூட்டங்கள் நாசம் செய்தன.
ஆனால் ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா என குறிப்பிடப்படும் நாடுகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா.வின் எப்.ஏ.ஓ. அமைப்பு கூறியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் வேகமாக இனப்பெருக்கம் செய்யக் கூடியவை என்பதால் வருகிற ஜூன் மாதத்துக்குள் இவை 500 மடங்கு பெருகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல நாடுகளுக்கு லோக்கஸ்ட் வெட்டுக்கிளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சில வெட்டுக்கிளி கூட்டங்கள் உகாண்டா வரை சென்றுவிட்டன என்றும், முறையாக கட்டுப்படுத்தாவிட்டால் பெருவாரியாக பரவி, நாசகார செயல்களை செய்யக்கூடும் என்று எப்.ஏ.ஓ. எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே டிசம்பர் இறுதி வரையில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இவை 1,75,000 -க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விளைநிலங்களை நாசம் செய்துவிட்டன.
ஒரு நாளைக்கு 350 சதுர கிலோமீட்டர் (135 சதுர மைல்கள்) உள்ள நிலங்களில் 1.8 மில்லியன் டன் பயிர்களை இவை சாப்பிடுகின்றன என்று எப்.ஏ.ஓ. கூறியுள்ளது.
கென்யாவில் வெட்டுக்கிளிகளின் ஒரு கூட்டம் 40 முதல் 60 கிலோ மீட்டர் (25 முதல் 40 மைல்கள்) வரை பயிர்களை சாப்பிடுவதாக இந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது.
ஒரு லோக்கஸ்ட் வெட்டுக்கிளி எவ்வளவு சாப்பிடும்?
ஒரு வளர்ந்த பலைவன வெட்டுக்கிளி, தனது எடைக்கு ஈடான உணவை உட்கொள்ளும் – சுமார் 2கிராம்.
ஆதாரம்: எப்.ஏ.ஓ.வெட்டுக்கிளி கூட்டங்களால் அந்தப் பகுதியில் வேளாண்மை உற்பத்தி குறையும் என்று அதிகாரிகள் அச்சப்படுகின்றனர். வெள்ளம் மற்றும் வறட்சியால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பகுதியில் உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். இதனால் அந்தப் பிராந்தியத்தில் 20 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படலாம் என ஐ.நா. கூறுகிறது.
"கென்யா மற்றும் எத்தியோப்பியா பற்றி நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம். ஏனெனில் அங்கு தான் இந்த வெட்டுக்கிளிகளின் கூட்டம் அதிகம் தாக்கியுள்ளது" என்று எப்.ஏ.ஓ.வின் லோக்கஸ்ட் கண்காணிப்புப் பிரிவு மூத்த அதிகாரி கெய்த் கிரெஸ்மன் கூறியுள்ளார்.

"மேலும், எத்தியோப்பியாவில் இவற்றின் இனப்பெருக்கமும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது."
68 வயதான அலி பிலா வாக்குவோ வடகிழக்கு கென்யாவில் உள்ள விவசாயி. நீண்ட வறட்சிக்குப் பிறகு நல்ல மழை பெய்த காரணத்தால், நல்ல அறுவடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார்.
ஆனால் அவருடைய சோளம் மற்றும் பீன்ஸ் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துவிட்டன.
"எங்கள் தானியங்களில் பெரும் பகுதியை அவை சாப்பிட்டுவிட்டன. சாப்பிடாமல் விட்ட தானியங்கள் காய்ந்துவிட்டன" என்று அவர் கூறுகிறார். "அது எங்களை மிகுந்த கவலையில் ஆழ்த்திவிட்டது. தானியத்தை எங்கள் கண்களால் பார்த்தோம். ஆனால், அதன் பயனை எங்களால் அனுபவிக்க முடியாமல் போய்விட்டது" என்கிறார்.
இதற்கு முன்பு 1960களில் இதுபோல வெட்டுக்கிளிகள் கூட்டம் வந்ததை வாக்குவோ நினைவுகூர்ந்தார். வானில் கறுப்பு மேகம் போல இந்தக் கூட்டம் நகர்ந்து வரும் என்கிறார்.
"சூரியனைக் கூட நீங்கள் பார்க்க முடியாத அளவுக்கு, இருளான மேகம் போல அவை வரும்" என்கிறார்.
மோசமான வானிலையும் இந்தப் பிரச்னையை தீவிரப்படுத்தியுள்ளது.
இப்போதைய பூச்சியின தாக்குதலுக்கு 2018-19ல் ஏற்பட்ட சூறாவளிகளும், பெரு மழையும் தான் காரணம் என கருதப்படுகிறது.
பாலைவன வெட்டுக்கிளிகள் மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடைப்பட்ட சுமார் 30 நாடுகளை உள்ளடக்கிய வறட்சிப் பகுதிகளில் வாழக் கூடியவை - இது சுமார் 16 மில்லியன் சதுர கிலோ மீட்டர் (6.2 மில்லியன் சதுர மைல்கள்) பரப்பு கொண்டது.
ஆனால் தெற்கு அரேபிய தீபகற்பப் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய ஈரப்பதமான சூழ்நிலையின் போது லோக்கஸ்ட் வெட்டுக்கிளிகள் காணாமல் போயிருந்தன என்று ஐ.நா. கூறியுள்ளது.
2018ல் இருந்து இவை மீண்டும் அதிகமாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

2019 தொடக்கத்தில், வெட்டுக்கிளிகளின் முதலாவது கூட்டம் ஏமன், சௌதி அரேபியா, ஈரானுக்கு சென்றன. அங்கு இனப்பெருக்கம் செய்த பிறகு கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு சென்றன.
வெட்டுக்கிளிகளின் கூட்டம் அதிகமாக உருவாகி, கடந்த ஆண்டு இறுதியில் எரித்ரியா, ஜிபுட்டி மற்றும் கென்யாவுக்கு சென்றன.

செங்கடலின் இருபுறமும் உருவாகும் வெட்டுக்கிளிக் கூட்டம் எகிப்து, சூடான், சௌதி அரேபியா, யேமன், இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதி, ஆகிய பகுதிகளைப் பாதிக்கின்றன. இந்த சூழ்நிலை மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக ஐ.நா. கூறுகிறது.
பரவலான புவிப்பரப்பை பாதிப்பது என்பதால், இதுபோன்ற பூச்சி தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமானது என்றாலும், இந்தக் குறிப்பிட்ட லோக்கஸ்ட் வெட்டுக்கிளி பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முன்னதாகவே திறன்மிக்க நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம் என்று எப்.ஏ.ஓ.-வின் நிபுணர் கிரெஸ்மன் கூறியுள்ளார்.
"இவற்றை கட்டுப்படுத்த சில முக்கியமான நாடுகளில் முன்னரே பெரிய மற்றும் திறமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், சூழ்நிலை இவ்வளவு தீவிரமாகியிருக்காது" என்கிறார் அவர்.
பெரும் கூட்டங்களை சமாளிக்க மக்கள் முயற்சிகள் செய்கிறார்கள்.
இப்போது ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா பகுதியில் வெட்டுக்கிளிகளின் கூட்டம் முன் எப்போதும் இல்லாத வகையில் பெரிய அளவில் தாக்கி இருப்பதாலும், அவற்றால் ஏற்படும் அழிவு அதிகமாக இருப்பதாலும், நிலைமையைக் கையாள பல நாடுகள் சிரமப்படுகின்றன.
இவற்றின் பெரும் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது இரண்டு முக்கிய விஷயங்களைப் பொருத்து அமையும் - கண்காணித்தல் மற்றும் சிறப்பாகக் கட்டுப்படுத்துதல்.
எப்.ஏ.ஓ.வால் நிர்வகிக்கப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் தகவல் சேவை அமைப்பு, முன்கூட்டியே கணித்து, முன்னதாகவே தகவல் தெரிவித்து, எப்போது அவை தாக்கும் என்ற காலத்தையும், எவ்வளவு பெரிய கூட்டமாக இருக்கும், எந்தப் பகுதிகளைத் தாக்கும், இனப்பெருக்கம் எப்போது நடக்கும் என்ற தகவல்களையும் அளிக்கிறது.
ஆனால், கூட்டத்தின் அளவு ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்காவில் உள்ளதைப் போன்ற அபாய அளவை எட்டும்போது, அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், புதிதாக இனப்பெருக்கம் செய்தல் மற்றும் பரவுதலைத் தடுக்கவும் அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
லோக்கஸ்ட் வெட்டுக்கிளி கூட்டங்கள் எப்படி கட்டுப்படுத்தப் படுகின்றன.
ஆதாரம்: எப்.ஏ.ஓ.உயிரி பூச்சிக்கொல்லிகள் அல்லது இயற்கையில் அவற்றை அழிக்கும் பூச்சிகளை அறிமுகம் செய்தல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாலும், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது மிகவும் பொதுவான நடைமுறையாக பின்பற்றப்படுகிறது.
தரையில் செல்லும் வாகனங்கள் அல்லது வானில் இருந்து விமானங்கள் மூலம் பூச்சிகளின் மீது ரசாயன மருந்துகளை தெளிப்பதன் மூலம், வெட்டுக்கிளிகளை குறுகிய நேரத்தில் கொன்றுவிட முடிகிறது.
"கென்யா மற்றும் எத்தியோப்பியாவில் பெரிய அளவில் வான்வழி நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது - சோமாலியாவிலும் இந்தத் தேவை உள்ளது. ஆனால், பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இது சாத்தியமானதல்ல" என்கிறார் கிரெஸ்மன்.
"இப்போது வெட்டுக்கிளிகள் முதிர்ச்சி அடைந்த நிலையில் இருப்பதால், விமானங்களை மோதச் செய்து அவற்றை அழித்தால், முதிர்ச்சி அடைந்த வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கையையும், முட்டையிடும் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும்."

பல தசாப்தங்களாக இந்த வெட்டுக்கிளி கூட்டங்களை கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டிராத நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு இது மிகவும் கஷ்டமானது. அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளோ, முன் அனுபவமோ அவற்றுக்கு இல்லை என்பதே இதற்குக் காரணம்.
சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவிலும் - பாகிஸ்தானிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தான் - அடுத்து என்ன நடக்கும் என்பதை முடிவு செய்வதாக இருக்கும். இப்போது உருவாகும் பெரும் கூட்டம் அதிக நாடுகளைக் கடந்து, அதிக பகுதிகளை அடைந்து, அதிக பயிர்களை நாசம் செய்தால், அது "பெருவாரி தாக்குதல் நிலை" என அறிவிக்கப்படும்.
ஆனால் கென்ய விவசாயி அலி பிலா வாக்குவோ மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு, இப்போது எடுக்கும் எந்த முயற்சியும் தாமதமான நடவடிக்கையாகவே இருக்கும். வெட்டுகிளிகளின் கூட்டம் வந்தபோது அவர்களால் பிளாஸ்டிக் கேன்களை தட்டி ஒலி எழுப்பவும், கூச்சல் போடவும் மட்டுமே முடிந்தது.
இருந்தாலும், நடந்த விஷயம் பற்றி அவர் ஞானி போல பேசுகிறார்.
"அது கடவுளின் விருப்பம். அது அவருடைய படை" என்கிறார் அவர்.
தயாரிப்பு
எழுத்து மற்றும் தயாரிப்பு – லூசி ரோட்ஜ்ர்ஸ், களத்தயாரிப்பு – ஜோயி இன்உட், டிசைன் சோயி பார்த்தோலோமியோ மற்றும் மில்லி வச்சிரா, மேம்பாடு – பெக்கி ரஷ், கட்ரினா மோரிசன், பியூரிட்டி பிரிர். வெட்டுக்கிளியின் படங்கள் – ஸ்விட்பர்ட் ஆர் ஓட், ஸ்டீபன் ரோட்ஜர்ஸ் மற்றும் கெட்டி புகைப்படங்கள்.


நாசகர வெட்டுக்கிளிகளை எதிர்த்து கிழக்கு ஆப்பிரிக்கா போராட்டம்