‘அவனுக்கொரு வேலை உள்ளது. அவளுக்கு அழகுள்ளது‘

பாலிவுட்டில் பாலினப் பாகுபாடு ஒரு பார்வை

“மாலிக்கால் (தலிப் டாகில்) நடத்தப்படுகின்ற கார் விற்பனை கடையில் விற்பனையாளராக பாடகராக விரும்புகின்ற ரோஹித் வேலை செய்கிறார். ஒரு நாள், பிறந்த நாள் பரிசாக கார் ஒன்றை கொடுக்க செல்லும்போது, சாஸனாவின் (அனுபம் கெர்) மகளான சோனியா சாஸனாவை (அமீஷா பட்டேல்) ரோஹித் சந்திக்கிறார்”.

பாலிவுட் திரைப்படங்களில் பாலினப் பாகுபாடு‘ என்ற அறிக்கையின்படி , 2000-களின் வெற்றிப் படமான 'கஹோ நா பியார் ஹாய்'யின் கதை வரி இது. கதையில் வருகின்ற ஒரு சில வரிகள் ஒரு சில விஷயங்களைக் குறித்துக்காட்டுகிறது: விற்பனையாளராக இருக்கும் ரோஹித், அபிலாஷைகளை கொண்டிருக்கிறார். கார் விற்பனை கடையை நடத்திவரும் மாலிக் ஒரு தொழிலதிபர். இதற்கு சமமான, சோனியாவின் தொழில் மற்றும் அபிலாஷைகளை படத்தில் பார்க்க முடியவில்லை. இந்த கதையில் அவர் ஒரு நபராக அல்லாமல் ஒரு மகள் என்றே அறிமுகமாகிறார். யார் அவள்? அவள் என்ன செய்கிறாள்? நமக்கு தெரியாது.

பாலிவுட் திரைப்பட தொழில்துறையில் நிலவுகின்ற பாலினப் பாகுபாடுகளை குறிப்பிட்டு காட்டுகின்ற ஓர் எடுத்துக்காட்டுதான் இது. இந்த ஊடாடும் கட்டுரை அத்தகைய சில பாகுபாடுகளை ஆய்வு செய்கிறது.

Scroll Down

“அவர் ஒரு நேர்மையான போலீஸ்காரர், அவள் அழகானவள்”

1970 முதல் 2017ம் ஆண்டு வரையான திரைப்படங்களில் நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்யும் அடிப்படையை ஒரு கதாபாத்திரத்துடனான தொடர்புகளை ஆய்வு செய்வதன் மூலம் இந்த அறிக்கை ஆய்வு செய்கிறது. இதில் கிடைத்துள்ள முடிவுகள் ஆச்சரியமளிக்கின்றன. நடிகர்கள் பெரும்பாலும் தொழில் செய்வோராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், நடிகைகளோ, அவர்களின் உடல் ரீதியான தோற்றங்கள் அல்லது யாராவது ஒருவரோடு இருக்கும் தொடர்பை பயன்படுத்தி அறிமுகம் செய்யப்படுகிறார். 'கஹோ நா பியார் ஹாய்' திரைப்படத்தில் சஸனாவின் மகளாக சோனியா அறிமுகப்படுத்தப்படுவது போலத்தான் இது. நடிகர், நடிகைகளை குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் சில சொற்களை இங்கு காணலாம்.

News image
News image
News image
News image

ஆண் நடிகர்களை குறிப்பிடும்போது கோபக்காரர், அப்பாவி, போன்ற உரிச்சொற்களையும், பெண் நடிகர்களை குறிப்பிடும்போது திருமணமானவர், அழகானவர் மற்றும் குழந்தை பெற போகிறார் போன்ற உரிச்சொற்களையும் பயன்படுத்தப்படுகின்றனர்.

“அவர் கொல்கிறார், அவள் திருமணம் செய்கிறாள்”.

ஸ்டான்ஃபோர்ட் டிபென்டென்சி பார்ஸரை பயன்படுத்தி (டி மார்னிஃபெ ஏற் அல். 2006), ஒரு கதாபாத்திரத்தோடு தொடர்புடைய உரிச்சொற்கள் எடுக்கப்பட்டுள்ளன. சுடுகிறார், கொல்கிறார், அடிக்கிறார் ஆகிய வினைச்சொற்கள் நடிகர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் செய்கிறார், காதலிக்கிறார் போன்ற வினைச்சொற்கள் நடிகைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

News image
News image
News image
News image

சுட்டார், காப்பாற்றினார், கொன்றார் ஆகிய வினைச்சொற்கள் ஆண் நடிகர்களுக்காகவும், திருமணம், ஒப்புக் கொண்டார், உணர்ந்தார் ஆகிய வினைச்சொற்கள் பெண் நடிகர்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

அவர் ஒரு மருத்துவர். அவள் செயலராக உள்ளார்”

இதே முறைகளை பயன்படுத்தி, ஆண் மற்றும் பெண் கதாபாத்திரங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 350 வேலைகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

News image
News image
30
30 ஆண் நடிகர்களுக்கு மருத்துவர் கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 15 பேர் காவல்துறை அதிகாரிகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
60
60 நடிகைகள் ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அடுத்து 25 பேர் செயலராக கதாபாத்திரம் ஏற்றுள்ளனர்.
News image
News image

“அவளுக்கு கொடுக்கப்படுவதைவிட அவனுக்கு திரையில் அதிக நேரம் கொடுக்கப்படுகிறது”

News image
News image
68.5
2008 முதல் 2017ம் ஆண்டு வரையான திரைப்பட டிரெய்லர்களில், ஆண் காதாபாத்திரங்கள் 68.5% சராசரி திரை நேரத்தை பெற்றிருப்பது இந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
31.5
இதே ஆண்டுகளில் பெண் கதாபாத்திரங்களுக்கான சராசரி திரைநேரத்தின் விகிதம் இதுவாகும். நடிகர்களை விட 50% குறைவான சராசரி திரைநேரத்தை நடிகைகள் கொண்டிருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது
News image
News image

“அவன் கோபமாக இருக்கிறான். அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்”.

News image
News image
26% நேரம்
நடிகைகளை வைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள 14.5% உணர்வுகளை ஒப்பிடும்போது, நடிகர் கதாபாத்திரங்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உணர்வு கோபமாகும்.
30% நேரம்
நடிகைகள் “மகிழ்ச்சி” உணர்வை காட்டுகின்றனர். 2008 முதல் 2017ம் ஆண்டு வரையான திரைப்பட டிரெய்லர்களில் ஆண் சக நட்சத்திரங்களை விட பெண் கதாபாத்திரங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நம்முடைய சமூகத்தில் நிலவும் பலின மாதிரியைக் காட்டுவதாக இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.
News image
News image

அவள் அவனைவிட 4 மடங்கு குறைவாக சம்பாதிக்கிறாள்

News image
News image
380 லட்சம் டாலர்
2017ம் ஆண்டு வெளியான ஃபோர்பஸ் பட்டியல்படி, அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் நட்சத்திரங்களில் நடிகர் ஷாரூக் கான் முதலிடம் பெற்றிருந்தார்
100 லட்சம் டாலர்
அதே பட்டியலில் பிரியங்கா சோப்பிராவின் சம்பளமாகும். அவர் பாலிவுட் திரைப்படங்களில் மட்டும் நடிக்கவில்லை. “குயன்டிகோ“ என்கிற சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடித்துள்ளார். பிரியங்காவுக்கும், ஷாரூக் கானுக்கும் இருக்கும் வித்தியாசம் சிறியது அல்ல. அதிர்ச்சியூட்டும் 270 லட்சம் டாலர் (173 கோடி ரூபாய்)
News image
News image

சமீபத்திய ஆண்டுகளில் நடிகைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் பொதுவாக அதிகரித்துள்ளன. 1970ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களோடு 2015 முதல் 2017ம் ஆண்டு வரையான திரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் நடிகைகளை மையமாக வைத்து திரைப்படம் எடுப்பது 11.9% அதிகரித்துள்ளது. இருப்பினும், திரைப்பட தொழில்துறையில் பாலினப் பாகுபாடு இன்னும் அதிகமாகவே காணப்படுகிறது.