உங்கள் நகரம் எந்த அளவுக்கு வெப்பமாக உள்ளது?
உலகம் சூடாகிக் கொண்டிருக்கிறது. 2019 ஜூலை மாதம், வரலாற்றில் பதிவானதிலேயே அதிக வெப்பமான மாதமாக இருக்கும் - 1880 - 1900 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடந்த 10 ஆண்டுகளில் பூமியெங்கும் ஜூலை மாத வெப்ப நிலை அதிகமாக உள்ளது என்று இந்த உலக உருண்டை காட்டுகிறது.

பருவநிலை மாற்றத்தின் மிக மோசமான பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு, புவி வெப்ப நிலை உயர்வு 1.5 டிகிரிக்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொழில் புரட்சிக்கு அதாவது - 1850 - 1900 காலத்துக்கு - முந்தைய அளவைவிட 1.5 டிகிரி உயரக்கூடாது என்பது இதன் பொருள்.
அதிலிருந்து புவியின் வெப்பம் ஏற்கனவே 1டிகிரி அதிகமாகிவிட்டது.
கேட்பதற்கு இது பெரிய அளவு போலத்தெரியாது. ஆனால் வெப்பமயமாதலை கட்டுப்படுத்த நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், உலகம் `பேரழிவான மாற்றத்தை' சந்திக்கும் என்று உலக வெப்பமயமாதல் தொடர்பான முன்னணி சர்வதேச அமைப்பான ஐ.பி.சி.சி. கூறியுள்ளது.
கடல் மட்டங்கள் உயரும், பல நூறு மில்லியன் பேர் இடம் பெயர வேண்டி வரும். வறட்சிகள், வெப்ப அலைகள், பலத்த மழைகள் போன்று தீவிர வானிலை மாறுபாடு இருக்கும். அரிசி,சோளம், கோதுமை போன்ற பயிர்களை விளைவிக்கும் திறன் ஆபத்துக்குள்ளாகும்.
இப்போதைய வேகத்தில் புவிவெப்பம் தொடர்ந்தால், நூற்றாண்டு இறுதிக்குள் வெப்பநிலை 3 - 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும்.
உங்கள் நகரைச் சுற்றி எவ்வளவு பகுதி ஏற்கெனவே வெப்பமாகிவிட்டது - அடுத்து என்ன நிகழும் என்பதைக் கண்டறியுங்கள்.

இந்த கலந்தாடலைக் காண தயவுசெய்து உங்கள் பிரவ்சரை அப்டேட் செய்யவும்
நாம் சிறிது எளிமைப் படுத்துவோம். இந்த வரி 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதத்தின் சராசரியைக் காட்டுகிறது. {{city}} -ல் சமீபத்திய ஜூலை சராசரி {{startHighlight}}{{rolling_avg_2018_jul}}{{endHighlight}} மற்றும் ஜனவரியில் {{startHighlight}}{{rolling_avg_2018_jan}}{{startHighlight}} . ஆனால் 2100ல் வெப்பநிலை எப்படி இருக்கும்?
ஜனவரி: 1900ல் இருந்து {{temp}} செல்சியஸ் {{diff}}
ஜூலை: 1900ல் இருந்து {{temp}} செல்சியஸ் {{diff}}
பசுமைக்குடில் வாயு வெளியாதல் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உச்சத்துக்கு சென்று, பிறகு பெருமளவு குறையும். இது உலக வெப்ப நிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் கீழே வைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும். இதற்கு கடுமையான பருவநிலை கொள்கைகள் தேவைப்படும்.
ஜனவரி: 1900ல் இருந்து {{temp}} செல்சியஸ் {{diff}}
ஜூலை: 1900ல் இருந்து {{temp}} செல்சியஸ் {{diff}}
பசுமைக்குடில் வாயு வெளியாதல் 2040க்குள் உச்சத்தை அடைந்து, பிறகு குறையும். பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் பல அரசியல் இலக்குகளை ஒட்டி இது இருக்கும்.
ஜனவரி: 1900ல் இருந்து {{temp}} செல்சியஸ் {{diff}}
ஜூலை: 1900ல் இருந்து {{temp}} செல்சியஸ் {{diff}}
இது நடுத்தரம் - குறைவு சூழலில் சில அம்சங்களில் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் 2080 வரையில் பசுமைக்குடில் வாயுக்கள் குறையத் தொடங்காது.
ஜனவரி: 1900ல் இருந்து {{temp}} செல்சியஸ் {{diff}}
ஜூலை: 1900ல் இருந்து {{temp}} செல்சியஸ் {{diff}}
21 ஆம் நூற்றாண்டு முழுக்க பசுமைக்குடில் வாயுக்கள் வெளியாவது தொடர்ந்து கட்டுப்படுத்தப் படாமல் இருக்கும் மோசமான சூழல் இது. உலகளவில் இதனால் வெப்ப நிலை உயர்வு 2100க்குள் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
உலகம் முழுக்க நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொருத்து 2100 ல் இவற்றில் எந்த சூழல் அநேகமாக சாத்தியமாகும்
இது எங்கே அழைத்துச் செல்லும்?

எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நியூயார்க் நகரம், உலகில் மிகப் பெரிய நகரங்களில் ஒன்று. ஆனால் கடலோர வெள்ளம் மற்றும் 2012 அக்டோபர் முதல் நவம்பர் வரை சாண்டி சூறாவளியைத் தொடர்ந்து வந்தது போன்ற புயல் சீற்றத்துக்கு ஆளாகும் ஆபத்து உள்ளது. அப்போது மன்ஹட்டன் செல்லும் சுரங்க ரயில் பாதைகள், சாலையோர சுரங்கப் பாதைகளில் வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டு, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பருவநிலை மாற்றம் அதிக தண்ணீரை வாரிக் கொட்டும் கடுமையான சூறாவளிகளைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. கடல் மட்ட உயர்வையும் ஏற்படுத்தும். நியூயார்க் நகரின் கடலோர அமைவிடம், ஏறத்தாழ 1500 கி.மீ. கரையோரப் பகுதிகளை கொண்டிருப்பதால் பருவநிலை மாற்றம் தொடர்பான பாதிப்புகளுக்கு அதிக அளவில் ஆட்படும் ஆபத்து உள்ளது. சுமார் ஒரு மில்லியன் பேர் இருக்கும் - நகரில் கால்வாசி பகுதிகள், இந்த நூற்றாண்டின் மத்தியில் வெள்ள மண்டலத்தில் இருக்கும் என்று அமெரிக்க எமர்ஜென்சி ஏஜென்சி மதிப்பிட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக ஆர்டிக் பகுதி உள்ளது. உலகின் மற்ற பகுதிகளைவிட இந்தப் பகுதி இரண்டு மடங்கு வேகமாக சூடாகிறது. அதனால் உலக வெப்பமாதல் பாதிப்புகளுக்கு நிலக்கரி சுரங்கத்தில் கேனரி பறவை போல அது பார்க்கப் படுகிறது.
உலகின் மற்ற பிராந்தியங்களைப் போல, ஆர்க்டிக் பகுதியில் காற்று மற்றும் நீரின் வெப்பம் உயர்கிறது. ஆனால் ஆர்க்டிக் பெருங்கடல் கோடையில் உருகும் ஐஸ் நீராலும், குளிர்காலத்தில் உறையும் பனிக்கட்டியாலும் அமைந்துள்ளது. சமீபத்திய தசாப்தங்களில், ஐஸ் உருகும் வேகம், குளிர்காலத்தில் உறையும் வேகத்தைவிட அதிகமாக உள்ளது. அதனால் பனிக் குறைவு ஏற்படுகிறது. உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, இந்தக் காரணத்தால் ஆர்க்டிக் பகுதியில் பெருமளவு வெப்ப மாறுபாடு ஏற்படுகிறது.

10 மில்லியன் மக்கள் வாழும் இந்தோனீசிய தலைநகரம், fastest sinking cities in the world ஒன்றாக உள்ளது. நகரின் வடக்கில் சில பகுதிகள் ஆண்டுக்கு 25 செ.மீ. அளவுக்கு மூழ்கிக் கொண்டுள்ளன. நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பதால், நிலத்தின் அடித்தட்டில் ஏற்படும் காலி இடம் காரணமாகவும், பருவநிலை மாற்றத்தாலும் கடல் நீர் மட்டம் உயர்வதாலும் இது நடக்கிறது. நகரைக் காப்பாற்ற 40 பில்லியன் டாலர் செலவில் 32 கி.மீ.க்கு கடல் சுவரும், 17 செயற்கைத் தீவுகளும் உருவாக்கப்படுகின்றன.
ஆனால், இது இடைக்கால ஏற்பாடு மட்டுமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 2050க்குள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். நீர்த்தேக்கங்களில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரும் நீரை நகரம் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், மற்ற கடலோரப் பகுதிகளில் உள்ளதைப் போல இங்கும் கடல் மட்டம் உயர்வது பெரிய சவாலாக நீடிக்கும். நீர் விரிவடைதல் - கூடுதல் வெப்பத்தால் நீர் விரிவடைதல் - மற்றும் துருவப் பகுதியில் பனி உருகுவதால் இது நிகழ்கிறது.

பருவநிலை மாற்றம்: சாக்லெட், மீன், உருளைக்கிழங்கு ஆகிய உணவுகள் இல்லாமல் போகும்
பருவநிலை மாற்றம்: ‘தண்ணீர் பிரச்சனை, இடப்பெயர்வு, வறுமை' - மீண்டும் ஓர் அழுத்தமான எச்சரிக்கை
பருவநிலை மாற்றம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 7 உண்மைகள்