Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
புதுப்பிக்கப்பட்ட நாள்: 08 ஆகஸ்ட், 2011 - பிரசுர நேரம் 16:53 ஜிஎம்டி
மின்அஞ்சலாக அனுப்புகஅச்சு வடிவம்
'தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடையாது'- கோட்டாபய
கோட்டாபய, எஸ்.எம். கிருஸ்ணா சந்திப்பு- 2009
இந்தியாவும் ஆதரிக்கும் என்று கோட்டாபய நம்பிக்கை
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் அந்நாட்டின் பாதுகாப்பு செயலருமான கோட்டாபய ராஜபக்ஷ, தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது சாத்தியமில்லை எனக் கூறியிருக்கிறார்.

ஹெட்லைன்ஸ் டுடே எனும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டமே இலங்கை மக்கள் அனைவரும் ஒருமித்து வாழப் போதுமானது' என்று கூறியுள்ளார்.

‘இப்போது விடுதலைப்புலிகளும் இல்லை, மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதற்கும் மேலதிகமான அதிகாரங்கள் வழங்க வேண்டியதில்லை. இப்போது கூட உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. விரைவில் மாகாணசபை தேர்தல்களும் நடத்தப்படும், ஜனாதிபதி முதல்வர்களையும் அமைச்சர்களையும் நியமிப்பார். இதற்கும் மேல் செய்வதற்கு எதுவுமில்லை’ என்று கோட்டாபய கூறியதாக அச் செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.

போர்க்குற்ற விசாரணையும் கிடையாது

ஐநா நிபுணர் குழுவுக்கு எதிரான வீரவன்சவின் போராட்டம்- கோப்பு படம்
போர்க்குற்ற விசாரணை கூடாது என இலங்கை வாதிடுகின்றது
விடுதலைப்புலிகளுடனான் மோதல்களின் இறுதிக்கட்டங்களில் பல்லாயிரக் கணக்கில் அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவை என்ற கோரிக்கை நியாயமற்றது என்றும் ஜனாதிபதி மகிந்தவின் சகோதரர் வாதிட்டுள்ளார்.

'விசாரணை வேண்டும் எனக்கோரும் அமெரிக்காவோ பிரிட்டனோ மட்டும் உலகமாகி விடாது, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பல ஆப்பிரிக்க நாடுகள், தென் கிழக்காசிய நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன, இந்தியாவும் ஆதரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை' என்றும் கூறியதாக செய்திக்குறிப்பு கூறுகிறது.

தவிரவும், அத்தகைய விசாரணை வேண்டும் என வற்புறுத்தும் அண்மைய தமிழக சட்ட மன்றத் தீர்மானம் இலங்கையில் நிலவும் யதார்த்தங்களை உணராமல் நிறைவேற்றப்பட்டதாகும். தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார், உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது அவருக்கு அக்கறை இருக்குமானால் தமிழக் மீனவர்கள் நாட்டு எல்லை தாண்டி இலங்கைப் பகுதிக்கு வந்து மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டும் கோட்டாபய கூறியதாக ஹெட்லைன்ஸ் டுடே தெரிவிக்கிறது.

இவற்றையும் காண்க
மின்அஞ்சலாக அனுப்புகஅச்சு வடிவம்
BBC Copyright Logo^^ மேலே செல்க
முகப்பு|நினைவில் நின்றவை|எம்மைப்பற்றி|வானிலை
BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
உதவி|தகவல் பாதுகாப்பு|எம்மைத் தொடர்புகொள்ள