உலகக்கோப்பையில் முன்னதாக 11 போட்டிகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதியுள்ளன. இதில் இந்திய அணி சார்பில் முதல் விக்கெட்டுக்கு கடந்த 2015-ம் ஆண்டு ரோகித் தவான் இணை 76 ரன்களை சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
தற்போது அந்த சாதனையை இதே இணை முறியடித்துள்ளது. இவ்விருவரும் இணைந்து இதுவரை 100 ரன்களை எடுத்துள்ளனர்.
இந்திய அணி 19-வது ஓவர் முடிவில் 100 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் 53 பந்துகளில் ஏழு பௌண்டரிகளோடு 50 ரன்கள் எடுத்துள்ளார்.
ஓவல் மைதானத்தில் தவான் இதுவரை நான்கு முறை 50 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இரு முறை அரை சதத்தை சதமாக மாற்றியுள்ளார்.
ஆட்டத்தின் 17-வது ஓவரில் கோல்டர் நைல் பந்தில் ஃ பைன் லெக் திசையில் ரோகித் ஷர்மா ஒரு ஃபுல் ஷாட் மூலம் சிக்ஸர் விளாசினார்.
இப்போட்டியில் இதுதான் முதல் சிக்ஸர்.
கோல்டர் நைல் நான்கு ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் இதுவரை ஆறு பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
ஸ்டார்க் பந்தில் இந்திய அணி நிதான ஆட்டத்தை கடைபிடித்து வருகிறது.