உலகக்கோப்பை 2019 : ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது

உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஞாயற்றுக் கிழமை மோதின. இப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 353 ரன்கள் இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஓவலில் நீலம் படர்ந்தது ; மஞ்சள் இல்லை - ரசிகர்கள் கருத்து

    லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் பிபிசி தமிழின் சிவக்குமார் உலகநாதன் பேசினார்.

    இந்தியா வெல்லும் என்பதில் உறுதியாக இருந்தோம் என்கின்றனர் ரசிகர்கள்.

  2. ஆட்ட நாயகன் - ஷிகர் தவான்

    இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஷிகர் தவான் வென்றார்.

    ''நாங்கள் சிறப்பாக ஃபீல்டிங் செய்தோம், நல்ல பௌலிங் உள்ளது. சிறப்பான ஸ்பின்னர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நாங்கள் வலைப்பயிற்சியில் கடுமையாக உழைத்தோம். அதற்கான பலன் தான் இந்த வெற்றி. இன்றைய போட்டியில் அனைத்துத் துறையிலும் சிறப்பாக விளையாடினோம்'' எனக் கூறியுள்ளார்.

    ஆட்ட நாயகன் - ஷிகர் தவான்
  3. இந்தியா வெற்றி

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

    இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடம் பிடித்தது இந்தியா.

    ஆட்டத்தின் 19-வது ஓவரில் பும்ரா மூன்று ரன்கள் மட்டும் கொடுத்தார்.

    ஆட்டத்தின் இறுதி ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். முதல் பந்தில் ஸ்டார்க் ரன் அவுட் ஆனார். இறுதி பந்தில் ஜாம்பா ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா இருவரும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    அலெக்ஸ் கேரி 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்தியா வெற்றி

    பட மூலாதாரம், Getty Images

  4. கோல்டர் நைலை ஆட்டமிழக்கச் செய்தார் பும்ரா, 45 ஓவர் 284/7

    ஆஸ்திரேலிய அணி ஏழாவது விக்கெட்டையும் இழந்துள்ளது. 45-வது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் நைல்.

    ஆஸ்திரேலிய அணியிடம் மூன்று விக்கெட்டுகளை கைவசம் இருக்கின்றன. 30 பந்துகளில் 69 ரன்கள் எடுக்கவேண்டும்.

    அலெக்ஸ் கேரி 18 பந்துகளில் 37 ரன்கள் விளாசியுள்ளார்.

  5. ஸ்மித் அவுட்; ரிவ்யூவில் வென்றது இந்தியா - 6 விக்கெட் இழந்தது ஆஸி

    நாற்பதாவது ஓவரின் நான்காவது பந்தில் புவனேஷ்வர் குமார் பந்தில் ஸ்டீவ் ஸ்மித் அவுட் ஆனார்.

    கள நடுவர் அவுட் கொடுக்காததால் மூன்றாவது நடுவரிடம் முறையிட்டார் கோலி. இதன் மூலம் எல்பிடபிள்யூ முறையில் ஸ்மித் அவுட்டாகி வெளியேறினார்.

    அவர் 70 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தார்.

    அதே ஓவரில் ஸ்டாய்னிஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார்.

    41-வது ஓவரில் மேக்ஸ்வெல்லை வெளியேற்றினார் யுவேந்திர சாஹல்

    மேக்ஸ்வெல்லை ஒருநாள் போட்டிகளில் பும்ரா வீழ்த்துவது இத்துடன் மூன்றாவது முறையாகும்.

    டி20 போட்டிகளில் 52 பந்துகளில் ஐந்து முறை மேக்ஸ்வெல்லை அவுட்டாக்கியுள்ளார் பும்ரா

    ரிவ்யூவில் வென்றது இந்தியா

    பட மூலாதாரம், Getty Images

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. கவாஜாவை வீழ்த்தினார் பும்ரா

    ஆட்டத்தின் 37வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் நான்காவது பந்தில் கவாஜா போல்ட் ஆகி வெளியேறினார். கவாஜா 39 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

    அவர் நான்கு பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார்.

    தற்போது மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து விளையாடி வருகிறார்.

    Usman khawaja

    பட மூலாதாரம், Getty Images

  7. 200 ரன்களை கடந்தது ஆஸ்திரேலியா

    36 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது.

    உஸ்மான் கவாஜா 42 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களும் எடுத்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 14 ஓவர்களில் 142 ரன்கள் தேவை.

  8. சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார் வார்னர், ஆஸி வெற்றிக்கு 23 ஓவர்களில் 207 ரன்கள் தேவை

    25-வது ஓவரில் டேவிட் வார்னர் புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 84 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.

    பொறுமையாக விளையாடிய வார்னர் 77 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

    ஆட்டத்தின் 23வது ஓவரை பகுதி நேர பந்துவீச்சாளர் கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரில் ஸ்மித் சிக்ஸர் மற்றும் பௌண்டரி விளாச ஆஸ்திரேலியாவுக்கு 14 ரன்கள் கிடைத்தது.

    மூன்றாவது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் உஸ்மான் கவாஜா விளையாடி வருகிறார்.

    ஆஸ்திரேலியா 27 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.

    warner

    பட மூலாதாரம், Getty Images

  9. முதல் விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா

    பதினான்காவது ஓவரில் பின்ச் விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா.

    டேவிட் வார்னர் இரண்டு ரன்கள் எடுக்க முயல கேதர் ஜாதவின் உதவியுடன் ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச்சை ரன் அவுட் செய்தார் ஹர்டிக் பாண்ட்யா.

    இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கியுள்ளார். பின்ச் 35 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

    வார்னர் தடுமாறி வருகிறார். 47 பந்துகளில் 23 ரன்கள் எடுத்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.

    Aaron Finch run out

    பட மூலாதாரம், ADRIAN DENNIS/AFP/Getty Images

  10. பாண்ட்யா ஓவரில் 19 ரன்கள்; ஆஸி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள்

    353 ரன்களை துரத்தி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் கடந்துள்ளது. பின்ச் 30 ரன்கள் எடுத்துள்ளார்.

    முதல் ஏழு ஓவர்களில் ஆஸ்திரேலியா 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

    புவனேஷ்வர் குமார், பும்ரா பந்தில் ரன்கள் விளாச வார்னரும் பின்ச்சும் சிரமப்பட்டனர்.

    புவனேஷ்வர் குமார் ஐந்து ஓவர்கள் பந்துவீசி 12 ரன்கள் மட்டும் கொடுத்தார்.

    ஹர்டிக் பாண்ட்யா வீசிய பத்தாவது ஓவரில் மூன்று பௌண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 19 ரன்கள் குவித்தனர் பின்ச் மற்றும் வார்னர்.

    Warner

    பட மூலாதாரம், Getty Images

  11. 'இந்தியா வெல்லும்' - லண்டனில் ரசிகர்கள் நம்பிக்கை

    பிபிசி தமிழ் செய்தியாளர் சிவக்குமார் உலகநாதன் இங்கிலாந்தில் போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்துக்கு வெளியே ரசிகர்களை சந்தித்துள்ளார்.

    அவரிடம் இந்தியா இப்போட்டியை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தனர் ரசிகர்கள்.

  12. ஆஸ்திரேலியாவுக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா, தோனி கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டம்

    ஸ்டார்க்கின் 47-வது ஓவரில் இந்தியா 15 ரன்கள் குவித்தது. ஸ்டார்க்கின் 49-வந்து ஓவரிலும் 13 ரன்கள் எடுத்தது இந்தியா.

    ஸ்டார்க் 10 ஓவர்கள் வீசி 74 ரன்கள் குவித்தார்.

    ஆட்டத்தின் இறுதி ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். தோனி 14 பந்துகளில் மூன்று பௌண்டரி ஒரு சிக்ஸர் உதவியுடன் 27 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    விராட் கோலி 77 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கே.எல்.ராகுல் கடைசி பந்தில் பௌண்டரி அடிக்க இந்தியா 352 ரன்கள் குவித்தது.

    ஆஸ்திரேலிய அணி இந்த இலக்கை துரத்தி வெற்றிபெற்றால் அது உலகக்கோப்பையில் மிகப்பெரிய சாதனையாக அமையும்.

    India v Australia

    பட மூலாதாரம், Getty Images

  13. அரை சதத்தை தவற விட்ட ஹர்டிக் பாண்ட்யா

    ஆட்டத்தின் 46-வது ஓவரில் பேட் கம்மின்ஸ் பந்தில் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஹர்டிக் பாண்ட்யா.

    அவர் 27 பந்துகளில் நான்கு பௌண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் உதவியுடன் 48 ரன்கள் எடுத்தார்.

    தற்போது கோலி 71 ரன்னுடன் விளையாடி வருகிறார். அவருடன் தோனி இணைந்துள்ளார். இந்தியா 300 ரன்களை கடந்துள்ளது.

  14. கோலி 50-வது அரைசதம் ; சிக்ஸர்களில் பேசும் ஹர்டிக் பாண்ட்யா

    41-வது ஓவரில் விராட் கோலி மேக்ஸ்வெல் பந்தில் ஒரு ரன் எடுத்து ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது அரை சதத்தை நிறைவு செய்தார்.

    ஹர்டிக் பாண்ட்யா கே.எல்.ராகுலுக்கு பதிலாக நான்காவது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்ட நிலையில் இதுவரை மூன்று சிக்ஸர்கள் உட்பட 22 பந்துகளில் 41 ரன்கள் குவித்துள்ளார்.

    கோலி 63 பந்துகளில் 59 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணி 44 ஓவர்கள் முடிவில் 281 ரன்கள் எடுத்துள்ளது.

  15. லண்டனில் மகேஷ்பாபு

    இந்தியா ஆஸ்திரேலியா போட்டி நடக்கும் ஓவல் மைதானத்தில் தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகர் மகேஷ் பாபு போட்டியை பார்ப்பதற்காகச் சென்றுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சுனில் கவாஸ்கர் மற்றும் ஷேவாக்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  16. ஷிகர் தவான் அவுட் - 117 ரன்கள் குவிப்பு, மிச்செல் ஸ்டார்க் பந்தில் வீழ்ந்தார்

    இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் அபாரமான ஒரு சதமெடுத்த பிறகு மிச்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.

    பதினாறு பௌண்டரிகள் உதவியுடன் ஷிகர் தவான் 117 ரன்கள் எடுத்தார்.

    அவர் அவுட் ஆன போது இந்திய அணியின் ஸ்கோர் 220/2.

    கே.எல்.ராகுல், தோனிக்கு பதிலாக ஹர்டிக் பாண்ட்யா மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

    Virat Kohli and Shikhar Dhawan

    பட மூலாதாரம், Getty Images

  17. சதம் அடித்த ஷிகர் தவான்

    தொடக்கத்தில் இருந்து நிதானமாக ஆடிய ஷிகர் தவான், 15 பௌண்டரிகளுடன் 94 பந்துகளில் சதம்

    அடித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. ரோகித் ஷர்மா அரை சதம், முதல் விக்கெட்டை இழந்தது இந்தியா

    21-வது ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்தில் பௌண்டரி அடித்ததன் மூலம் இப்போட்டியில் அரை சதம் கடந்தார் ரோகித் ஷர்மா. அவருக்கு இது 42-வது அரை சதம்.

    கடைசியாக விளையாடிய நான்கு ஒருநாள் போட்டிகளிலும் ரோகித் ஷர்மா அரை சதம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 22 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 127 ரன்கள் எடுத்துள்ளது.

    23-வது ஓவரில் கோல்டர் நைல் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ரோகித் ஷர்மா.

    ஆஸ்தேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பையில் மூன்று அணிகள் மட்டுமே விக்கெட் இழப்பின்றி நூறு ரன்களை கடந்துள்ளன.

    2007 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவின் கிரீம் ஸ்மித், ஏபி டி வில்லியர்ஸ் இணை முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    ரோகித் ஷர்மா - ஷிகர் தவான் இணை 127 ரன்களில் பிரிந்தது. ஐசிசி தொடர்களில் அதிக முறை நூறு ரன்களைச் சேர்த்த வீரர்கள் பட்டியலில் கில்கிறிஸ்ட் - ஹெய்டன் இணையின் சாதனையை சமன் செய்தது ரோகித்- தவான் இணை. இவ்விரு இணைகளும் ஆறு முறை விக்கெட் இழப்பின்றி நூறு ரன்கள் சேர்த்துள்ளனர்.

    Rohit Sharma

    பட மூலாதாரம், Henry Browne/Getty Images

  19. ரோகித் - தவான் இணை சாதனை; திணறுகிறது ஆஸ்திரேலியா, ஷிகர் தவான் அரை சதம்

    உலகக்கோப்பையில் முன்னதாக 11 போட்டிகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதியுள்ளன. இதில் இந்திய அணி சார்பில் முதல் விக்கெட்டுக்கு கடந்த 2015-ம் ஆண்டு ரோகித் தவான் இணை 76 ரன்களை சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

    தற்போது அந்த சாதனையை இதே இணை முறியடித்துள்ளது. இவ்விருவரும் இணைந்து இதுவரை 100 ரன்களை எடுத்துள்ளனர்.

    இந்திய அணி 19-வது ஓவர் முடிவில் 100 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் 53 பந்துகளில் ஏழு பௌண்டரிகளோடு 50 ரன்கள் எடுத்துள்ளார்.

    ஓவல் மைதானத்தில் தவான் இதுவரை நான்கு முறை 50 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இரு முறை அரை சதத்தை சதமாக மாற்றியுள்ளார்.

    ஆட்டத்தின் 17-வது ஓவரில் கோல்டர் நைல் பந்தில் ஃ பைன் லெக் திசையில் ரோகித் ஷர்மா ஒரு ஃபுல் ஷாட் மூலம் சிக்ஸர் விளாசினார்.

    இப்போட்டியில் இதுதான் முதல் சிக்ஸர்.

    கோல்டர் நைல் நான்கு ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் இதுவரை ஆறு பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

    ஸ்டார்க் பந்தில் இந்திய அணி நிதான ஆட்டத்தை கடைபிடித்து வருகிறது.

    Rohit sharma - Shikar Dhawan

    பட மூலாதாரம், ADRIAN DENNIS/AFP/Getty Images

  20. குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்கள், சச்சினை விஞ்சினார் ரோகித் ஷர்மா

    எந்தவொரு அணிக்கு எதிராகவும் மிகக்குறைந்த இன்னிங்சில் 2000 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை முந்தி முதலிடம் பிடித்துள்ளார் ரோகித் ஷர்மா.

    • 37 இன்னிங்ஸ்களில் ரோகித் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2000 ரன்களை கடந்துள்ளார்.
    • முன்னதாக சச்சின் 40 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டினார்.
    • விவியன் ரிச்சர்ட்ஸ் 44 இன்னிங்ஸ்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்களை கடந்தார்.
    • விராட் கோலி 44 இன்னிங்ஸ்களில் இலங்கை அணிக்கு எதிராக 2000 ரன்கள் எடுத்தார்.
    • இலங்கை அணிக்கு எதிராக தோனி 45 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை கடந்தார்.

    இந்தியா 15 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்துள்ளது.

    Rohit sharma

    பட மூலாதாரம், Henry Browne/Getty Images