மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
"ஐந்து மாநில தேர்தல் நடைபெறும் சூழலில் தங்களுக்கு ஏதாவது நல்ல அறிவிப்பு கிடைக்காதா என ஏங்கித் தவித்த மக்களின் எதிர்பார்ப்பை புறக்கணித்து, மக்களை பற்றி சிந்திக்காத இந்த நிதிநிலை அறிக்கை, மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என்று அடைமொழியிட்டு அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது," என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
பிப்ரவரி 1ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
பட மூலாதாரம், M.K. STALIN
படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வர்
நாடாளுமன்றத்தில் மத்திய, மாநில அரசுகளின் நல்லுறவுக்கு கைகொடுக்க மறுக்கும் மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையையே பட்ஜெட் அறிக்கை காட்டுகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டுள்ள ஸ்டாலின், "சுருங்கச் சொன்னால் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் திட்டங்களை அளிக்க மறந்து, குறிப்பாக ஐந்து மாநில தேர்தல் நடைபெறும் சூழலில் தங்களுக்கு ஏதாவது நல்ல அறிவிப்பு கிடைக்காதா என ஏங்கித் தவித்த மக்களின் எதிர்பார்ப்பை புறக்கணித்து, மக்களை பற்றி சிந்திக்காத இந்த நிதிநிலை அறிக்கை, மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என்று அடைமொழியிட்டு அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது," என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 16,092 ஆக பதிவு: பொது சுகாதார இயக்குநரகம்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 16 ஆயிரத்து 092 ஆக பதிவாகியிருக்கிறது.
இன்று மட்டும் 35 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை மாநிலத்தில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 599 ஆக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், இலங்கை ஆகிய நாடுகளில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இன்றும் அதிகபட்ச பாதிப்பு சென்னையில் 5,127 ஆக பதிவாகியிருக்கிறது. இங்கு 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
பட்ஜெட் 2022: டிஜிட்டல் கரன்சி இந்தியாவில் சாத்தியமா?
பட மூலாதாரம், Reuters
கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் பணம் மூலம் பரிவர்த்தனை, முதலீடுகள் ஆகியவை மிகப்பெரும் டிஜிட்டல் பொருளாதாரமாக உருவெடுத்துள்ள சூழலில், இந்தியாவுக்கென தனியாக டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கியே இந்த ஆண்டு முதல் வெளியிடும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்திருக்கிறார்.
அவர் தனது பட்ஜெட் உரையில், "சிபிடிசி (CBDC) எனப்படும், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும். இது டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும். டிஜிட்டல் ரூபாய் திறமையான மற்றும் மலிவான நாணய மேலாண்மைக்கு வழிவகுக்கும்.
எனவே, பிளாக்செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ரிசர்வ் வங்கி 2022ஆம் ஆண்டில் டிஜிட்டல் ரூபாயை வெளியிடும்" என கூறியிருக்கிறார்.
அறிவியல் அதிசயம்: மனிதன் மரணத்தை வெல்வது சாத்தியமா?
பட மூலாதாரம், Getty Images
வயது வித்தியாசம் பார்க்காமல், அனைவருக்கும் மரணபயம் காட்டி விட்ட இந்த கொரோனா காலத்தில், இத்தலைப்பு உங்களுக்கு நகைப்பை ஏற்படுத்தலாம். `உலக போர்க்காலத்தில் அதிமுக்கிய கண்டுபிடிப்புகள் நிகழும்`, எனும் வரலாற்று கூற்றுக்கு ஏற்ப, கிருமிகளுக்கு எதிரான இப்போரில், மனித வரலாற்றையே புரட்டிப் போடும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று, `நீடித்த இளமை சாத்தியம்` என்பதற்கான அறிவியல் சான்று. இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.
பட்ஜெட் 2022: "ஏழை என்ற வார்த்தை இரு முறை மட்டுமே வருகிறது, இது மோசமான முதலாளித்துவ பட்ஜெட்" - ப.சிதம்பரம்
நாடாளுமன்றத்தில் 2022ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது, 'ஏழை' என்ற வார்த்தை இரண்டு முறை மட்டுமே வந்ததாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் கூறியிருக்கிறார்.
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிதம்பரம், "ஏழைகள்" என்ற வார்த்தை பாரா 6இல் இரண்டு முறை மட்டுமே வருகிறது. மேலும் இந்த நாட்டில் ஏழைகள் இருப்பதை நினைவில் வைத்திருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்.
"மக்கள் இந்த முதலாளித்துவ பட்ஜெட்டை நிராகரிப்பார்கள். இன்றைய பட்ஜெட் உரையானது நிதியமைச்சரால் இதுவரை வாசிக்கப்படாத முதலாளித்துவ உரையாகும்", என்று சிதம்பரம் தெரிவித்தார்.
மூலதன செலவு, வட்டியில்லா கடன், சுருக்கமான உரையை தவிர வேறெதுவும் அதில் குறிப்பிடும்படி இல்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை கோடிட்டுக் மட்டுமே காட்டியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அதனால் தற்போதைய நிகழ்கால கட்டத்தை பற்றி கவனம் கொள்ளத் தேவையில்லை என்று மத்திய அரசு நம்புகிறது. அவர்கள் அறிவித்துள்ள அந்த ‘அமிர்த காலம்' விடியும் வரை பொதுமக்கள் பொறுமையாக காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இது இந்திய மக்களை கேலி செய்யும் செயல் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பட்ஜெட் 2022: நிர்மலா சீதாராமனின் அறிக்கையில் ரயில்வே துறைக்கு என்ன கிடைத்தது?
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.1,40,367.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகை, கடந்த நிதியாண்டின் திருத்தப்பட்ட எண்ணிக்கையை விட ரூ.20,311 கோடி அதிகம்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அடுத்த 3 ஆண்டுகளில் 400 "வந்தே பாரத்" ரயில்கள் தயாரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ரயில்வே அமைச்சகம் உள்ளூர் தயாரிப்புகளுக்கு பயனளிக்கும் வகையில் "ஒரே நிலையம் ஒரே தயாரிப்பு" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும், சிறு விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான தளவாடங்களை ரயில்வே மேம்படுத்தும்," என்று தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டை வரவேற்று பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் மூலம், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என கூறியுள்ளார். உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அரியலூர் மாணவியின் இறப்பு: முதலமைச்சர் மவுனம் ஏன் ? - பாஜக விசாரணைக் குழு கேள்வி
பட மூலாதாரம், Abinav
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில்
தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்கிறது. முதலமைச்சர் ஏன் மெளனமாக இருக்கிறார் ? என்று பாரதிய ஜனதா கட்சி நியமித்துள்ள உண்மை கண்டறியும் குழு
கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார்
பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 12ஆம் வகுப்பு மாணவி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு, கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார். அவரை மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதால்தான்
தற்கொலை செய்து கொண்டார் என்று பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர்
குற்றம்ம்சாட்டி போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய பாஜக சார்பில் மத்திய பிரதேச எம்.பி சந்தியா
ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அமைத்தார். அக்குழுவில் நடிகையும் தெலங்கானா முன்னாள்
எம்.பியுமான விஜயசாந்தி, கர்நாடகத்தின் கீதா, மகாராஷ்ட்ராவின் சித்ரா ஆகிய நான்கு பேர் கொண்ட குழு இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இன்று தங்களுடைய கள விசாரணையைத்
தொடங்கியுள்ளனர்.
இதையொட்டி, அரியலூர் மாவட்டம்
வடுகபாளையத்தில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்ற பாஜகவின் குழு அவரது பெற்றோரிடம் நடந்த நிகழ்வுகளைக் கேட்டறிந்தது.
இந்த குழுவில் இடம்பெற்றுள்ள விஜயசாந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மதம்
மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான், மாணவி தற்கொலை
செய்து கொண்டார். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை மூளைச் சலவை செய்து, மதம் மாறச் சொல்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இந்த
தற்கொலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்கிறது. முதலமைச்சர் ஏன் மவுனமாக
இருக்கிறார்? இதை திசை திருப்புகிறார்கள். பா.ஜ.க மதத்தை வைத்து
அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். மதத்தை வைத்து அரசியல் செய்து, ஓட்டும் வாங்கும் அவசியம் பாஜகவிற்கு இல்லை.
மாணவியின் தற்கொலைக்கு
காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய்
இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பட்ஜெட் 2022: சாமானியர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கிய நிதிநிலை அறிக்கை - பிரதமர் நரேந்திர மோதி
பட மூலாதாரம், PMO
படக்குறிப்பு, நரேந்திர மோதி, இந்திய பிரதமர்
நாடாளுமன்றத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை, சாமானியர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதன் சிறப்பு அம்சங்களை ஒரு காணொளி மூலம் வெளியிட்டிருக்கிறார் நரேந்திர மோதி. அதில் அவர் பேசியது:
100 ஆண்டுகால பயங்கரமான பேரிடருக்கு மத்தியில் வளர்ச்சிக்கான புதிய நம்பிக்கையை இந்த பட்ஜெட் கொண்டு வந்துள்ளது.
இந்த பட்ஜெட், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், சாமானியர்களுக்கு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
இந்த பட்ஜெட் அதிக உள்கட்டமைப்பு, அதிக முதலீடு, அதிக வளர்ச்சி மற்றும் அதிக வேலை வாய்ப்புகளின் புதிய சாத்தியங்கள் நிறைந்து காணப்படுகிறது.
இது பசுமை வேலை வாய்ப்புத் துறையில் வாய்ப்புகளை திறந்துள்ளது. கடந்த சில மணி நேரங்களாக இந்த பட்ஜெட்டுக்கு அனைத்து துறைகளிலும் வரவேற்பு கிடைத்துள்ளதையும், சாமானிய மக்களிடம் இருந்து கிடைத்துள்ள நேர்மறையான பதிலையும் பார்க்கிறேன்.
இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சம் ஏழைகளின் நலனாகும். ஒவ்வொரு ஏழைக்கும் ஒரு 'பக்கா' வீடு, குழாயில் குடிநீர், கழிப்பறை, எரிவாயு வசதி, இவை அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனுடன், நவீன இணைய இணைப்புக்கும் சமமான முக்கியத்துவம் உள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக, இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு போன்ற பகுதிகளில் பர்வத்மாலா திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டம் மலைகளில் நவீன போக்குவரத்து அமைப்பை உருவாக்கும். இதன் மூலம் நமது எல்லையில் உள்ள கிராமங்கள் மேலும் உயிர்ப்புடன் இருக்கும்.
இந்திய மக்களின் நம்பிக்கையுடன், கங்கை அன்னையை சுத்தம் செய்வதோடு விவசாயிகளின் நலனுக்காகவும் ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட், உத்தரபிரதேசம், பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஓடும் கங்கையை ஒட்டிய, இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்.
இந்த பட்ஜெட்டில், கடன் உத்தரவாதத்தில் சாதனை நிகழ்த்தும் வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சிறு, குறு, நடுத்தர துறையானது, உள்நாட்டுத் தொழில்துறைக்கு பாதுகாப்பு மூலதன பட்ஜெட்டில் 68% ஒதுக்குவதன் மூலம் பெரும் பலனைப் பெறும்.
மக்கள் சார்பு மற்றும் முற்போக்கான இந்த பட்ஜெட்டுக்காக நிதியமைச்சர் நிர்மலா மற்றும் அவரது அனைத்து குழுவினரையும் வாழ்த்துகிறேன். நாளை காலை 11 மணிக்கு பட்ஜெட் மற்றும் சுயசார்பு இந்தியா குறித்து பேச பாஜக என்னை அழைத்துள்ளது. நாளை 11 மணிக்கு பட்ஜெட் குறித்து விரிவாக பேசுகிறேன் என்று நரேந்திர மோதி கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தமிழக மீனவர்கள் 21 பேரை பிப்ரவரி 7வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடல் எல்லைக்குள் நேற்று நள்ளிரவில் எல்லை தாண்டி நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் 21 பேரை வரும் 7ஆம் தேதிவரை காவலில் வைக்க இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் நீதிபதி கிஷாந்தன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து கைதான தமிழக மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகு அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, அரியலூர் மாணவி இறப்பு விவகாரம்: பாஜக குழு பெற்றோரிடம் விசாரணை
பட மூலாதாரம், ABINAV
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து பாஜக அமைத்த குழு இன்று விசாரணை நடத்தி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த அரியலூர் வடுகபாளையத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, கடந்த மாதம் 19ம் தேதி உயிரிழந்தார். மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதால், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி, போராட்டம் நடத்தின. இதையடுத்து, பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் ஜே.பி நட்டா இது குறித்து விசாரணை நடத்த பாஜகவின் மத்திய பிரதேச எம்.பி சந்தியா ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
இதையடுத்து, பாஜக விசாரணைக்குழு தலைவி சந்தியா ராய், நடிகையும் தெலங்கானா முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி, கர்நாடகத்தின் கீதா, மகாராஷ்டிராவின் சித்ரா ஆகிய நான்கு பேர் கொண்ட குழு இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அரியலூரில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ள குழு, பெற்றோர், சகோதரர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி இறப்பு குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ப்ரியாங்க் கனூங்கோ தலைமையிலான குழு தஞ்சாவூர் மற்றும் அரியலூரில் நேற்று விசாரணை நடத்தினர்.
பட மூலாதாரம், ABHINAV
"மோதி அரசின் ஜீரோ பட்ஜெட்" - ராகுல் விமர்சனம்
2022-23 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பயனில்லா பட்ஜெட் என்று விமர்சித்திருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், மோதி அரசின் ஜீரோ பட்ஜெட்டில் எதுவும் இல்லை.
சம்பளம் வாங்கும் வகுப்பினர் - நடுத்தர வகுப்பினர், நடுத்தரவர்க்கம், ஏழைகள் மற்றும் வறியநிலை மக்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறு-குறு-நடுத்தர நிறுவனங்கள் என எவருக்கும் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பட்ஜெட் 2022: வேலையின்மை, பணவீக்கம் போன்றவற்றை எதிர்கொள்ளும் சாமானியர்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை: மமதா பானர்ஜி
மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து தனது ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார்.
வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை எதிர்கொள்ளும் எளிய மக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் சாமானியர்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை, அரசாங்கம் பெரிய விஷயங்களில் நஷ்டமடைந்துள்ளது. இது பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
புதுச்சேரியில் மின் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்:தனியார்மயத்திற்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலை கண்டித்து ஊழியர்கள் பலகட்ட போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக போராட்ட குழு அறிவித்திருந்தது. இதனிடையே போராட்டக் குழு நடவடிக்கைகளுக்கு மின்துறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், பல்வேறு போராட்டங்களின் தொடர்ச்சியாக மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் திட்டமிட்டபடி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களை சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மின்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக மின் பராமரிப்பு மற்றும் குடிநீர் விநியோகம், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது மற்றும் மின்துறை அலுவலகங்களில் கூட்டமாக கூடுவதை தடுக்க மின்துறை வளாகத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்துறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் இன்று ஆளுநர் மற்றும் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இதனிடையே தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய பட்ஜெட் அறிவிப்புகள் நடைமுறைக்கு வர வேண்டும் - விவசாயிகள் கருத்து
பட மூலாதாரம், PR Pandian
இந்திய பட்ஜெட்டில் விவசாயம் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து விவசாயிகள் சங்க தலைவர்கள் வரவேற்றும், அதிருப்தியை வெளிப்படுத்தியும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ''இந்த பட்ஜெட்டில் கோதாவரி - காவிரி உள்ளிட்ட நதிகள் இணைப்பு குறித்து அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பை முந்தைய பட்ஜெட்டுகளிலும் அறிவித்தனர். இன்னும் நடைமுறைக்கு வராமல், அறிவிப்பாக மட்டும் தொடர்கிறது. அதேபோல் ஜீரோ பட்ஜெட் விவசாயம், இயற்கை விவசாயம் குறித்தும் ஏற்கெனவே அறிவித்ததுதான்.
இதை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இல்லை. ஆகவே, வாய்ஜாலத்தால், மூடி மறைக்கும் பட்ஜெட்டாக உள்ளது. விவசாயத்தில், 20 சதவீதம் அரசு முதலீடு என்றால், 80 சதவீதம் தனியார் பங்களிப்பு என்கிறார்கள். இது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைக்கு எதிரானது.
குறைந்தபட்ச ஆதார விலை நிதி ஒதுக்கீடு, நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் போதுதான் உண்மை நிலை தெரிய வரும்'' என்கிறார்.
அகில மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம், ''இயற்கை விவசாயம் மேம்படுத்தப்படும். நதிகள் இணைப்பு. குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
ஆனால், இவை வெறும் அறிவிப்பாக மட்டும் இருக்க கூடாது. உடனே நடைமுறைக்கு வர வேண்டும். இது குறித்த செயல்திட்டங்களை வெளியிட்டு, ஆக்கபூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இயற்கை விவசாயத்தில், புதிய எளிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் வேண்டும். இயற்கை வேளாண்மையின் அவசியத்தை எடுத்துச் சொல்லும் வகையில் கிராமவாரியாக பயிற்சிகள் அளிக்கப்படும்'' என்றார்.
தமிழக விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஜீவக்குமார் கூறுகையில், ''கடந்த 21.12.2021 ல் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி) அறிவிக்கப் போவதாக எழுதித்தந்தது. இப்போது ஏமாற்றி விட்டது. உழவர்களின் முதுகில் கட்டாரியால் ஓங்கி குத்திவிட்டது. வேளாண்துறையில் 80 சதவிகிதம் தனியார் பங்களிப்பு என்பது, கார்ப்பரேட் நிறுவங்களுக்கே சாதகமாக இருக்கும். விவசாயிகளுக்கு உகந்தது அல்ல.'' என்றார்.
பட்ஜெட் 2022: ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையாற்றிய நிர்மலா சீதாராமன்
பட மூலாதாரம், PIB
2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற அலுவல் தொடங்கியதும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்கத் தொடங்கினார்.
கேள்வி நேரமின்றி நேரடியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கம் முந்தைய ஆண்டுகளைப் போலவே தொடங்கியது. ஒன்றரை மணி நேரம் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை வாசித்த அவர், சரியாக நண்பகல் 12.30 மணிக்கு தமது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.
பட்ஜெட் 2022: வரிகள் யாருக்கு, விலக்கு யாருக்கு? - நிர்மலா சீதாராமன்
ஜிஎஸ்டியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது, ஆனால் பெரிய சவால்கள் இருந்தன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் சொத்து பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி. டிஜிட்டல் சொத்துகளின் பரிசுகளுக்கும் வரி விதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மெய்நிகர் மற்றும் டிஜிட்டல் சொத்துக்களை விற்பனை செய்தல் அல்லது கையகப்படுத்துதல் ஆகியவற்றில் இருந்து வரும் வருமானம் இதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களிடையே சமத்துவம் தேவை என்ற நோக்கத்துடன் மாநில அரசு ஊழியர்களுக்கு EPF மீதான வரி விலக்கு அளிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கங்களுக்கான வரி விகிதம் 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பர்வதமாலா திட்டம் அறிமுகம்: நிர்மலா சீதாராமன்
பாரம்பரிய மலைப்பகுதி சாலைகளுக்கான பர்வதமாலா திட்டம், தனியார் பொதுத்துறை கூட்டு முயற்சியின் கீழ் கொண்டு வரப்படும்.
பட மூலாதாரம், ㅤ
படக்குறிப்பு, பர்வதமாலா திட்டம் அறிமுகம்
வந்துகொண்டிருக்கும் செய்தி, பட்ஜெட் 2022: இந்தியாவில் வரி செலுத்துவோர் இப்போது 2 ஆண்டுகளுக்குள் தங்களின் வருமான விவரத்தை புதுப்பிக்கலாம் - வேறு என்ன அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை....
பட மூலாதாரம், Income Tax Dept
வருமான வரி தாக்கல் செய்து அதில் இருக்கும் பிழையை திருத்த வேண்டுமானால் அதை இரண்டு ஆண்டுகளில் வரி செலுத்துவோர் செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மதிப்பீட்டு ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் புதுப்பிக்கப்பட்ட ரிட்டனை அவர்கள் தாக்கல் செய்யலாம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அவர் அறிவித்துள்ள பிற அம்சங்கள்:
2022-23இல் இந்திய அரசின் பயனுள்ள மூலதனச் செலவு ரூ.10.68 லட்சம் கோடியாக இருக்கும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1% ஆகும்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த டிஜிட்டல் நாணயம். 2022-23 முதல் டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும்.
டிஜிட்டல் வங்கி சேவையை ஒவ்வொரு குடிமகனுக்கும் எடுத்துச் செல்லும் நோக்கில், நாட்டின் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி பிரிவுகள் தொடங்கப்படும்.
அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ECLGS) 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம்வரை நீட்டிக்கப்படும்,
உத்தரவாதத் தொகை ரூ.50,000 கோடியிலிருந்து மொத்தம் ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
பேட்டரி ஸ்வாப்பிங் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பாட்டுக்கு இடையேயான சேவை உருவாக்கப்படும்.
2025க்குள் கிராமங்களில் ஆப்டிகல் ஃபைபர் அமைக்கும் பணி நிறைவடையும்.
பொருளாதாரத்தில் கார்பன் அடிச்சுவடு முன்முயற்சியைக் குறைக்க பொதுத்துறை திட்டங்களில் இறையாண்மை பசுமைப் பத்திரங்கள் வெளியிடப்படும்.
வரி விதிப்பு முறை மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஐடி ரிட்டர்ன்களை தாக்கல் செய்த 2 ஆண்டுகளுக்குள் மக்கள் புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்யலாம்.
கூட்டுறவு நிறுவனங்களுக்கான மாற்று குறைந்தபட்ச வரி 18.5% லிருந்து 15% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.