டோக்யோ ஒலிம்பிக் நிறைவு விழாவில் ஜப்பான் கொடியுடன் கிரீஸ், பிரான்ஸ் கொடிகள் ஏற்றப்பட்டது ஏன்?

2016க்கு பின் 2020இல் நடந்திருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டன. எனினும் 'டோக்யோ ஒலிம்பிக் 2020' என்றே இந்த ஒலிம்பிக் அலுவல்பூர்வமாக அழைக்கப்பட்டது

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. வெளிநாட்டினர் உம்ரா பயணத்தை அனுமதிக்க சௌதி முடிவு

    உம்ரா புனித பயணத்தின் ஒரு பகுதியாக மெக்கா மற்றும் மதினா ஆகிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தால் அவர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க தொடங்கியுள்ளது சௌதி அரேபிய அரசு.

    சௌதி அரேபியா வருவதற்கான பயண கோரிக்கைகளை திங்கள் முதல் அந்நாட்டு அதிகாரிகள் பரிசீலிக்க உள்ளனர்.

    mecca medina

    பட மூலாதாரம், Reuters

  3. டோக்யோ ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டது

    டோக்யோ ஒலிம்பிக் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் அங்குள்ள ஒலிம்பிக் மைதானத்தில் ஏற்றப்பட்டிருந்த ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. பாரிஸ் மேயரிடம் வழங்கப்பட்ட ஒலிம்பிக் கொடி

    டோக்யோ ஆளுநர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக் இடம் ஒலிம்பிக் கொடியை ஒப்படைத்தார். அவரால் பாரிஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோவிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது.

  5. பாரிஸ் நகரில் கொண்டாட்டங்கள்

    இப்போது பாரிசில் பளிச்சென்ற பகல் நேரம். டோக்யோவில் விளக்குகள் ஒளிரும் இரவு நேரம்.

    ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக, அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள நகரின் கொண்டாட்டங்கள், நடப்பு ஒலிம்பிக்கின் நிறைவு விழா நிகழ்வில் நேரலையாக ஒளிபரப்பானது.

    2024 ஒலிம்பிக் நடக்கவுள்ள பாரிசில் நிகழும் கொண்டாட்டங்கள் டோக்யோ ஒலிம்பிக் மைதானத்தில் காட்டப்பட்டது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. ஒலிம்பிக் மைதானத்தில் பிரான்ஸ் கொடி ஏன்?

    அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2024இல் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கிறது. அந்த ஒலிம்பிக் போட்டிக்கு உலகை வரவேற்கும் வகையில், ஒலிம்பிக் மைதானத்தில் பிரான்ஸ் நாட்டின் கொடியும் கிரீஸ் கொடிக்கு அருகே இறுதியாக ஏற்றப்பட்டது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. தன்னார்வலர்களின் பங்குக்கு அங்கீகாரம்

    ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்த உதவிய தன்னார்வலர்களின் பங்கை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் அவர்களது படங்கள் ஒலிம்பிக் ஸ்டேடியம் திரையில் காட்டப்பட்டது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. நவீன ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறை

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டிகளில் வென்றவர்களுக்கான பதக்கங்கள் இந்த நிறைவு விழாவில் வழங்கப்பட்டன.

    நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வெற்றி நிகழ்ச்சி ஒன்றாக நடத்தப்படுவது, கோடைக்கால ஒலிம்பிக் வரலாற்றில் இதுவே முதல் முறை.

    மாரத்தான் ஓட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வென்ற இருவருமே கென்யாவைச் சேர்ந்தவர்கள்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. 'ஒலிம்பிக்கின் பிறப்பிடம்' - கிரீஸ் நாட்டுக்கு கௌரவம்

    ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் பிறப்பிடமான கிரேக்க நாட்டை (கிரீஸ்) கௌரவிக்கும் வகையில், ஒலிம்பிக் நிறைவு விழாவின்போது, ஒலிம்பிக் கொடி மற்றும் ஜப்பான் தேசியக் கொடியுடன் கிரீஸ் தேசியக் கொடியும் ஒலிம்பிக் மைதானத்தில் ஏற்றப்பட்டது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. 'விருந்தினர்களுக்காக' அமைக்கப்பட்ட புல்வெளி

    'ஒமோதெனாஷி' வழக்கத்தைக் கடைபிடிக்கும் விதத்தில், விளையாட்டு வீரர்கள் தளர்வாக உணர்வதற்காக ஒலிம்பிக் மைதானத்தின் தளம் புல்வெளியாக மாற்றப்பட்டிருந்தது.

    'ஒமோதெனாஷி' என்பது 'விருந்தினர்களை முழு மனதுடன் கவனித்துக் கொள்ளும்' ஜப்பானிய பாரம்பரிய வழக்கத்தைக் குறிக்கும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. விளையாட்டு ரசிகர்களின் படங்கள்

    பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் நடந்தாலும் ஒலிம்பிக் நிறைவு விழாவில் தத்தமது நாடுகளில் இருந்தபடியே கலந்துகொள்ளும் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களின் படங்கள் ஒரு பெரிய திரையில் காட்டப்பட்டது.

    காணொளிகளை அனுப்புவதற்கான இணைப்பை ஒலிம்பிக் கமிட்டி இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. டோக்யோ ஒலிம்பிக் - நிறைவு நிகழ்ச்சி

    டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்திய அணிவகுப்பை வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடி ஏந்தி வழிநடத்திச் செல்கிறார்.

    இந்த ஒலிம்பிக்கில் தொடக்க விழா ஜூலை 23ஆம் தேதி நடந்தது.

    2016க்கு பின் 2020இல் நடந்திருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டன. எனினும் 'டோக்யோ ஒலிம்பிக் 2020' என்றே இந்த ஒலிம்பிக் அலுவல்பூர்வமாக அழைக்கப்பட்டது

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. 'வேட்டி, சட்டை அணிந்து வந்தால் சிக்கன் பிரியாணி இலவசம்', திறப்பு விழா சலுகை

    அருப்புக்கோட்டையில் திறப்பு விழா சலுகையாக வேட்டி,சட்டை அணிந்து வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணிகள் இலவசம் என்ற அறிவிப்பால் உணவகம் ஒன்றின் முன்பு பொதுமக்கள் குவிந்தனர்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தின் இன்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு சலுகையாக தமிழர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை சட்டை மட்டும் அணிந்து வந்தால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என்றும், வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேட்டி அணிந்து வந்தால் இரண்டு சிக்கன் பிரியாணி இலவசம் எனவும் இதற்கு ஒருபடி மேலாக திமுக கரை வேட்டி அணிந்து வந்தால் மூன்று சிக்கன் பிரியாணி இலவசம் என்ற சிறப்பு திறப்பு விழா சலுகை அந்த உணவகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த அறிவிப்பை அடுத்து கடை முன்பு கூட்டம் கூடுவதை தவிர்க்க சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பே மூங்கில் தடுப்பு கட்டைகள் கொண்டு அமைக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்று கடை திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இலவச பிரியாணி வாங்க பிரியாணி பிரியர்கள் கடையின் முன்பு முண்டியடித்துக் கூடினர்.

    பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் உணவக நிர்வாகம் வரிசையில் நின்ற அனைவருக்கும் இலவச சிக்கன் பிரியாணியை வழங்கினார்கள்.

    உணவக நிர்வாகம் கூறியதைப் போல் வேட்டி சட்டை அணிந்து வந்தால் சிக்கன் பிரியாணிகள் இலவசமாக வழங்கப்பட்டதுடன் மொத்தம் 3000 நபருக்கு இலவச பிரயாணிகள் வழங்கப்பட்டன.

  14. 1,200 மது பாட்டில்கள் அழிப்பு

    புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் காவல் நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட 1,200 மதுபாட்டில்களை காவல் துறையினர் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முழு ஊரடங்கின்போது மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்ததை பயன்படுத்திக் கொண்ட சிலர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தனர். இதையடுத்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 1,200 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட 1,200 பாட்டில்களை தரையில் ஊற்றி போலீசார் அழித்தனர்.

  15. சட்ட உதவி சேவைக்கான செயலி அறிமுகம்

    இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்படும் சட்ட உதவி சேவைக்கான செயலி சட்டப் பணிகள், கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் சட்டப் பணியாளர்கள் அனைவரது செல்பேசியிலும் கட்டாயமாக தரவிறக்கம் செய்யப்படும். இதன் மூலம் நாட்டில் எங்கே இருந்தாலும் சில நொடிகளில் சட்ட உதவி சேவைக்கான விண்ணப்பத்தை அவர்களால் சமர்ப்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. ராகுல்காந்தி டிவிட்டர் கணக்கு தாற்காலிக முடக்கம்

    ராகுல்காந்தி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ராகுல் காந்தி

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது என்றும். அதை மீட்பதற்கு உரிய நடைமுறை பின்பற்றப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. அது மீட்கப்படும் வரை அவர் வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் தொடர்பில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளது காங்கிரஸ். இந்த முடக்கம் காரணமாக ராகுல் காந்தியால் புதிதாக எதுவும் ட்வீட் செய்ய முடியாது. ஆனால், அவரது பழைய ட்வீட்களைப் பார்க்க முடியும். டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஒரு சிறுமியின் குடும்பத்தை சந்தித்து சமீபத்தில் ஆறுதல் கூறியிருந்தார் ராகுல்காந்தி. அது தொடர்பான படம் ஒன்றையும் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் அவர். பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற சட்டத்தை மீறும்வகையில் இந்த படம் இருப்பதாக குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் குற்றம்சாட்டியது. எனவே இந்த ட்வீட் மீது நடவடிக்கை எடுக்கும்படி ட்விட்டரையும், டெல்லி போலீசையும் கேட்டுக்கொண்டது ஆணையம். இந்நிலையில் அந்த ட்வீட்டை நீக்கியது ட்விட்டர். இந்த பின்னணியில்தான் ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

  17. குழந்தை பாலியல் காட்சிகளை கண்டுபிடிக்கும் ஆப்பிள் தொழில்நுட்பத்துக்கு எதிர்ப்பு

    ஆப்பிளின் ஐ கிளவுடு தொகுப்பில் குழந்தை பாலியல் காட்சிகளைக் கொண்டிருக்கும் படம் ஏதும் சேகரிக்கப்பட்டால் அதை ஸ்கேன் செய்து கண்டுபிடித்து, பிறகு அது குறித்து அரசு அதிகாரிகளுக்கும் ஆப்பிள் மூலமே புகார் அளிக்கும் வகையில் உருவாக்கப்படும் தொழில்நுட்பத்துக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    தனி நபர் தரவுகளின் தனியுரிமைக்குள் நுழையும் செயல் இது என்றும், இது போல செய்தால், மற்ற எல்லாவிதமான தரவுகளையும் கண்காணிக்க அரசிடம் இருந்து அழுத்தம் வரலாம் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

  18. திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு: தலைவர்கள் இரங்கல்

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (84) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக 1981 முதல் 84 வரையில் திண்டிவனம் ராமமூர்த்தி இருந்துள்ளார். 1984ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2011 சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில்இருந்து விலகினார். இதையடுத்து தனிக்கட்சி ஒன்றைத் தொடங்கி ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர், அந்தக் கட்சியையும் கலைத்துவிட்டு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    தேசியவாத காங்கிரசின் தமிழ்நாடு பிரிவு தலைவராகப் பதவி வகித்து வந்தார் திண்டிவனம் ராமமூர்த்தி. ஒருகட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தமிழ்நாடு கமிட்டி கலைக்கப்படுவதாக அக்கட்சியின் அகில இந்திய தலைமை அறிவித்தது. இதன்பின்னர், அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியேஇருந்தவர், இன்று காலை இறந்தார்.

    சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள வீட்டில் திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.