ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதிப் பிரியாவிடை

பிரிட்டனை நீண்ட காலம் ஆளுகை செய்த இரண்டாம் எலிசபெத் ராணிக்கு இறுதிப் பிரியாவிடை அளிக்கப்பட்டது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பரணி தரன்

  1. ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப் பிரியாவிடை - உணர்ச்சிமயமான இறுதி நிகழ்வு

    ராணி எலிசபெத்

    ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு இறுதிப்பிரியாவிடை கொடுக்கப்பட்டது.

    முன்னதாக, ராணியின் உடலுடன் புறப்பட்ட இறுதி ஊர்வலம் முதலாவதாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நின்றது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மதக் கூட்டம் நடைபெற்றது.

    இதன் பிறகு இறுதிப் பயணம் வின்ட்சர் கோட்டையை நோக்கிச் சென்றது. அங்கு ராணியின் குடும்ப உறுப்பினர்கள் இறுதிப் பிரியாவிடை அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    ராணி இரண்டாம் எலிசபெத்

    பட மூலாதாரம், PA Media

    படக்குறிப்பு, ராணியின் சவப்பெட்டியை தேவாலயத்தில் வைப்பதற்கு முன், அதை சுமந்து வரும் சவப்பெட்டி சுமையாளர்கள் குழுவினர்

    கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச் சடங்கு இந்த நாட்டில் நடந்தது. அப்போது நிலவிய அதே உணர்ச்சிமயம் இந்த நாளில் காணப்படுகிறது.

    ராணியின் வாழ்க்கை வரலாற்றை சுமக்கும் தகவல்கள் தொடர்பான கட்டுரைகளில் சில, உங்கள் பார்வைக்கு

    காணொளிக் குறிப்பு, ராணி இரண்டாம் எலிசபெத் சவப்பெட்டிக்கு காவல் நின்ற இளவரசர்கள்
  2. ராணி இரண்டாம் எலிசபெத் இறுதி நிகழ்வின் கடைசி தருணங்கள்

    ராணி எலிசபெத்

    பட மூலாதாரம், PA Media

    ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அரச மரியாதைக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கடைசி தருண நிகழ்வுகள் தற்போது நேரலையாக ஒளிபரப்பாகி வருகின்றன.

    எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதால், புதிதாக அஞ்சலி செலுத்த வருவோரின் வருகை கட்டுப்படுத்தப்பட்டு பல்வேறு சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன.

    லண்டன் நகர வீதிகளில் மக்கள் கிட்டத்தட்ட 11கிமீ தூரத்துக்கு வரிசையில் காத்திருந்து ஊர்வலமாக கொண்டு வரப்படும் ராணியின் உடலை பார்க்க 24 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கிறார்கள்.

  3. மக்கள் அளிக்கும் ஆதரவுக்கும் ஆறுதலுக்கும் நன்றி தெரிவித்த அரசர் சார்ல்ஸ்

    ராணி எலிசபெத்

    பட மூலாதாரம், Reuters

    அரசர் மூன்றாம் சார்ல்ஸ், மறைந்த தமது தாயாருக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களின் எண்ணிக்கையைக் கண்டு "அளவு கடந்து உணர்ச்சிவசப்பட்டதாக " கூறினார்.

    "கடந்த 10 நாட்களில், இந்த நாட்டிலிருந்தும் உலகம் முழுவதிலுமிருந்தும் எங்களுக்கு தெரிவிக்கப்பட்ட இரங்கல் மற்றும் ஆதரவான செய்திகள், என்னையும் எனது மனைவியையும் மிகவும் ஆழமாகத் தொட்டுள்ளன," என்று அவர் தெரிவித்தார்.

    "லண்டன், எடின்பரோ, ஹில்ஸ்பரோ மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களில், எனது அன்பான அம்மா மற்றும் மறைந்த ராணியின் வாழ்நாள் சேவைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த சிரமம் எடுத்துக் கொண்ட அனைவரின் செயலாலும் நாங்கள் அளவிட முடியாத அளவுக்கு உணர்ச்சிவயப்பட்டுள்ளோம்," என்று அவர் கூறியுள்ளார்.

  4. வணக்கம்

    வணக்கம், பிரிட்டனை நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதிப் பிரியாவிடை அளிக்க பிரிட்டன் தயாராகி வரும் வேளையில் எங்கள் நேரடி ஒளிபரப்பிற்கு உங்களை வரவேற்கிறோம்.

    ராணியின் இறுதிச் சடங்கு மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பிரிட்டன் உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு நடைபெறும். இந்த நிகழ்வில் 2,000 பேர் கலந்து கொள்வார்கள்.

    உலக தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்ப உறுப்பினர்கள், கடந்த கால மற்றும் தற்போதைய பிரிட்டன் பிரதமர்கள், பொது வாழ்க்கையில் அளப்பரிய பங்காற்றிய முக்கிய பிரமுகர்கள் ராணியின் இறுதி நிகழ்வு சேவையில் பங்கேற்பார்கள்.

    இந்த முக்கியமான நாளில் அனைத்து முன்னேற்றங்களுக்கும் எங்களின் இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.