நன்றி நேயர்களே!
இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி. நாளை மீண்டும் வேறொரு நேரலைப் பக்கத்தில் சந்திப்போம்.
இந்த இரவு இனியதாகட்டும்.
உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் என்று கூறியிருக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ்.
ஆ. லட்சுமி காந்த் பாரதி
இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி. நாளை மீண்டும் வேறொரு நேரலைப் பக்கத்தில் சந்திப்போம்.
இந்த இரவு இனியதாகட்டும்.

பட மூலாதாரம், ACTOR VIJAY
தனது காருக்கு வரிவிலக்குக் கோரிய நடிகர் விஜய் குறித்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் கூறிய எதிர்மறையான கருத்துகளை நீக்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டனிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் 'கோஸ்ட்' சொகுசு காரை நடிகர் விஜய் வாங்கினார். கார் வாங்கும்போதே இறக்குமதி வரி செலுத்தப்பட்டிருந்தது.
இந்த 'கோஸ்ட்' காரின் விலை 2012-ல் 2.25 கோடி ரூபாய். இதனை சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தபோது காருக்கான நுழைவு வரி செலுத்த வேண்டும் எனவும் அதன் பின்பே காரை பதிவு செய்து பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல லட்சம் மதிப்பிலான ஒரு மீன்பிடி விசைப்படகு அரசுடமை ஆக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டணத்திலிருந்து கடந்த டிசம்பர் மாதம் 18 மற்றும் 20ம் தேதிகளில் மீன்பிடிக்கச் சென்ற 56 தமிழக மீனவர்களையும் அவர்களது 8 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு அருகே வைத்து கைது செய்து மீனவர்களை படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதில் ஜெகதாபட்டிணத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களில் ஒருவர் சிறுவர் என்பதால் அவரை தவிர்த்து எஞ்சியுள்ள 55 மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
மீனவர்களின் வழக்கு தொடர்ந்து மூன்றாவது முறை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அதேபோல் மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதற்கான ஜிபிஎஸ் எண்ணை உறுதி செய்து வழக்கில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து நீதிமன்றத்தால் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தயார் செய்த யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களின் வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதிகள் கஜநிதிபாலன் மீனவர்கள் 55 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும் மீனவர்கள் பயன்படுத்திய 7 விசைப்படகுகளின் வழக்கு வரும் ஏப்ரல் மாதம் 1ந் தேதி விசாரணைக்கு வரும் எனவும் அந்த தேதியில் சம்பந்தப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் எஞ்சியுள்ள ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த ஒரு படகின் உரிமையாளர் தற்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதால் உரிமையாளருக்கு தெரிந்தே படகு எல்லை தாண்டி வந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த படகு மட்டும் அரசுடமையாகப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்ய 55 மீனவர்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 56 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கொழும்பில் உள்ள மெருஹானா முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு குளோபல் டைகர் ஃபோரத்தின் விருது வழங்கப்படுகிறது. 2010-ம் ஆண்டு முதல் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 13 நாடுகளில் உள்ள புலிகள் காப்பகங்களிலிருந்து, சத்தியமங்கலம் காப்பகம், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 25 புலிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 80 புலிகள் உள்ளன. 2022-ம் ஆண்டிற்குள் புலிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இலக்கை எட்டியுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டை அறந்தாங்கி சேர்ந்த கவிவர்மன் என்ற சுரேஷ் கண்ணா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த 11 வயது சிறுவன் மீது, தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதில் பாதிக்கப்பட்ட சிறுவன் நான்கு நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்றை அமைத்து, தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் மரணத்தை விசாரிக்க வேண்டும், சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும், சக்தி வாய்ந்த துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்த அனுமதித்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூட உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறும்போது, "கடந்த டிசம்பர் 30-ஆம் தேதியே குறிப்பிட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. இனிவரும் காலங்களிலும் அத்தளம் பயன்படுத்தப்பட மாட்டாது" என உறுதி அளிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

பட மூலாதாரம், .BBC
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
போலியான சுற்றறிக்கை பரவுவதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தெரிவித்துள்ளது. "மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜனவரி 25-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் சுற்றறிக்கை போலியானது", என்று சி.பி.எஸ்.இ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த போலி சுற்றறிக்கையில், பொதுத் தேர்வுக்கான முடிவுகளைப் பெறுவதற்கான செயல்முறை சம்பந்தமான தகவல்களும் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

பட மூலாதாரம், Getty Images
ஹாங்காங்கில் ஒரு செல்லப் பிராணிக்கடை தொழிலாளி வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வெள்ளை எலிகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வெள்ளை எலியிடமிருந்து கடையில் வேலை பார்த்த நபருக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என ஹாங்காங் அதிகாரிகள் கூறுகின்றனர். இது உறுதிப்படுத்தப்படாத நிலையில், விலங்குகளுக்கிடையில் வைரஸ் பிறழ்வடைந்து மனிதர்கள் மத்தியில் புதிய தொற்று பரவல்களை ஏற்படுத்தும் சாத்தியம் குறித்தும் விலங்கு நல அறிவியலாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.
ஹாங்காங்கில் வெள்ளை எலிகளைக் கொல்வது பல நாடுகளில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. மக்கள் வெள்ளை எலிகளை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதில் இருந்து காப்பாற்ற முன்வருகிறார்கள், மற்ற பலர் மரணத்தை எதிர்கொள்ளும் விலங்குகளை மீட்பதற்காக செல்லப்பிராணி கடைகளுக்குச் செல்கின்றனர்.
விலங்குகளுக்கிடையில் ஏற்பட்ட கோவிட் நோய்த் தொற்றுகளில் இது சமீபத்தியது. 32 நாடுகளில் சிங்கம், புலி, பூனை, நாய், லிங்ஸ், மிங்க் வரை பல உயிரினங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக, கடந்த மாதம் உலக விலங்கு நல அமைப்பு கூறியது.
ஆனால் இந்த விலங்குகளில், கிட்டத்தட்ட அனைத்தும் உயிரியல் பூங்காக்கள் மற்றும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்தன. அங்கு சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் ஒப்பீட்டளவில் எளிதானது என்பது குறிப்பிடத்தக்கது.
காட்டு விலங்குகள் தான் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் விலங்கு நல வல்லுநர்கள்.

பட மூலாதாரம், ㅤ
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறையில் அளப்பரிய சேவையில் ஈடுபட்டதற்காக தமிழ்நாடு காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் ஜி. வெங்கடராமன், சிபிசிஐடி ஆய்வாளர் சி. சிவனருள் ஆகியோர் குடியரசு தலைவர் பதக்கம் பெறும் மத்திய உள்துறையின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களுடன் காவல்துறையில் சிறப்புப் பணி செய்ததற்கான பதக்கம், ஐ.ஜிக்கள் வி. பாலகிருஷ்ணன், பிரதீப் குமார், ஆர். சுதாகர், உதவி ஐஜி பி. சரவணன், எஸ்பி பி. கண்ணம்மாள், துணை ஆணையர் வி.கே. சுரேந்திரநாத், எஸ்பி அந்தஸ்திலான கமாண்டன்ட் பதவி வகிக்கும் டி. கார்த்திகேயன், கே. அண்ணாதுரை, கூடுதல் எஸ்பி ஏ. தாமஸ் பிரபாகர், கூடுதல் துணை ஆணையர் வி. இளங்கோவன், உதவி ஆணையர்கள் எஸ். பிரபாகரன், எஸ். முருகவேல், துணை கண்காணிப்பாளர் எம். முரளிதரன், ஆய்வாளர்கள் டி. சண்முகம், வி. இளங்கோவன், ஜி. சிவகணேசன், ஆர். கணேசன், ஆர். பசுபதி ஆகியோருக்கு வழங்கப்படும் என்று இந்திய உ ள்துறை அறிவித்திருக்கிறது.
தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா, புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 3 தமிழக மீனவர்கள் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி இலங்கையை சேர்ந்த அடையாளம் தெரியாத மக்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தாக்கப்பட்ட மீனவர்களிடம் இருந்து 300 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலை, தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 30 லிட்டர் டீசல் ஆகியவை உடன் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், .
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். இதைத் தெரிந்த திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் அவர்களே நீதிமன்றம் சென்று தேர்தலை தள்ளி வைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்" என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
நாமக்கல்லில் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் அஞ்சலி நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான தங்கமணி கலந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, "மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது டாஸ்மாக் கடைகளை மூடினார். பின்னால் எடப்பாடி கே.பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றபோது 500 டாஸ்மாக் கடைகளை மூடினார்.
ஆனால் தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உதாரணமாக பள்ளிபாளையம் நகராட்சியில் இதுவரை டாஸ்மாக் கடைகள் இருந்ததில்லை. தற்போது இரண்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. திமுக அரசு சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக உள்ளது என கூறினார்.
புல்லட்டில் புத்தகங்களை விற்கும் தமிழ்நாட்டின் இளைஞர்கள். தாங்கள் எழுதிய புத்தகங்களை மட்டுமே விற்கத் தொடங்கியவர்கள், இப்போது பல பதிப்பாளர்களின் புத்தகங்களையும் விற்கிறார்கள்.

பட மூலாதாரம், .
கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்பியிருக்கிறார்கள் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள், கூலி உயர்வு கோரி கடந்த ஜனவரி 9ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அவர்களுடன் நடைபெற்ற இரண்டு சுற்று பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாத நிலையில் அவர்களுடைய வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
"இந்திய தேர்தல் ஆணைய நடைமுறைகள் பல்வேறு நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது" என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையமானது கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது.
இதை குறிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாப்படுகிறது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று பிரதமர் நரேந்திர மோதி நமோ செயலி மூலம் குஜராத்தின் பேஜ் சமிதி உறுப்பினர்களுடன் உரையாடினார்.
அப்போது அவர் கூறுகையில், "மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் கொடுப்பது மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையங்கள் இருக்கும் பல நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது நாட்டின் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் நடைமுறைகள் பல்வேறு நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது" என கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், .
தஞ்சை மாவட்ட வடக்கு வீதியில் காளிக்கோயில் சுற்றுச் சுவரை ஒட்டி நான்கடி உயரம் கொண்ட சிமெண்ட் தூணில் இரண்டு அடி உயரத்தில் எம்ஜிஆர் சிலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. சிலையின் அருகே டீக்கடை ஒன்று உள்ளது. இரவு டீ கடைக்காரர் கடையை சாத்திவிட்டு மீண்டும் அதிகாலை 5 மணிக்கு கடையை திறக்க வந்தபோது, அருகில் இருந்த எம்ஜிஆர் சிலை காணாமல் போனதை அறிந்தார்.
இதையடுத்து இந்த பிரச்னை சம்பந்தமாக அதிமுகவினருக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுகவினர் காணாமல் போன எம்.ஜி.ஆர் சிலையை அக்கம்பக்கத்தில் தேடினர்.
பின்னர் தஞ்சை தெற்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சிலையை தேடியபோது எம்.ஜி.ஆர் சிலை அருகே இருந்த பெட்டிக் கடையின் பின்புறம் கண்டெடுக்கப்பட்டது.
பின்பு மீட்கப்பட்ட சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது. தற்போது அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலையைப் பெயர்த்து தூக்கி வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

பட மூலாதாரம், .
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான அமர்வின் 35ஆம் கட்ட விசாரணயின் 2-வது நாள் இன்று. அந்த சம்பவ நாளில் தென் மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பிலிருந்த, தற்போதைய சென்னை காவலர் நலன் பொறுப்பு வகிக்கும் கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் 35-வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. இது வருகிற 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஒருநபர் ஆணையத்தில் இதுவரை நடந்த விசாரணையில் 1,417 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,037 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
35-வது கட்ட அமர்வில் ஆஜராகி விளக்கமளிக்க முன்னாள் காவல்துறை துணைத்தலைவர், தென்மண்டல காவல்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட 6 முக்கிய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒருநபர் ஆணையத்தின் 35-வது கட்ட அமர்வின் முதல் நாள் விசாரணையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டின் போது திருநெல்வேலி சரக டிஐஜி-ஆக பணியிலிருந்த கபில்குமார் சரத்கார் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து இன்று தென் மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பிலிருந்த, தற்போதைய சென்னை காவலர் நலன் பொறுப்பு வகிக்கும் கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ், ஆணையத்தின் முன்பு விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து வரும் வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரனும் ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், .
அரியலூர் மாணவி தற்கொலைக்கு முயன்றபோது அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட செல்பேசி காணொளியை துணை கண்காணிப்பாளர் முன்பு முத்துவேல் ஆஜராகி சமர்ப்பித்தார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில் "எனது மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ள வேண்டும். தஞ்சாவூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மாணவியின் பெற்றோர் தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அந்த வாக்குமூலத்தை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கடந்த ஞாயிறன்று மாணவியின் பெற்றோர் தஞ்சையில் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். பின்னர் மாணவியின் பெற்றோரது வாக்குமூல விவரத்தை ஆய்வு செய்த மதுரை உச்ச நீதிமன்ற கிளை, மனுதாரரின் மகள் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்தாக கூறப்படும் வீடியோ உண்மை தானா என்பது குறித்து தடயவியல் பரிசோதனையில் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
அதனால் அந்த வீடியோவை பதிவு செய்த முத்துவேல் இன்று காலை 10 மணிக்கு வல்லம் முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராகி, வீடியோ எடுத்த செல்போனை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை வல்லம் டிஎஸ்பி பிருந்தா முன்பு மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா, விஷ்வ இந்து பரிஷத், அரியலூர் மாவட்ட உறுப்பினர் முத்துவேல் செல்போனை ஆஜராகி டிஎஸ்பியிடம் ஒப்படைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
திருமணங்கள் முதல் தேர்தல் வரை டிஜிட்டல் முறைமைக்கு (system) மாறிவிட்ட சூழலில், சுற்றுலாத்துறையில் டிஜிட்டல் மாற்றம் எப்படி இருக்கிறது? நாம் போகவேண்டியதில்லை. அந்த இடமே நம்மைத் தேடி வந்தால் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், INTERNATIONAL ASSOCIATION OF WOMEN JUDGES
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதியாக, 55 வயதான ஆயிஷா மாலிக் பதவியேற்றுள்ளார்.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாட்டில் அவர் 16 ஆண் நீதிபதிகள் பணியாற்றும் நீதிமன்றத்தில் பெண் நீதிபதியாக பணியாற்றுவார்.
இவரது பதவியேற்பு கருத்து தெரிவித்த சில வழக்கறிஞர்களும் செயல்பாட்டாளர்களும், "பாகிஸ்தானின் ஆண் ஆதிக்க சமூகத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான பல தசாப்த போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த அரிய வெற்றி இது," என்று தெரிவித்தனர்.
சில வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் ஆயிஷாவின் நியமனத்தை எதிர்த்தனர். ஏனெனில் அவர் நீதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்ட மற்றவர்களை விட பணி மூப்பில் குறைந்த அனுபவம் உடையவராகக் காணப்பட்டார்.
பாகிஸ்தானின் நீதித்துறை, வரலாற்றுபூர்வ பழமைவாதத்தையும் ஆண் ஆதிக்கத்தையும் கொண்டது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, இதுவரை பெண் உச்ச நீதிமன்ற நீதிபதி இல்லாத ஒரே தெற்காசிய நாடு இதுவாக இருந்தது.
மேலும், பாகிஸ்தானின் உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 4% மட்டுமே பெண்கள். பாகிஸ்தான் சட்டக் கல்லூரி மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற நீதிபதி ஆயிஷா மாலிக், கடந்த இருபது ஆண்டுகளாக கிழக்கு பாகிஸ்தானில் உள்ள லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.
மாகாணத்தில் ஆணாதிக்க சட்ட விதிகளை சவால் செய்வதில் அவர் ஒரு முக்கிய பங்கை வகித்தார். கடந்த ஆண்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களிடம் நடத்தப்படும் பரிசோதனையின் போது "கன்னித்தன்மை சோதனைகள்" என்று அழைக்கப்படும் சர்ச்சை பரிசோதனை முறைக்கு அவர் தடை செய்தார்.

பட மூலாதாரம், .
தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த 8 வயது விசாலினிக்கு பிரதமரின் பால விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்த டாக்டர் நரேஷ் குமார் டாக்டர் சித்திர கலாவின் மகள் விசாலினி, தற்போது 8 வயதாகும் இவர், தனது 6 வயதில் இந்தியாவில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது மக்களின் உயிரும் உடைமையும் பறிபோவதை எண்ணி கவலையுற்று வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களையும் அவர்களின் உடைமைகளையும் பாதுகாக்கும் வகையில் ஒரு பலூன் வீட்டை உருவாக்கினார்.
அதற்கு 'ஒரு தானியங்கி பல செயல்பாட்டு வாழ்க்கை மீட்பு வெள்ளம் வீடு' என்ற தலைப்பில் ஒரு கண்டுபிடிப்பு காப்புரிமை தாக்கலை, செப்டம்பர் 23, 2020 அன்று இந்திய காப்புரிமை அலுவலகத்தில் செய்தார்.
அதை ஏற்று இந்த கண்டுபிடிப்பு காப்புரிமை மே 10, 2021 அன்று இந்திய அரசால் இவருக்கு வழங்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு காப்புரிமை செப்டம்பர் 23, 2020 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த வகையான வீடுகள் கடல் பகுதிக்கு அருகில் வசிக்கும் மீனவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரியவருகிறது. இவரின் இந்த சாதனை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022 இன் கீழ் 'இளைய காப்புரிமை வைத்திருப்பவர்' என்ற தலைப்பில் இந்த மைல்கல்லை அங்கீகரித்தது.
மேலும் இந்திய பதிவேடுகள் புத்தகம், இந்தியாவில் தனது 6 வயதில் காப்புரிமை பெற்ற ஒரே ஒருவர் விஷாலினி, இந்தியாவில் முதல் மற்றும் உலகின் இரண்டாவது இளம் வயதில் காப்புரிமை வைத்திருப்பவர் என பெயரிட்டு காப்புரிமையும் பெற்றுள்ளார்.
இவரின் திறமையையும் ஆர்வத்தையும் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசால் 'ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்' அறிவிக்கப்பட்டது. அந்த விருதை,விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காணொலி காட்சி அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோதி சிறுமி விசாலினியை வாழ்த்தி விருது வழங்கினார்.
இந்த செய்தியை பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், RP BHAVAN
இந்தியாவின் 73-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருக்கிறார்.
இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் நாளை காலை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி முப்படையினரின் அணிவகுப்பை பார்வையிடும் முன்பாக தேசிய கொடியை சம்பிரதாய வழக்கத்தின்படி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைப்பார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று குடியரசு தலைவர் டெல்லி ராபாதையிலும் பிரதமர் செங்கோட்டையிலும் தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைப்பது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் குடியரசு தினத்துக்கு முந்தைய தினம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றுவார்.
இந்த நிகழ்வு இரவு 7 மணிக்கு இந்திய பொதுத்துறை தொலைக்காட்சியான தூர்தர்ஷினிலும் அகில இந்திய வானொலி சேவையிலும் ஒளிபரப்பாகும். அதன் பிராந்திய மொழிபெயர்ப்பு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.