புதுச்சேரியில் ஜனவரி 31வரை கொரோனா கட்டுப்பாடுகள் தீவிர அமல்

நாடு முழுவதும் ஒமிக்ரான் திரிபு மற்றும் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தீவிரமாகி வருவதால் புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி நள்ளிரவு வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

    கிரிக்கெட்

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் பந்து வீசும் முகமது ஷமி.

    ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியிருக்கிறது தென்னாப்பிரிக்கா.

    இந்த மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    முன்னதாக, 240 ரன்களுக்கு எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா நிர்ணயித்திருந்தது.

    கேப்டன் டீன் எல்கர் ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் எடுத்ததன் மூலம் தென்னாப்பிரிக்க அணி எளிதான வெற்றியை உறுதி செய்தது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 202 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 229 ரன்களும் எடுத்தன.

    இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 266 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் வழக்கமான டெஸ்ட் கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை.

    அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டதால், 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என அளவில் தென் ஆப்பிரிக்கா சமன் செய்துள்ளது.

    முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 11ம் தேதி தொடங்குகிறது.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி: விசாரணைக்குழுவை நியமித்தது இந்திய உள்துறை

    பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோதியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் நடந்த குளறுபடி குறித்து விசாரிப்பதற்காக மாநில அரசு ஒரு உயர்நிலைக்குழுவை நியமித்த நிலையில், அதே விவகாரத்தில் தனியாக விசாரணை நடத்த ஒரு குழுவை இந்திய உள்துறை நியமித்துள்ளது.

    மிக முக்கிய பிரமுகரின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய அந்த சம்பவம் தொடர்பாக இக்குழு விசாரிக்கும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

  4. இலங்கை தமிழர் முகாமிற்கு சென்ற தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை, ஜி,மணிவண்ணன்

    திருச்சி கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்
    படக்குறிப்பு, திருச்சி கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்

    சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தில் இருந்து 3 அதிகாரிகள் கொண்ட குழு திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு ஆய்வு செய்வதற்காக இன்று சென்றனர்.

    இந்த முகாமிற்கு செல்ல தமிழ்நாடு அரசிடம் இருந்து உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி ஆய்வு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ஆய்வு செய்யாமல் இலங்கை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

    கடந்த 30ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் மூலம் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

    ஆனால், தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளரிடம் அனுமதி பெறாத காரணத்தால், அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  5. பல்கலை. துணைவேந்தர்கள் நியமனத்துக்கு சட்டத்திருத்தம்: முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கும் அன்புமணி ராமதாஸ்

    அன்புமணி

    பட மூலாதாரம், Dr Anbumani Ramadoss

    படக்குறிப்பு, துணைவேந்தர்கள் நியமனச் சட்டத்தை பா.ம.க. ஆதரிக்கும் - அன்புமணி

    தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர், எம்.பி அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    மேலும், "பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் தமிழ்நாட்டின் கல்வி நலனையும், கலாசார நலனையும் காக்க முடியும். அந்த வகையில் இந்த சட்டத் திருத்தம் மிகவும் அவசியமாதாகும். அதனால் துணைவேந்தர்கள் நியமன சட்டத்தை பா.ம.க. ஆதரிக்கும்." என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. மருத்துவ மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு வழக்கு - தீர்ப்பை ஒத்திவைத்துள்ள உச்சநீதிமன்றம்

    முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் சேர்க்கையில் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10 சதவீதம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவித இடங்கள் ஒதுக்கீடு குறித்த முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    இந்த வழக்கினால் நீட் முதுநிலை மருத்துவப் பட்ட மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடனே சேர்க்கை நடத்த கோரி மருத்துவர்கள் கடந்த வாரம் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தினர்.

    போராட்டம் நடத்திய மருத்துவர்களோடு சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் " உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் சேர்க்கை நடைபெறும்" என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. பஞ்சாபில் பிரதமர் பயணத்தில் குளறுபடி - மன வருத்தம் அளிக்கிறது - எடப்பாடி பழனிச்சாமி

    மோடி - எடப்பாடி

    பட மூலாதாரம், EDAPADI PALANISWAMY

    படக்குறிப்பு, மத்திய அரசும் பஞ்சாப் மாநில அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

    இந்திய பிரதமர் பஞ்சாப் சென்ற போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி மன வருத்தம் அளிக்கிறது. இதற்கு காரணமானவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. மதுரையில் ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோதி பங்கேற்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது - அண்ணாமலை

    பாரதிய ஜனதா கட்சி

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, கே. அண்ணாமலை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர்

    ஒமிக்ரான் பரவல் காரணமாக மதுரையில் 12ம் தேதி பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் வரும் 12ம் தேதி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

    விருதுநகர் மற்றும் புதுச்சேரிக்கும் அவர் செல்வதாக திட்டமிடப்பட்டது.

    இந்நிலையில் , தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒமிக்ரான் பரவல் காரணமாக மதுரையில் 12ம் தேதி பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் சென்ற மோதியின் பயணம் நேற்று ரத்தான நிலையில், தமிழக பயணமும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  9. புதுச்சேரியில் ஜனவரி 31வரை கொரோனா கட்டுப்பாடுகள் அமல், நடராஜன் சுந்தர், புதுச்சேரி

    கொரோனா

    பட மூலாதாரம்,

    புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    நாடு முழுவதும் ஒமிக்ரான் திரிபு மற்றும் கொரோனா மூன்றாவது அலையில் தாக்கம் இருந்து வருவதன் காரணமாக புதுச்சேரி அரசு வரும் 31ஆம் தேதி நள்ளிரவு வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    கொரோனா கட்டுப்பாடுகள் பின்வருமாறு, மால்கள், வணிக வளாகங்கள், கடைகளில் 50 சதவீதத்திற்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கூடாது. உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    திரையரங்குகளில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

    மதுபான கடைகள், பார்கள், உணவகங்கள், விடுதிகள், மற்றும் ஹோட்டல்களில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மண்டபம் மற்றும் கலையரங்கத்தில் 50 சதவீதத்தினருடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    முடி திருத்தும், அழகு நிலையம், மசாஜ் நிலையங்களின் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    குடமுழுக்கு மற்றும் கோயில் கும்பாபிஷேக விழாக்கள் பக்தர்கள் இன்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் கல்வித்துறை மற்றும் உயர்கல்வி துறை வழிகாட்டுதல் படி செயல்படும்.

    இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் ஜனவரி 31ஆம் தேதி நள்ளிரவு 12வரை அமலில் இருக்கும்.

  10. ஏர் இந்தியா பயணிகளுக்கு கொரோனா தொற்று என்பது தவறானது

    ஏர் இந்தியா பயணிகளுக்கு கொரோனா தொற்று என்பது தவறானது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில், "ரோமில் இருந்து அமிர்தசரஸ் வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவறானது மற்றும் அடிப்படையற்றது. ஏர் இந்தியா தற்போது ரோமில் இருந்து எந்த விமானத்தையும் இயக்கவில்லை," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. கொரோனா பாதித்த மருத்துவர்கள் நலம் பெற பிராத்திக்கிறேன் - இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்

    கோவிட் பாதித்த மருத்துவர்கள், ஊழியர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன் என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    கொரோனா தடுப்பு பணிகளுக்கு போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் உள்கட்டமைப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்யவும் கண்காணிக்கவும மாவட்ட, வட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இந்த நிலையில், இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களை சந்தித்தார்.

    அப்போது, "நமது மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. கேரளாவில் மேலும் 50 பேருக்கு ஒமிக்ரான்

    கேரளா மாநிலத்தில் மேலும் 50 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 45 பேர் 'குறைந்தபட்ச ஆபத்து' பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள். மீதம் உள்ள 5 பேர் மட்டுமே அதிக ஆபத்து எச்சரிக்கை உள்ள நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.

    கேரளாவில் தற்போது ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு கடுமையான பிரச்னை, இதில் அரசியல் கூடாது - மாயாவதி

    மாயாவதி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மாயாவதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர்

    பிரதமர் நரேந்திர மோதியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், நியாயமான முறையில் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.

    இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மாயாவதி ட்வீட் செய்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்கவும் விசாரணை அவசியம் என்று மாயாவதி வலியுறுத்தியிருக்கிறார்.

  14. மீண்டும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியது வட கொரியா

    வட கொரியா

    பட மூலாதாரம், EPA

    வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியின்படி, அந்நாடு இந்த வாரம் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

    இந்த சோதனை புதன்கிழமை நடந்துள்ளதாகவும் அந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

    ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, வட கொரியாவுடன் அமெரிக்கா நடத்தி வந்த அணு ஆயுத விலக்கல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட நிலையில், வட கொரியா தனது ராணுவத் திறனை விரிவுபடுத்துவதற்காக இத்தகைய சோதனையை இரண்டாவது முறையாக நடத்தியிருக்கிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு முதல் முறையாக இத்தகைய சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் முகமையின் செய்தி கூறுகிறது.

    இந்த சோதனைக்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    வடகொரியா தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை செப்டம்பர் மாதம் நடத்தியது. இதற்குப் பிறகு, பிராந்திய நாடுகளில் மேம்பட்ட ஆயுத அமைப்புகளை நிலைநிறுத்துவதற்கான போட்டி தீவிரமடைந்துள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை விட வேகமாகவும் குறைவாகவும் தங்கள் இலக்குகளைத் தாக்கும்.

    ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் வேகமானது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அல்லது மணிக்கு சுமார் 6,200 கிலோ மீட்டர் ஆகும்.

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

    பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே க்ளிக் செய்யவும்...Link

  16. ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி - தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை

    பட மூலாதாரம், RASI BHADRAMANI VIA GETTY IMAGES

    படக்குறிப்பு, ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த ஆட்சியிலேயே தடை சட்டம் கொண்டு வரப்பட்டது

    தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.

    அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘’ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கடந்த ஆட்சியிலேயே கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்துள்ளது. வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்,’’ என்றார்.

    துணைவேந்தர் நியமனம்

    இதேபோல் பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளிக்கையில், ‘’பல்கலைக்கழக துணைவேந்தர்களை முதலமைச்சரே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்,’’ என்றார்.

  17. பிரதமர் மோதியின் பாதுகாப்பு குளறுபடி: கவலை தெரிவித்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

    பஞ்சாபில் விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால் பயணத்தை ரத்து செய்தார் மோடி

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, பஞ்சாபில் விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால் பயணத்தை ரத்து செய்தார் மோடி

    பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் நேரில் விளக்கினார் பிரதமர் நரேந்திர மோதி.

    பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட கடுமையான குறைபாடு குறித்து தமது கவலையை அப்போது குடியரசு தலைவர் தெரிவித்ததாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குடியரசு தலைவரை சந்தித்தது குறித்து நரேந்திர மோதியும் தமது பக்கத்தில் பகிர்ந்து, அவர் வெளிப்படுத்திய கவலையும் வாழ்த்தும் எப்போதும் தாம் வலிமையுடன் திகழ ஆதாரமாக இருந்துள்ளன என்று தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    பஞ்சாப் மாநில பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறையால், பிரதமர் மோதி தனது பயணத்தை நேற்று ரத்து செய்தார். இந்த விவகாரத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

    விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால், பஞ்சாப் பயணத்தை பிரதமர் மோதி நேற்று ரத்து செய்தார். இது குறித்து மாநில அரசிடம் மத்திய உள்துறை விளக்கம் கேட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநில அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணக்குழுவை அமைத்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  18. புல்லி பாய் செயலி: முக்கிய நபர் கைது

    புல்லி பாய் செயலி விவகாரத்தில் இது வரை 4 பேர் கைது

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, புல்லி பாய் செயலி விவகாரத்தில் இது வரை 4 பேர் கைது

    சர்ச்சைக்குரிய புல்லி பாய் செயலியை உருவாக்கிய முக்கிய நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

    இஸ்லாமிய பெண்களை தவறாக சித்தரித்து உருவாக்கப்பட்ட புல்லி பாய் செயலியை பகிர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த செயலியை உருவாக்கிய, முக்கிய நபரான நீரஜ் பிஷ்னோய் என்பவரை டெல்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். அசாம் மாநிலத்தில் பதுங்கி இருந்த நபரை கைது செய்து, டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

    புல்லி பாய் செயலியை உருவாக்கி, அதன் ட்விட்டர் கணக்கையும் இவர்தான் நிர்வகித்தார் என்றும் டெல்லி போலீஸ் அதிகாரி கேபிஎஸ் மல்ஹொத்ரா தெரிவித்தார்.

  19. சென்னை 16 மருத்துவர்களுக்கு கொரோனா

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 2 மருத்துவர்கள், 14 பயிற்சி மருத்துவர்கள், 4 நர்சுகள் ஆகியோருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    பாதிக்கப்பட்ட மருத்துவவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

  20. பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குறை - மாநில அரசு விசாரணைக்குழு அமைத்தது

    பஞ்சாப் அரசின் விசாரணைக்குழுவை நிராகரிப்பதாக பா.ஜ.க கூறியுள்ளது.

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, பஞ்சாப் அரசின் விசாரணைக்குழுவை நிராகரிப்பதாக பா.ஜ.க கூறியுள்ளது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஓய்வு பெற்ற நீதிபதி மெஹ்தாப் சிங் கில் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் மாநில உள்துறை முதன்மை செயலாளரும் இடம் பெற்றுள்ளார். இந்த குழு 3 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

    இந்த விசாரணைக் குழுவை நிராகரிப்பதாக பஞ்சாப் மாநில பா.ஜ.க தலைவர் அஷ்வனி சர்மா கூறியுள்ளார். ''முதலமைச்சரால் அமைக்கப்பட்ட இந்த குழுவால் எதையும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் இந்த சதிக்கு அவர்தான் தலைமை.'' என்று அஷ்வனி சர்மா கூறியுள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று சென்ற பிரதமர் மோதி, விவசாயிகளின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால், 20 நிமிடம் வரை சாலையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பஞ்சாப் பயணத்தை பிரதமர் ரத்து செய்து, டெல்லி திரும்பினார்.