மதுரை அம்மா உணவகத்தில் கருணாநிதி - ஜெயலலிதா இரு படங்களும் அகற்றம்

மதுரை அம்மா உணவக விளம்பரப் பலகை சர்ச்சை விவகாரத்தில் கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் படமும் அகற்றப்பட்டுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்திபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்துடன் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படமும் இடம் பெற்றிருந்தது. இது சர்ச்சையானது.
ஏற்கனவே இந்த உணவகத்தில் பழைய பணியாளர்களை நீக்கிவிட்டு திமுகவிற்கு சாதகமான பணியாளர்களை நியமிக்கதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த பட சர்ச்சையும் சேர்ந்துகொண்டது.
அதிகாரிகள் இந்த பெயர்ப் பலகையை அகற்றுவதில் அதிகாரிகள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனையின்பேரில் பெயர் பலகை அகற்றப் பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கியது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு திமுகவினரை கண்டித்தார், அதேபோல தற்போது சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் அம்மா உணவகங்கள் இலவச உணவு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
