வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் திடீரென முடங்கி சரியாகின
உலக அளவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் செயலிகளின் சேவை முடங்கியிருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.40 மணி முதல் இந்த சேவை முடங்கியிருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதை மூன்று செயலிகளின் நிர்வாகங்களும் இன்னும் அறிவிக்கவில்லை. சேவை முடங்கிய செய்தியை மூன்று நிறுவனங்களும் அவற்றின் ட்விட்டர் பக்கம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளன.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இன்றைய நேரலை நிறைவு பெற்றது
நேயர்களுக்கு வணக்கம்,
பிபிசி தமிழ் சேவையின் இன்றைய நேரலை தகவல்களை இத்துடன் நிறைவு செய்கிறோம். மீண்டும் நாளை சந்திப்போம். உலகம் மற்றும் தேசிய செய்திகளுக்கு பிபிசி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள். நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
சென்னையை வென்ற டெல்லி - புள்ளிப் பட்டியலில் முதலிடம்
பட மூலாதாரம், BCCI/IPL
படக்குறிப்பு, டெல்லி ஒப்பனர்கள்
136 அடித்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணியின் ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் இணை 24 ரன்களில் பிரிக்கப்பட்டது. 18 ரன்களோடு பெவிலியன் திரும்பினார் ப்ரித்வி.
அடுத்த வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களுக்கு தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அணித்தலைவர் ரிஷப் பந்த் நிதானம் காட்டி 15 ரன்களில் வெளியேறினார்.அடுத்த வந்த ரிபல் படேல் கூட 18 ரன்கள் குவித்தார்.
இப்படி டெல்லி அணியின் முதல் நான்கு ஜோடிகள் தலா 20 - 27 ரன்கள் குவித்தன. ஹெட்மேயர் மற்றும் அக்ஸர் படேல் ஜோடி 27 பந்துகளுக்கு 36 ரன்களைக் குவித்தது.
19.4ஆவது பந்தில் ப்ராவோ வீசிய பந்தை ரபாடா பவுண்டரிக்கு அனுப்பி டெல்லியை வெற்றி பெறச் செய்தார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் உலக அளவில் முடங்கின
உலக அளவில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் இன்று இரவு 9.40 மணி முதல் முடங்கியுள்ளன.
இது குறித்த செய்தியை தமது ட்விட்டர் பக்க முகவரி மூலம் உறுதிப்படுத்தியுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், "பலருக்கு எங்களுடைய சேவை கிடைக்காமல் போனதை அறிந்துள்ளோம். அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அது பற்றிய தகவலை இங்கே பதிவிடுகிறோம்," என்று கூறியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனமும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவலில், தமது சேவையை வழங்க முடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது. இயல்புநிலை திரும்ப விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இன்ஸ்டாகிராம் நிறுவனம்,,"தற்போது கடினமான நேரத்தை எதிர்கொண்டுள்ளோம். தயவு செய்து பொறுத்திருங்கள். பிரச்னையை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்," என்று கூறியுள்ளது.
இந்த மூன்று பிரபல செயலிகளும் முடங்கியதையடுத்து, ட்விட்டர் பக்கத்தில் #FACEBOOKDOWN #SERVERDOWN போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 3
லக்கிம்பூர் வன்முறை: எங்கும் சோகம், துயரம், கண்ணீர் - இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பெரும் ஆதரவு
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் நான்கு விவசாயிகள் உள்பட எட்டு பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளும் திரண்டுள்ளனர். பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வந்தவண்ணம் உள்ளனர்.
அந்த மாவட்டத்தில் வன்முறை நடந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
கண்ணீரும் சோகமும் நிறைந்த பகுதியாக இறந்தவர்களின் வீடுகளும் அருகாமையில் உள்ள இடங்களும் காட்சியளிக்கின்றன. அங்கு களத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் இவை.
பட மூலாதாரம், BB
லக்கிம்பூரில் 4 கம்பெனி துணை ராணுவ படையினர் குவிப்பு
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, லக்கிம்பூரில் குவிக்கப்பட்டுள்ள மத்திய துணை ராணுவப்படையினர்.
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்புப் பணியில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்கு கம்பெனி மத்திய துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.லக்கிம்பூர் கேரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறையில் எட்டு பேர் உயிரிழந்தனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதையடுத்து, உத்தர பிரதேச அரசின் வேண்டுகோளுக்குப் பிறகு, அந்த மாவட்டத்துக்கு மத்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதிவிரைவு அதிரடிப்படையின் இரண்டு கம்பெனிகளும், சஷஸ்திர சீமா பல் எனப்படும் எல்லை ஆயுதப்படையின் இரண்டு கம்பெனிகளும் அக்டோபர் 6 வரை அங்கு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச காவல்துறையுடன் சேர்ந்து அந்த படையினர் சட்டம் ஒழுங்கு பராமரிப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று மத்திய உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
லக்கிம்பூர் சம்பவம்: மத்திய உள்துறை இணை அமைச்சரின் ராஜிநாமாவை வலியுறுத்தும் காங்கிரஸ்
லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் இந்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை உடனடியாக பதவி நீக்கம் செய்து அவரது மகனை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளது.
லக்கிம்பூர் கேரி வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் இறந்துள்ளனர். அந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது உத்தர பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை பார்ப்பதற்காக திங்கட்கிழமை அதிகாலையில் புறப்பட்ட பிரியங்கா காந்தியை காவல்துறையினர் தடுத்து உள்ளூர் விருந்தினர் இல்லத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
அவரை விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பிரியங்கா காந்தியை உத்தர பிரதேச காவல்துறை கைது செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியிருக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 1
மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்க விஞ்ஞானிகளான டேவிட் ஜுலியஸ், ஆர்டெம் பட்பூஷியன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் இருக்கும் தொடுதல் உணர்வு எவ்வாறு மின்னுணர்வாக நரம்பு மண்டலத்துக்கு செய்தி அனுப்பும் என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்களின் கண்டுபிடிப்பு, வலி நிவாரணி சிகிச்சைக்கான புதிய வழிகளை கடைப்பிடிக்க உதவக்கூடும்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. வெப்பம், வலி, உடல் அழுத்தம் ஆகியவற்றைத் தொடாமல் உணரக்கூடிய கருவியை (ரிசெப்டர் சென்சார்) கண்டுபிடித்ததற்காக இவர்கள் நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர்.
நரம்பியல் மண்டலத்தின் உணர்திறன் அமைப்பு செயல்பாடுகளை இந்த இரு விஞ்ஞானிகளும் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
வந்துகொண்டிருக்கும் செய்தி, சட்டத்துக்கு தடை உள்ளபோது அதை எதிர்த்து போராடுவது நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாகாதா? விவசாயிகள் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி
பட மூலாதாரம், Reuters
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் சட்டங்களை எதிர்த்து டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கிசான் மகா பஞ்சாயத்து என்ற விவசாயிகள் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், சி.டி. ரவிக்குமார் அடங்கிய அமர்வு இன்று பரிசீலித்தது. அப்போது நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் ஏற்கெனவே மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளபோது, அதே விவகாரத்தில் போராட்டம் நடத்த விவசாயிகள் தரப்பு நீதிமன்றத்திடமே அனுமதி கோருவது, முந்தைய நீதிமன்ற உத்தரவுக்கும் விசாரணைக்கும் புறம்பாக அமையதா?" என்று கேள்வி எழுப்பினர்.
போராட்டம் செய்ய வேண்டும். அதற்கு அனுமதியுங்கள் என்று நீங்கள்தான் கோரிக்கை விடுக்கிறீர்கள். எதற்காக இந்த போராட்டம்? சட்டத்துக்கு எதிராக என்றால், அந்த சட்டத்துக்கு தான் நீதிமன்றம் தடை விதித்து உள்ளதே? அதனால் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. பிறகு ஏன் இந்த போராட்டம்? முதலில் இந்த சட்டம் தொடர்பான முடிவை நீதிமன்றம் எடுக்கும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இன்றைய விசாரணையின்போது மனுதாரர் கிசான் மகாபஞ்சாயத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜய் செளத்ரி, "இந்த போராட்டம் விவசாய சட்டங்களை இயற்றுவது மட்டுமல்ல, குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டரீதியான உரிமையாக அமல்படுத்தவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை," என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், "நாங்கள் மனுவில் விடுக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையிலேயே விசாரணை நடத்துகிறோம். உங்களுடைய உண்மையான கோரிக்கைதான் என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள்," என்று கூறி மனு மீதான விசாரணையை தள்ளிவைத்தனர்.
மாற்றுதிறனாளியிடம் மனிதநேயம் காட்டிய சேலம் ஆட்சியர், ஏ.எம். சுதாகர், லேசம்
படக்குறிப்பு, மாற்றுத்திறனாளி இளைஞர் வரதராஜனை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த புதிய இரு சக்கர நாற்காலியில் அமரவைத்து அவரை பத்திரமாக வாகனத்தில் ஏற்றி வழியனுப்பும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு இரு சக்கர நாற்காலி தேவை என்று விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.
கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வருவதால் மாவட்ட ஆட்சியர்கள் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டங்களை நேரடியாக நடத்த தமிழக அரசு சார்பில் கடந்த 28ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் தொடங்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக இன்று சேலத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டு அதை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
அப்போது டேனிஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகன் வரதராஜன் (22) என்பவருடன் வந்திருந்தார் .
பின்னர் அவர் மாவட்ட ஆட்சியரிடம் ....என் மகன் பிறந்தது முதலே உடல் நலம் பாதிக்கப்பட்டு மாற்றுதிறனாளியாகி மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகிறான் நடக்க முடியாத இவனுக்கு சக்கர நாற்காலி வழங்கி உதவிட வேண்டும். என்று கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம், அப்போதே ரூ 6,400 மதிப்பிலான சிறப்பு வகை சர்க்கர நாற்காலியை வழங்கினார். அத்துடன் அவரே மாற்றுதிறனாளி வரதராஜனை தூக்கி சர்க்கர நாற்காலியில் அமர வைத்து வாசல் வரை தள்ளி வந்து வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தால் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக தமிழகமெங்கும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக மனுக்கள் பெறுவது தவிர்க்கப்பட்டு , புகார் பெட்டி வாயிலாக மனுக்கள் பெறப்பட்டன.
இதனால் மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொதுமக்களுக்கும் நேரடி தொடர்பு இல்லாமல் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பதிலும் தாமதம் ஏற்பட்டது. பெரும்பாலான புகார்களுக்கு தீர்வு காணப்படாத நிலையில், மீண்டும் பழையபடி மக்கள் குறைதீர் கூட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
பண்டோரோ பேப்பர்ஸ்: பிரபல உலக தலைவர்களின் ரகசிய சொத்துகள் - அம்பலப்படுத்தும் புலனாய்வு
பொதுவெளியில் பெரிதும் மதிக்கப்படும் உலக தலைவர்கள், மன்னர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் என பலரும் ரகசியமாகவும் குறுக்கு வழிகளிலும் பணத்தையும் சொத்துகளையும் குவித்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.
ஜோர்டான் மன்னர், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் என பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள்.
300-க்கும் மேற்பட்ட தலைவர்கள் வரி ஏய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு ரகசிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது 'பண்டோரா பேப்பர்ஸ்' எனப்படும் மிகப்பெரிய ஆவணக் கசிவின் மூலம் தெரியவந்திருக்கிறது.
பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஜோர்டான் மன்னர் அப்துல்லா குவித்திருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
11 வயதுச் சிறுவன் பெயரில் சுமார் 330 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கியிருப்பதும் ஆவணங்களில் தெரியவந்திருக்கிறது.
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரும் அவரது மனைவியும் லண்டனில் அலுவலம் வாங்கும்போது முத்திரைத் தீர்வையை தவிர்ப்பதற்கு குறுக்கு வழியைத் தேர்வு செய்திருப்பதும் பண்டோரா ஆவணங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.
லண்டனில் அலுவலகத்தை வாங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை அவர்கள் வாங்கியிருப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன. இதன் மூலம் சுமார் 3.1 கோடி ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு ஆதாயம் கிடைத்திருக்கிறது.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மொனாக்கோ நாட்டில் ரகசியமாகச் சொத்துக் குவித்திருப்பதும் ஆவணங்களில் அம்பலமாகி இருக்கிறது.
இந்த வாரத்தில் தேர்தலைச் சந்திக்க இருக்கும் செக் நாட்டு பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ், பிரான்ஸ் நாட்டில் இரு ஆடம்பர மாளிகைகளை வாங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இந்த விவரங்கள் அவரை தனது பிரமாணப் பத்திரங்களில் அவர் அறிவிக்கவில்லை.
பனாமா பேப்பர்ஸ், பாரடைஸ் பேப்பர்ஸ், லக்ஸ்லீக்ஸ், ஃபின்சென் ஃபைல்ஸ் போன்ற பெரும் ஆவணக் கசிவுகளின் வரிசையில் பேண்டோரா பேப்பர்ஸும் இணைந்திருக்கிறது.
650 செய்தியாளர்களை உள்ளடக்கிய சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) இந்த ஆவணங்களை ஆய்வு செய்து விவரங்களை வெளியிட்டிருக்கிறது.
லக்கிம்பூர் வன்முறை - காவலில் பிரியங்கா, அகிலேஷ் - தொடரும் பதற்றம்
பட மூலாதாரம், PRASHANT/BBC
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு கருப்புக் கொடி காட்ட வந்க விவசாயிகள் மீது பாஜக ஆதரவாளர்கள் கார் மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் பதற்றம் நீடிக்கிறது.
கார் மோதிய சம்பவத்தில் விவசாயிகள் நான்கு பேரும், பொதுமக்கள் நான்கு பேரும் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பங்களை சந்திக்க பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலத்தின் ஹர்கான் என்ற இடத்தில் இருந்து அதிகாலையில் புறப்பட முயன்றார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை வழிமறுத்து காவலில் எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, தன்னை காவலில் எடுக்க வாரன்ட் உள்ளதா என்று பிரியங்கா கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அவரை காவலில் எடுப்பதாகக் கூறிய காவல்துறையினர் சீதாபூர் அரசு விருந்தினர் மாளிகையில் அவரை தடுத்து வைத்துள்ளனர்.
அங்கு பெருமளவில் விவசாயிகளும் காங்கிரஸ் தொண்டர்களும் திரளும்படி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ் அழைப்பு விடுத்துள்ளார். பிரியங்கா காந்திக்கு ஆதரவாக அவர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மற்றும் அரசு விருந்தினர் மாளிகையில் தூய்மைப்படுத்தப்படாத அறையை துடைப்பத்தால் பிரியங்கா சுத்தப்படுத்தும் காட்சியையும் ஸ்ரீனிவாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதேபோல, லக்கிம்பூருக்கு புறப்பட தயாரான சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவையும் காவல்துறையினர் அவரது வீட்டிலேயே தடுத்து வைத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரிடம் காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 75 கிமீ தொலைவில் நேபாளத்தின் எல்லையில் உள்ள திகோனியா கிராமத்தில் இதுவரை எட்டு பேர் வன்முறை மற்றும் தீக்குளிப்பில் இறந்துள்ளனர். இவர்களில் நான்கு விவசாயிகள். மற்ற நான்கு பேரில், இரண்டு பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் ஓட்டுநர்கள். இவர்களைத் தவிர, 12 முதல் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இறந்த விவசாயிகள் தல்ஜித் சிங் (35), குர்வேந்திர சிங் (18), லவ்ப்ரீத் சிங் (20) மற்றும் நக்ஷத்ரா சிங் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
திகோனியாவில் நடந்த இந்தச் சம்பவத்தில், சாதனா நியூஸ் சேனலின் உள்ளூர் நிருபர் ரத்தன் காஷ்யப்பும் செய்தி சேகரிப்பின்போது போது இறந்துவிட்டார். கார் பலமாக மோதியதால் அவர் சாலை ஓரத்தில் உள்ள தண்ணீரில் விழுந்தார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, லக்கிம்பூர் வன்முறை: இறந்தவர்களுக்கு தலா ரூ. 45 லட்சம் இழப்பூடு, குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட நிர்வாகம் உறுதி
உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வன்முறையில் நான்கு விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 45 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை , காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 10 லட்சம்வரை நிதி உதவி வழங்க அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் விவசாயிகள் இடையே நடந்த பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
அங்கு நடந்த போராட்டத்துக்கு காரணமானவர்களை கைது செய்யவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரத்தை உத்தர பிரதேச மாநில காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் மற்றும் கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெய்த் சில நிமிடங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
லக்கிம்பூர் வன்முறை: மத்திய இணை அமைச்சரின் மகன், விவசாயிகள் மீது வழக்கு பதிவு
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியின் மகன் மற்றும் சில விவசாயிகள் மீது உத்தர பிரதேச மாநில காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
லக்கிம்பூர் கேரியில் நடந்த வன்முறை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை தொடரும் வேளையில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர்.
ஆஷிஷ் மிஸ்ரா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரை ஓட்டியதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் அவரது தந்தையும் மத்திய அமைச்சருமான அஜய் மிஸ்ரா தேனி தனது மகன் சம்பவ இடத்தில் இல்லை என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் ஒரு பாஜக தொண்டர் மற்றும் ஒரு கார் டிரைவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.
விவசாயிகள் மத்தியில் இருந்தவர்கள் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் தடியால் தாக்கியதாக அவர்கள் கூறுகின்றனர்.
லக்கிம்பூர் கேரியில், கேசவ் பிரசாத் மெளரியாவின் வருகைக்காக கட்டப்பட்ட ஹெலிபேட் அருகே ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் 4 விவசாயிகள் மற்றும் 4 பொது மக்கள் உட்பட 8 பேர் இறந்துள்ளனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, லக்கிம்பூர் வன்முறை: விவசாயிகளுடன் மாவட்ட நிர்வாகம் நடத்திய 4ஆம் சுற்று பேச்சுவார்த்தை தோல்வி
பட மூலாதாரம், ANANT ZANANE/BBC
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு கறுப்புக் கொடி காட்ட வந்க விவசாயிகள் மீது பாஜக ஆதரவாளர்கள் கார் மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைக்கு தீர்வு காணும் விதமாக விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மாவட்ட நிர்வாகத்துடன் நடத்திய நான்காம் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கார் மோதிய சம்பவத்தில் விவசாயிகள் நான்கு பேரும், பொதுமக்கள் நான்கு பேரும் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தனித்தனி இடங்களில் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எட்டு பேர் உயிரிழப்பைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தரப்பு, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியை பதவி நீக்கம் செய்வது, அவரது மகனை கைது செய்வது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் அவர்களுக்கு அரசு வேலை வழங்குவது போன்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில், லக்கிம்பூர் மாவட்டம் பதற்றத்துடன் காணப்படுகிறது. அங்கு பெருமளவில் காவல்துறையினரும், மத்திய துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
முகமது நபி கார்ட்டூனை வரைந்தவர் விபத்தில் மரணம்
பட மூலாதாரம், EPA
முகமது நபி கார்ட்டூனை வரைந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லார்ஸ் வில்க்ஸ் சாலை விபத்தில் மரணமடைந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காவல்துறை வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்ததாகத் தெரியவந்திருக்கிறது. இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு காவலர்களும் உயிரிழந்தனர்.
இதில் சதி ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஏதும் உறுதி செய்யப்படவில்லை.
டென்மார்க் செய்தித்தாள் முகமது நபியின் கார்ட்டூன்களை வெளியிட்ட அடுத்த ஆண்டில், வில்க்ஸ் கார்ட்டூன் வரைந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததால், காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
2007-ஆம் ஆண்டில் இந்த கார்ட்டூன் வரையப்பட்டபோது உலகம் முழுவதும் இஸ்லாமியர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அல்-கய்தா இயக்கம் அவரது உயிருக்கு 1 லட்சம் டாலர் வெகுமதி அளிப்பதாக அறிவித்தது.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் இன்றைய நேரலைக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய இன்றைய செய்திகளை இந்தப் பக்கத்தில் தொகுத்து வழங்குவோர் பரணிதரன், எம். மணிகண்டன்.