நன்றி நேயர்களே!
இன்றைய பிபிசி தமிழ் நேரலையில் எங்களோடு இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி. நாளை காலை மீண்டும் வேறொரு நேரலையில் சந்திப்போம். இந்த இரவு இனியதாகட்டும்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு இந்திய டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளார் விராட் கோலி
இன்றைய பிபிசி தமிழ் நேரலையில் எங்களோடு இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி. நாளை காலை மீண்டும் வேறொரு நேரலையில் சந்திப்போம். இந்த இரவு இனியதாகட்டும்.
தங்கள் நாட்டில் 100 கோடி பேருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் ஆகும்.
சீனாவின் தேசிய சுகாதாரக் குழு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையே எட்டப்பட்ட ஆயுத ஒப்பந்தம் பொறுப்பற்றது, குறுகிய மனப்பான்மை கொண்டது என்று விமர்சித்துள்ளது சீனா.
புதன்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவும், பிரிட்டனும் ஆஸ்திரேலியாவுக்கு அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்கான தொழில்நுட்பத்தை முதல் முறையாக வழங்கும்.
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கான முயற்சி என்று இந்த ஒப்பந்தம் பரவலாகப் பார்க்கப்படுகிறது.
இந்த தென் சீனக் கடல் பகுதி நீண்ட காலமாகவே பதற்றத்தை உண்டாக்கும் பகுதியாக இருந்து வருகிறது.
இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்வினையாற்றிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்த ஒப்பந்தம் வட்டார அமைதியை மோசமாகப் பாதிக்கும் என்றும், ஆயுதப் போட்டியைத் தீவிரமாக்கும் என்றும் கூறியுள்ளார்.
இலங்கையில் கடந்த ஜுன் மாதம் முதல் இதுவரை கருப்பு பூஞ்சை நோயினால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பூஞ்சை திணைக்கள விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர இதனைத் தெரிவிக்கிறார்.ஜுன் மாதம் இரத்தினபுரி மருத்துவமனையில் 2 நோயாளர்களும், திருகோணமலை மருத்துவமனையில் 2 நோயாளர்களும் பதிவாகியதாக அவர் கூறுகிறார்.ஜுலை மாதத்தில் திருகோணமலை வைத்தியசாலையில் மற்றுமொரு நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.அத்துடன், கொழும்பு தேசிய மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு கருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும், செப்டம்பர் மாதம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் 02 நோயாளர்களும், இரத்தினபுரி, கராபிட்டி மற்றும் களுபோவில ஆகிய மூன்று மருத்துவமனையிலும் தலா ஒவ்வொரு கருப்பு பூஞ்சை நோயாளர்கள் வீதமும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.கோவிட் நோயாளர்களுக்கு மத்தியிலேயே, இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர குறிப்பிடுகின்றார். முகத்தில் வலி ஏற்படுதல், சுவாச கோளாறு, முகத்தில் கருப்பு நிற தழும்புகள் ஏற்படுவதே, பிரதான நோய் அறிகுறிகள் என அவர் கூறுகின்றார்.நீரிழிவு நோயாளர்கள், தமது உடலிலுள்ள சர்க்கரை அளவை சமநிலையாக வைத்திருப்பது கட்டாயமானது என அவர் குறிப்பிடுகின்றார்.இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில், அடையாளம் காணப்பட்ட அனைத்து கருப்பு பூஞ்சை நோயாளர்களும், நீரிழிவு நோய் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளவர்கள் என கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்கள் உடலிலுள்ள சர்க்கரை அளவை உரிய வகையில் பேணாதவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Vijay
நடிகர் விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கான நுழைவு வரியை செலுத்திவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
நுழைவு வரி விலக்குக் கோரிய வழக்கில், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்கும்படி விஜய் தொடர்ந்த வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய அரபு எமிரேட்டில் டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார் விராட் கோலி.
தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா போன்ற தமக்கு நெருக்கமானவர்களை கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இன அழிப்பு தொடர்பான உண்மையைக் கண்டறியும் பணிக்குழுவொன்றை நியமிக்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, நேற்றைய தினம் (15) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பேச்சேலெட்டுக்கு கடிதமொன்றை அனுப்பி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
ஐநா மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கடந்த 13ம் தேதி ஆரம்பமாகி நடைபெற்ற வருகின்றது. இலங்கை தொடர்பில் மனித உரிமை பேரவையின் ஆணையாளர், கடந்த 13ம் தேதி வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்திருந்ததுடன், அதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் கடந்த 14ம் தேதி பதிலளித்திருந்தார்.
இலங்கை அரசின் செயற்பாடுகள் கவலையளிக்கும் விதத்தில் உள்ளதாக மனித உரிமை பேரவையின் ஆணையாளர் கருத்துரைத்த போதிலும், அதனை இலங்கை வெளிவிவகார அமைச்சர் நிராகரித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, ஐநா மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினராக, சிவசேனை கட்சித் தலைவர்களில் ஒருவரும் மகாராஷ்டிர முதல்வரின் தனி உதவியாளருமான மிலிந்த் கேஷவ் நர்வேகர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் கே.சி.வீரமணி ஆதரவாளர்களுக்கும் போலீசுக்கும் இடையே ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு எதிரே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வீரமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வீரமணி வீட்டுக்கு எதிரே குவிந்த அவரது ஆதரவாளர்கள் ஆவேசமாக போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸ் தடுப்பை மீறிச் செல்லவும் அவர்கள் முயன்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
நீரில் கரையாத பிளாஸ்டர் ஆஃப் பாரிசை கொண்டு செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை இந்த ஆண்டு உசேன் சாகர் ஏரியில் கரைக்க தெலுங்கானா அரசுக்கு அனுமதி அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். ஆனால், இது வெறும் சம்பிரதாயமான 'கரைப்பாக' மட்டுமே இருக்கும் என்றும். நீரில் போட்டவுடன் பிள்ளையார் சிலையை தூக்கிவிடப் போவதாகவும் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சிறப்பு பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை அறிவித்துள்ளன.
இந்த கூட்டு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
ஆக்கஸ்(AUKUS) என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும் இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் ராணுவப் பரவல் குறித்து மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
தென்கொரியா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் சில மணி நேர இடைவெளியில் நெடுந்தூரம் சென்று தாக்கக்கூடிய தன்மையுள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளன.
அணு ஆயுதம் தொடர்பாக வடகொரியா உடனான பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்கும் சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனை செய்த சில மணி நேரங்களிலேயே தென்கொரியாவும் ஏவுகணை சோதனை செய்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மன்றம் தீர்மானம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறும் வகையில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை தமது கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் இருந்து வடகொரியா சோதனை செய்தது.
அடுத்த சில மணி நேரங்களிலேயே நீர்மூழ்கி கப்பலில் இருந்து கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை முதல்முறையாக தென்கொரியாவும் சோதனை செய்தது.

பட மூலாதாரம், Reuters
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏன்என்ஐ செய்தி நிறுவனம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் வணிக வரித்துறை அமைச்சராக கே.சி. வீரமணி பதவி வகித்து வந்தார்.
ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஏலகிரி உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகிய முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பகுதியில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.
நேற்றைய நேரலைப் பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்