பாகிஸ்தானுக்கு தப்பி வந்த ஆப்கன் கால்பந்து வீராங்கனைகள்
ஆப்கன் பெண்கள் கால்பந்து அணி காபூலைவிட்டு வெளியேறிவிட்டனர் ஆனால் ஜூனியர் அணியில் பாஸ்போர்ட் மற்றும் போதுமான ஆவணங்கள் இல்லாத காரணங்களால் அவர்களால் நாட்டைவிட்டு தப்பி செல்ல முடியவில்லை.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.
மீண்டும் பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.
பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்த ஆப்கன் கால்பந்து வீராங்கனைகள்
பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானின்
ஜூனியர் கால்பந்து வீராங்கனைகள் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த வீராங்கனைகள்
கடந்த மாதம் தாலிபன்களுக்கு பயந்து மறைந்து வாழ்ந்தனர்.
ஆப்கன் பெண்கள்
கால்பந்து அணி காபூலைவிட்டு வெளியேறிவிட்டனர் ஆனால் ஜூனியர் அணியில் பாஸ்போர்ட் மற்றும்
போதுமான ஆவணங்கள் இல்லாத காரணங்களால் அவர்களால் நாட்டைவிட்டு தப்பி செல்ல முடியவில்லை.
`ஃபுட்பால் ஃபார்
பீஸ்` என்ற அமைப்பின் முயற்சியால் 32 வீராங்கனைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது விசா கிடைத்துள்ளது.
எனவே மொத்தம்
115 பேர் லாகூரில் உள்ள பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பின் தலைமையகத்தில் தங்க வைக்கப்படுவர்
என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீராங்கனைகள்
பாகிஸ்தானுக்குள் அவசரமாக நுழைய அனுமதி கோரி பிரதமர் இம்ரான் கானிடம் அனுமதி கோரினர்
என `தி இண்டிபெண்டெண்ட்` ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காபூலுக்கான விமான சேவையை தொடங்கியது இரான்
பட மூலாதாரம், Reuters
ஆப்கானிஸ்தானை
தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு முதன்முறையாக இரான் தனது விமான சேவையை தொடங்கியுள்ளது.
இரானின் அதிகாரபூர்வ
ஊடகமான அல் அலாமில் இந்த தகவல் வெளியானதாக பிபிசி உருது சேவை தெரிவிக்கிறது.
இரானின் மகான்
விமான சேவை 19 பயணிகளுடன் காபூல் நகருக்கு புதன்கிழமையன்று வந்து சேர்ந்தது.
முன்னதாக திங்களன்று,
பாகிஸ்தானிலிருந்து வந்த விமானம் காபூல் நகரை அடைந்து பின் இஸ்லாமாத்திற்கு மீண்டும்
புறப்பட்டது.
அமெரிக்க படைகள்
ஆப்கனைவிட்டு வெளியேறிய பிறகு கடந்த வாரம் முதன்முறையாக சர்வதேச பயணிகள் காபூல் நகரிலிருந்து
விமானத்தில் புறப்பட்டனர்.
தாலிபன் தலைவர்கள் இடையே வெடித்தது மோதல்
ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைத்து ஓரிரு தினங்களில் தாலிபன்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு அதிபர் மாளிகையில் குழப்பம் நிலவி வருகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
"பாகிஸ்தான் போன்ற ஒரு தோல்வி நாட்டிடம் இந்தியா பாடம் கற்க தேவையில்லை"
பட மூலாதாரம், REUTERS/GETTY IMAGES
ஐநா மனித உரிமைகள்
ஆணையத்தில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பியதற்காக பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய
ஒத்துழைப்பு அமைப்பான OICக்கு இந்தியா காட்டமாக பதில் வழங்கியுள்ளது.
ஐநா மனித உரிமைகள்
ஆணையத்தின் 48ஆவது கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் வெளிப்படையாகவே
பயங்கரவாதிகளுக்கு பயிற்சி, பணம் மற்றும் ஆயுதங்களை வழங்கும் ஒரு நாடு என இந்தியா
தெரிவித்துள்ளது. மேலும் ஐநாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான்
இவ்வாறு ஆதரவு வழங்குகிறது என்றும் . அதை பாகிஸ்தான் தனது அதிகாரபூர்வ கொள்கையாகவே
வைத்துள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிரந்தர பிரதிநிதித்துவக் குழுவின் முதன்மை செயலர் பவன் பாதே இதை
தெரிவித்துள்ளார்.
அதேபோன்று “இந்தியா
பாகிஸ்தானை போன்ற ஒரு தோற்றுப்போன நாட்டிடம் இருந்து இந்தியா பாடம் கற்று கொள்ள
தேவையில்லை என்றும் பயங்கரவாதம் மற்றும் மனித உரிமை மீறல்களில் பாகிஸ்தான் மைய
இடமாக விளங்குகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று ஐநா
மனித உரிமை ஆணையத்தை இந்தியாவுக்கு எதிரான தவறான பிரசாரத்திற்கான மேடையாக பயன்படுத்துவதே
பாகிஸ்தானின் வேலை என்றும் தெரிவித்தார்.
முன்னதாக ஜம்மு
மற்றும் காஷ்மீரில் நடைபெறும் நீண்டகால பிரச்னையால் நடைபெற்றும் “முறையான”
மனித உரிமை மீறல்கள் என கூறப்படும் பிரச்னைகள் குறித்து ஐநா மனித உரிமைகள் அணையம் பேச
வேண்டும் என இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்திருந்தது
ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி
ஐபிஎல் போட்டிகள் துபாயில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் இந்த போட்டிகள் கோவிட் கட்டுப்பாடுகளுடன் துபாய், ஷார் ஜா மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரண்மாக தடைப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
டால்ஃபின் வேட்டை - ரத்த சிவப்பான கடல்
டென்மார்க் நாட்டின் ஆளுகையில் இருக்கும் ஃபாரோ தீவுகளை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நடக்கும் டால்ஃபின் வேட்டை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
திமிங்கலம் மற்றும் டால்ஃபின் வேட்டை இங்கு ஒரு பாரம்பரிய வழக்கமாக உள்ளது.
இதுவரை ஒரே நாளில் வேட்டைகளின்போது டால்ஃபின் கொல்லப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
ஞாயிறன்று ஒரே நாளில் சுமார் 1,400 டால்ஃபின்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டபின் இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
கடலில் கொல்லப்பட்ட டால்ஃபின்களின் உடல்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டு, உள்ளூர்வாசிகளுக்கு உணவுக்காக விநியோகிக்கப்படும்.
பல்லுயிர் பாதுகாப்புக்கான அமைப்புகள், உள்ளூர்வாசிகள் என இரு தரப்புமே இந்த வேட்டைக்கு எதிராக இப்போது குரல் எழுப்புகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தமிழ்நாட்டில் மேலும் ஒரு நீட் தற்கொலை
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான காரணமாக தமிழ்நாட்டில் மேலும் ஒரு தற்கொலை மரணம் நிகழ்ந்துள்ளது.
கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கு இடைப்பட்ட இரவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் மற்றும் திங்களன்று அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்று மாணவி தற்கொலை செய்துகொண்ட கனிமொழி என்று மாணவி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், இன்று வேலூர் மாவட்டத்திலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நீட் தேர்வு எழுதிய மாணவி செளந்தர்யா குறைந்த மதிப்பெண் பெற்று விடுவோம் என்ற அச்சத்தால் தற்கொலை செய்துகொன்டுள்ளார் என்று காவல்துறை தெரிவிக்கிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு - ருக்மணி தம்பதியரின் மகள் செளந்தர்யா.
வடகொரியா தனது கிழக்கு கடல் பகுதியில் இரண்டு பரவளைய ஏவுகணைகளைச் செலுத்தியதாக தென்கொரிய ராணுவம் உறுதி செய்துள்ளது.
இது பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் மூர்க்கத்தனமான செயல் என்று ஜப்பான் பிரதமர் யோஷிடே சுகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சில நாள்களுக்கு நீண்ட தூர ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், இப்போது இரண்டாவது முறையாக ஏவுகணைகளை வீசியிருக்கிறது வடகொரியா.
இந்த ஏவுகணைகள் சுமார் 60 கிலோ மீட்டர் உயரத்தில் 800 கிலோ மீட்டர் தொலைவு பறந்து சென்றன.
வடகொரியாவின் மத்தியப் பகுதியில் இருந்து ஜப்பான் கடலை நோக்கி இவை ஏவப்பட்டதாக தென்கொரிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
எனினும் இந்த ஏவுகணை வீச்சால் அமெரிக்காவுக்கோ அதன் நட்பு நாடுகளுக்கோ உடனடியாக எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த ஏவுகணைச் சோதனை வடகொரிய அணுசக்திச் சோதனைகளைத் தடுப்பதற்காக நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு முரண்பாடானதாகும்.
தாலிபன் தலைமைக்குள் மோதல்
ஆப்கானிஸ்தானில் புதிய அரசை கட்டியெழுப்புவது தொடர்பாக தாலிபன் தலைவர்களுக்கு இடையே பெரிய அளவிலான மோதல் வெடித்திருப்பதாக மூத்த தாலிபன் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
தாலிபயன் இயக்கத்தின் இணை நிறுவனரும் மூத்த தலைவருமான முல்லா அப்துல் கனீ பராதருக்கும் தாலிபன் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
ஆப்பிள் ஐபோன் 13 அறிமுகம்: முதல் கட்டத்திலேயே இந்தியாவிலும் விற்பனை
பட மூலாதாரம், APPLE
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனின் அடுத்த பதிப்பான ஐபோன் 13 உள்பட பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல் முறையாக முதல்கட்ட விற்பனை இந்தியாவிலும் தொடங்கப்பட இருக்கிறது. வரும் 27-ஆம் தேதி இந்தியக் கடைகளில் புதிய ஐபோன்கள் கிடைக்கும்.
புதிய ஐபோனில் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியிருப்பதுடன், பழைய வசதிகளையும் ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தியிருக்கிறது. பிரகாசமான ஸ்கிரீன், அதிக திறன் கொண்ட பேட்டரி, வேகமான சிப் என ஐபோன் 13 கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும்.
நினைவு திறனைப் பொறுத்தவரை 128 ஜிபி முதல் அதிகபட்சமாக 500 ஜிபி வரை இருக்கும். 64 ஜிபி வகை நிறுத்தப்படுகிறது.
ஐபோன் தவிர ஆப்பிள் வாட்ச், ஐபேட் ஆகியவற்றின் அடுத்த பதிப்புகளையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஐபோன் 13-இன் தொடக்க விலை ரூ.79,000 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஐபோன் மினியின் விலை ரூ.69,900.
கடந்த ஆண்டில் 64 ஜிபி நினைவகம் கொண்ட ஃபோன்கள் கிடைத்த அதே விலையில் இப்போது 128 ஜிபி நினைவகம் கொண்ட போன்கள் கிடைக்கும் என்பது ஐபோன் ரசிகர்களைக் கவரக்கூடிய அம்சமாகும்.
உயர்திறன் கொண்ட ஐபோன் 13ப்ரோ மாடலின் தொடக்கவிலை ரூ.1,19,900. இதிலும் மேம்பட்ட ஐபோன் ப்ரோ மேக்ஸ் 1,29,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
அதிபர் கொலையில் பிரதமருக்குத் தொடர்பா? தொலைபேசி அழைப்புகளால் சிக்கல்
பட மூலாதாரம், Getty Images
ஹைதி அதிபர் கொலை செய்யப்பட்டதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அந்நாட்டுப் பிரதமர் ஏரியல் ஹென்றி நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிபர் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக கொலையில் சந்தேகிக்கப்படும் நபருடன் பிரதமர் ஹென்றி பல முறை பேசியிருப்பது கண்டறியப்பட்டது.
கடந்த ஜூலை 7-ஆம் தேதி ஹைதி அதிபர் ஜோவனெல் மோய்ஸ் கொல்லப்பட்டார். தலைநகரின் புற நகரப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கிடந்தது.
இந்தக் கொலை வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரான ஜோசப் ஃபெட்போர்ட் கிளாடை நீக்குவதாக பிரதமர் ஹென்றி திங்கள்கிழமையன்று அறிவித்தார். வேறொருவரை அந்தப் பதவியில் நியமித்தார்.
ஆனால் தனது பதவியில் நீடித்திருப்பதாக கிளாட் கூறியிருக்கிறார். வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் கொலையில் பிரதமருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே கிளாடுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி நீதித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கொலையில் சந்தேகிக்கப்படும் பேடியோ என்பவரது செல்போனின் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கொலை நடந்த பிறகு அவர் பிரதமர் ஹென்றியுடன இரண்டு முறை போனில் பேசியிருப்பதற்கான ஆவணங்களும் கிடைத்திருக்கின்றன.
கொலையில் தொடர்புடையதாகக் சந்தேகிக்கப்படும் பேடியோ, நீதித்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி.
தன்மீதான குற்றச்சாட்டுகளை பிரதமர் ஹென்றி தொடர்ந்து மறுத்து வருகிறார். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி இது என்று கூறி வருகிறார்.
நேரலைக்கு வரவேற்கிறோம்!
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பகுதியில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.