கொரோனா: “வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர கடற்படை கப்பல்கள் தயார்”

கொரோனா தொற்றால் இதுவரை உலகில் 2 லட்சத்து, 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கோவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து உலக அளவில் 10 லட்சம் குணமாகியுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.

    மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. கொரோனா வைரஸ்: உலக அளவில் இன்று நடந்தது என்ன?

    • கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு “உயிர் காக்கும் தடுப்பூசிகள்” கிடைக்காத சூழ்நிலை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு, மே மாதம் 4ஆம் தேதி தொடங்கி, மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
    • தமிழகத்தில் இன்று 203 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோவிட்- 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆகியுள்ளது.
    • இந்தியாவில் புதிதாக 1993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இன்று மாலை 4 மணியளவில் இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 35,043 ஆக உயர்ந்துள்ளது.
    • ஜப்பானில் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அவசர நிலை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
    • அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
    • ரஷ்ய பிரதமர் மிஷுஷ்டின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் அதிபர் புதினுடன் வீடியோ கால் மூலம் பேசிய மிஷுஷ்டின் இந்த தகவலை உறுதி செய்தார்.
    • கொரோனா வைரஸின் உச்சத்தை பிரிட்டன் கடந்து விட்டது என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
    • தெற்காசிய நாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள இலங்கை மாணவர்களை மீட்கும் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக கடந்த 10 நாட்களில் 1065 பேர் இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • வரும் மே 4-ஆம் தேதியிலிருந்து பெரும்பாலான தொழில் நிறுவனங்களை திறக்க அனுமதிக்க உள்ளதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
  3. இங்கிலாந்தில் ஒரே நாளில் 352 பேர் உயிரிழப்பு

    இங்கிலாந்து மருத்துவமனைகளில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 352 பேர் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், இங்கிலாந்து முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,483 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 352 பேரும் 30 முதல் 103 வயதுக்குட்பட்டவர்கள் என்று இங்கிலாந்தின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

  4. “மே 17 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து”

    இந்தியாவில் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் வரும் மே 17ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், புனித பயணம் மேற்கொண்டவர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் பல்வேறுபட்ட மக்கள் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சரக்கு ரயில் சேவைகள் வழக்கம்போல் தொடரும்” என்று இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    ரயில்

    பட மூலாதாரம், Getty Images

  5. “வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர தயார்”

    வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்திய கடற்படை கப்பல்கள் தயாராக உள்ளதாக அதன் தளபதி கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

    “பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசித்து வருகின்றனர். இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கப்பற்படையின் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரசின் உத்தரவு கிடைத்ததும், கப்பற்படை கப்பல்கள் மூலம் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவரப்படுவர்.” என்று அவர் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. ஊரடங்கு முடிந்ததும் முதல் வேலை என்ன?

  7. “உயிர் காக்கும் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு”

    கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு “உயிர் காக்கும் தடுப்பூசிகள்” கிடைக்காத சூழ்நிலை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கோவிட்-19 நோய்த்தொற்று பரவலால் உலகம் முழுவதும் விமானப்போக்குவரத்து கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதால் மருந்துகளை விநியோகிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக, இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அத்தியாவசிய தடுப்பூசிகளின் இருப்பு முற்றிலும் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

    எனவே, உலக நாடுகளின் அரசு விமான நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் அதிகளவிலான சரக்கு விமானங்களை இயக்க வேண்டுமென்று அது கேட்டுக்கொண்டுள்ளது.

    “உயிர் காக்கும் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு”

    பட மூலாதாரம், UNICEF

  8. “கேரளாவில் இன்று ஒருவருக்கு கூட பாதிப்பில்லை”

    இந்தியாவில் முதன் முதலாக கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட கேரளாவில், இன்று (வெள்ளிக்கிழமை) ஒருவருக்கு கூட நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை என்று அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

  9. கொரோனா வைரஸ் - இந்தியாவின் முப்படைகளில் என்ன நிலை?

    இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதில் இந்திய முப்படைகளின் பங்களிப்புகள், ராணுவ வீரர்களின் உடல்நலம், அடுத்தகட்ட திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து அப்போது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

    இந்தியாவின் முப்படைகளின் சார்பாக இந்த சவாலான கட்டத்தில் திறம்பட சேவையாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், காவல்துறை, பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

    இந்தியாவின் முப்படைகளிலும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. இந்திய ராணுவத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் வீரர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டார்.

    இதுவரை இந்திய ராணுவத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 14 பேரில் 5 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.

    கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட சிவப்பு மண்டலங்களில் காவல்துறையினர் நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர்.

    ராணுவத்தை ஈடுபடுத்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை. இந்திய விமானப்படையில் யாருக்கும் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படவில்லை என்றாலும், தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக தீவிரவாத எதிர்ப்பு நடடிக்கைகளில் எவ்வித தொய்வும் ஏற்படவில்லை.

    ராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர். சில சிறப்பு செயல்முறைகளை நாடு சந்திக்க உள்ளது. குறிப்பாக, ஸ்ரீநகர் முதல் திருவந்தனபுரம் வரையும் அசாமின் திப்ருகார் முதல் குஜராத்தின் கட்ச் வரையும் என இரண்டு மார்க்கங்களில் விமானப்படை விமானங்கள் வரும் 3ஆம் தேதி அணிவகுக்கும்.

    அதேபோன்று, கடற்படையின் சார்பாக அனைத்து போர்க்கப்பல்களும் கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டு ஒளிர செய்யப்படும். கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை கொண்டு மருத்துவமனைகள் மீது பூக்கள் தூவப்படும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. தமிழகத்தில் எந்த மாவட்டங்கள் எந்த மண்டலம்?

    தமிழகத்தில் 12 மாவட்டங்கள்சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், 1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    சிவப்பு நிற மண்டலங்கள்: 1. சென்னை 2. மதுரை 3. நாமக்கல் 4. தஞ்சாவூர் 5. செங்கல்பட்டு 6. திருவள்ளூர் 7. திருப்பூர் 8. ராணிப்பேட்டை 9. விருதுநகர் 10. திருவாரூர் 11. வேலூர் 12.காஞ்சிபுரம் .

    ஆரஞ்சு நிற மண்டலங்கள்: 1. தேனி 2. தென்காசி 3. நாகப்பட்டினம் 4. திண்டுக்கல் 5. விழுப்புரம் 6. கோவை 7. கடலூர் 8. சேலம் 9. கரூர் 10.தூத்துக்குடி 11. திருச்சிராப்பள்ளி 12. திருப்பத்தூர் 13. கன்னியாகுமரி 14. திருவண்ணாமலை 15. ராமநாதபுரம் 16. திருநெல்வேலி 17. நீலகிரி 18. சிவகங்கை 19. பெரம்பலூர் 20. கள்ளக்குறிச்சி 21. அரியலூர் 22. ஈரோடு 23. புதுக்கோட்டை 24. தருமபுரி

    பச்சை நிற மண்டலங்கள்: 1. கிருஷ்ணகிரி

    Coronavirus tamil nadu green red orange
  11. உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?

    உலகெங்கும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மரணமடைந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை வரைபட வடிவில் தெரிந்துகொள்ளலாம்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியா முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு, மே மாதம் 4ஆம் தேதி தொடங்கி, மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    கோவிட்-19 தொற்று மிதமாக மற்றும் குறைவாக உள்ள ஆரஞ்சு மற்றும் பச்சை குறியீட்டு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பச்சை மண்டல பகுதிகளில் 50% பயணிகளுடன் பேருந்தை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆரஞ்சு மண்டல பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் இருவர் பயணிக்கலாம்.

    சிவப்பு மண்டலங்களில் பேருந்து மற்றும் தனியார் பயன்பாட்டு வாகனங்களை இயக்க அனுமதி இல்லை.

    விமானம், ரயில் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்துக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.

    உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளபடி அத்தியாவசிய தேவைகள், மருத்துவ வசதிகள், உணவுப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டும் விமான, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

    பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் ஆகியவை இயங்குவதற்கான தடையும் நீடிக்கிறது.

    இதுவரை இருந்ததைப் போலவே சமூக, மத மற்றும் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி கிடையாது.

    Lockdown extended by 2 weeks

    பட மூலாதாரம், mha.gov.in

  13. தமிழகத்தில் மேலும் 203 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இன்று 203 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இவர்களில் 176 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

    இதுவரை தமிழகம் முழுவதும் கோவிட்- 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2526 ஆகியுள்ளது.

  14. ஜப்பான் நிலவரம் என்ன?

    japan

    பட மூலாதாரம், Getty Images

    ஜப்பானில் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அவசர நிலை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

    நிபுணர்கள் குழுவுடன் கலந்து ஆலோசித்த பின்னர், இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ஜப்பானில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசர நிலை, வரும் மே 6 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

    சுமார் 126 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஜப்பானில், இதுவரை 14000-க்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன.430 பேர் மரணமடைந்துள்ளனர்.

  15. ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இந்தியாவின் தேசியக்கொடி

    பிரதமர் மோதி Hydroxychloroquine மருந்தை அளித்ததற்கும், இந்தியா வைரஸை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்குமே மூவர்ண கொடி, சுவிட்சர்லாந்து மலை மீது ஒளிரவிடப்பட்டதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவிட்டிருந்தார். ஆனால், உண்மை என்ன?

    INSTAGRAM

    பட மூலாதாரம், INSTAGRAM/ ZERMATT MATTERHORN

  16. சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரமாக அதிகரிப்பு

    அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    இன்று மட்டும் ஒரே நாளில் 932 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் ஒட்டுமொத்த எண்ணிக்கை 17,101ஆக உயர்ந்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 5 பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 13,842 என்று அந்த அமைச்சு இன்று பிற்பகலில் அறிவித்தது. தற்போது தொழிலாளர்கள் மத்தியில் அதிகளவிலான பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. எனவே நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, சிங்கப்பூரில் பணியாற்றி வரும் அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் சிலர் பொய்யான, தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் சண்முகம் சாடியுள்ளார்.

    இதன் மூலம் சிங்கப்பூரில் அந்நியத் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பர் என எச்சரித்துள்ளார்.

  17. மலேசியாவில் இன்றைய நிலவரம்

    மலேசியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதேவேளையில் 39 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். அண்மைய சில தினங்களாக புதிதாக வைரஸ் தொற்றியோரைவிட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    இன்று நோய்த்தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 12 பேர் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்களாவர்.

    தற்போது ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 6,071ஆக உயர்ந்துள்ளது. எனினும், இதுவரை 4,210 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

    1,758 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 37 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 103ஆக அதிகரித்துள்ளது

  18. கொரோனாவுக்கு போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போலி மருத்துவர்கள் யாராவது மருத்துவம் செய்வது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    தருமபுரி மாவட்டத்தில் வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்த 396 பேரையும் அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தனிமைப்படுத்தபட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

    தருமபுரி நான்கு ரோடு, பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் காவல்துறையின் வஜ்ரா வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல ட்ரோன் கேமரா (ஹெலிகேம்) மூலம் நகர் பகுதியில் வெளியில் யாரேனும் சுற்றி திரிகிறார்களா என கண்காணிக்கபடுகிறது.

  19. கொரோனா: இரான் நிலவரம் என்ன?

    இரான்

    பட மூலாதாரம், Getty Images

    இரானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,006 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 63 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் அந்நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 6,091-ஆக அதிகரித்துள்ளது.

    தற்போது வரை அங்கு மொத்தம் 95,646 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இரான், மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இருக்கிறது.

  20. இந்தியாவில் சமீப நிலவரம் என்ன?

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.554 பேர் குணமடைந்துள்ளனர்.

    இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 35,043 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸால் 73 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1147 ஆக உள்ளது.

    இதுவரை 8,888 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இது இந்தியாவின் மொத்த கொரோனா தொற்றுகளில் 25.37 % விழுக்காடு அளவாகும்.

    இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்டுள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் , மாணவர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ரயில் சேவையை பயன்படுத்த இந்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு