சமீபத்திய தகவல்கள் என்ன?
கொரோனா வைரஸ் பரவல் குறித்த இன்றைய உலகளாவிய தகவல்களை புதிய நேரலைப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் மொத்தம் 17,615 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 559 பேர் உயிரிழந்துள்ளனர். 2,854 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்த இன்றைய உலகளாவிய தகவல்களை புதிய நேரலைப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 20) மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால், தன்னுடைய பொறியியல் கல்லூரியின் ஒருபகுதியை அதற்காக எடுத்துக் கொள்ளலாம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.
மே மூன்றாம் தேதிவரை தமிழ்நாட்டில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265ஆக உயர்ந்துள்ளது.
சிங்கப்பூரில் புதிதாக 1426 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் பல வாரங்களுக்குப் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவருகின்றன.
உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் முடக்கத்தில் இருப்பதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்தை நிறுத்தியது.
கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து புதுச்சேரியில் அனைத்து மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பள்ளது.
ஆனால்,தொடர்ந்து பூட்டப்பட்ட கடைகள் மற்றும் கிடங்குகளிலிருந்து சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.
இதையடுத்து நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
இதில் 15க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
சட்ட விரோதமாக மது விற்பனை நடந்தது குறித்து ஆய்வு மேற்கொள்ள, மதுபான கடைகள் மற்றும் கிடங்குகளில் இறுதியாக மூடுவதற்கு முன்பிருந்த இருப்பையும், தற்போது உள்ள இருப்பையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு, சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபர் ஒருவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில், ”தாசில்தார் தலைமையிலான குழு ஒன்று மதுபான கடைக்குச் சோதனைக்கு வந்தபோது அவர்களுக்கு தேவையான மதுபானங்களை எடுத்துக்கொண்டு, என்னையும் கொண்டு செல்ல அனுமதித்தனர்,” என்று அந்த வாலிபர் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் தலைமையிலான காவலர்கள் உடனடியாக இதில் தொடர்புடைய தாசில்தார் உட்பட அவரது குழுவில் இருந்த உதவி காவல் ஆய்வாளர், காவலர், வருவாய் ஆய்வாளர், எழுத்தர், டிரைவர் உட்பட 8 பேரை கைது செய்தனர்.
மேலும் நடந்த சம்பவம் தொடர்பாக கவனம் செலுத்த தவறிய காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் புதுச்சேரி ஆயுதப்படைக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உலகமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், 'இதையெல்லாம் சமாளித்துவிடலாம். ஆனால்' எதிர்காலத்தில் ரோபோ வடிவில் வரவிருக்கும் பேராபத்தைத்தான் நம்மால் சமாளிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.
பணியிடங்களில் மனித வள ஆற்றலை ரோபோக்கள் பதிலீடு செய்வதை கொரோனா வேகப்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ரோபோக்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்த போகும் தாக்கம் குறித்து பல புத்தகம் எழுதி இருக்கும் மார்ட்டின் ஃபோர்ட், உரையாட சக மனிதன் தேவை என்ற நிலையை கொரோனா வைரஸ் பரவல் மாற்றி இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார். கொரோனா காரணமாக இப்போதே பல நிறுவனங்கள் ரோபோக்களை பணியமர்த்தத் தொடங்கிவிட்டன. வால்மார்ட் தரைகளைச் சுத்தப்படுத்தவும், தென் கொரியா கைகளை சுத்திகரிக்க சேனிடைசர் வழங்கவும் ரோபோக்களை பயன்படுத்துகின்றன.

பட மூலாதாரம், Getty Images
மலேசியாவில் இன்று புதிதாக 36 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 98 நோயாளிகள் முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த மார்ச் 20ஆம் தேதிக்குப் பிறகு முதன்முறையாக கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மலேசியாவில் யாரும் உயிரிழக்கவில்லை.
அதேபோல் மார்ச் 18ஆம் தேதி பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுதான் ஒரேநாளில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் வைரஸ் தொற்றியோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,425ஆக அதிகரித்துள்ளது என்றும் இதுவரை 3,295 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர்ஹிஷாம் அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மொத்த நோயாளிகளில் இதுவரை சுமார் 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், 2,041 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தார்.
"கட்டுப்பாடுகளை நீக்க 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகக்கூடும்"
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை விலக்கிக் கொள்வதில் மலேசியா அவசரப்படாமல் மென்மையான அணுகுமுறையைக் கடைபிடிக்கும் என டாக்டர் நூர்ஹிஷாம் கூறியுள்ளார் .
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வந்தாலும் பொதுமக்கள் முடிந்தவரை வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியேவரக்கூடாது என்பதை சுகாதார அமைச்சு தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
அவற்றின் மேற்பரப்பில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை தொற்றிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர். ஆனால், எந்தெந்த பொருட்கள் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்? இதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்

பட மூலாதாரம், Getty Images
மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 171 பத்திரிகையாளர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தொற்று உறுதியான பல பத்திரிகையாளர்களுக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"மருத்துவர்கள் கொரோனாவால் இறந்து போனால் இதுதான் நிலைமையா?எங்கள கல்லால அடிச்சு... பிணத்தை அப்படியே கீழே போட்டு... உங்களுக்காக உழைக்கும் எங்களுக்கு மக்கள் கொடுக்கும் பரிசு இதுவா?" - ஒரு தமிழக மருத்துவரின் கண்ணீர் பதிவு
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 20) மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் 2 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ள நிலையில், 46 பேர் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 1043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1520-ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா தொற்று சோதனைக்காக 6109 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத்தெரிவித்தால், தன்னுடைய பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை அதற்காக எடுத்துக்கொள்ளலாம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தது குறித்து வேதனை அடைந்திருப்பதாகவும் மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மக்களுக்குச் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது வேதனை அளிக்கிறது என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத்தெரிவித்தால், தன்னுடைய பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை அதற்காக எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1553 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; 36 பேர் உயிரிழந்துள்ளனர் என இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் புதிதாக 1426 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்நாட்டில் இதுவரை 8000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தோனீசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை அதிகமாகும்.
இதன்மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூரில்தான் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்படும் நபர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு தொழிலாளர்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் சிங்கப்பூரைச் சேர்ந்த 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஸ்பெயினில் ஞாயிறன்று கொரோனா தொற்றுக்கு 410 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒருமாத காலத்தில் நாளொன்றுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளில் இது மிகவும் குறைவு.
இருந்தபோதிலும் அந்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.
இதுவரை ஸ்பெயினில் மொத்தம் 20 ஆயிரத்து 852 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள்படி அமெரிக்காவுக்கு அடுத்து ஸ்பெயினில்தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மே மூன்றாம் தேதிவரை தமிழ்நாட்டில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தொழிற்சாலைகளுக்கு சில தளர்வுகளை அளிக்க விருப்பதாக மத்திய அரசு கடந்த 15ஆம் தேதியன்று தெரிவித்திருந்தது. எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஆராய்வதற்கு மாநில நிதித் துறைச் செயலர் கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. அந்தக் குழு தன் முதற்கட்ட ஆலோசனைகளை இன்று முதலமைச்சரிடம் வழங்கியது.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தொடர்வதென இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த 10 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆகஉள்ளது. இவர்களில் இன்று வீடு திரும்பிய 10 நபர்கள் உட்பட இதுவரை மொத்தம் 30 நபர்கள் குணமடைந்து சென்றுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உடலை புதைக்க எதிர்ப்பு
பெருந்துறை மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மனவளர்ச்சி குன்றிய 20 வயது நபர் ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்தார்.
இவரது ரத்தமாதிரிகள் பரிசோதனையில் கொரோனா பாதிப்பில்லை என்பது உறுதிசெய்யப்பட்டு, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்தவரின் உடலை அவர் வசித்து வந்த நம்பியூரில் அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆனால், உடலை புதைக்க அப்பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், வாலிபரின் உடலை கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள மயானத்திற்கு அவரது உறவினர்கள் எடுத்துச் சென்று இன்று அதிகாலை அடக்கம் செய்தனர்.
ஜெர்மனியில் பல வாரங்களுக்குப் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
அந்நாட்டில் புதிதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் அங்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கடந்தவாரம் கூறப்பட்டது.
சிறுகடைகள், புத்தகக்கடைகள், மிதிவண்டி கடைகள் என அனைத்தும் திறந்திருக்கலாம் ஆனால் அவை சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்.
பெரும்பாலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன ஆனால் இந்த ஆண்டு பட்டம் பெறும் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் மேலும் பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிற கட்டுப்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
சீனாவில் வுஹானில் உள்ள ஒரு வைரஸ் ஆய்வு நிலையத்தின் உயிரி பாதுகாப்புத் தன்மை குறித்து அமெரிக்காவின் ரகசியத் தகவல் பரிமாற்ற ஆவணங்களில் கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவி உலகின் கவனத்தை ஈர்த்த அதே வுஹானில் தான் இந்த ஆய்வகம் அமைந்துள்ளது.
வுஹான் பரிசோதனை நிலையத்திலிருந்து தான் இந்த வைரஸ் வெளியாகியுள்ளது என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது என்று அதன் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அப்படி ஏதும் இருந்தால் என்ன, இப்போதைய நோய்த் தொற்று பற்றி நாம் புரிந்து கொள்ள இதில் ஏதாவது இருக்கிறதா?
விரிவாகப் படிக்க: இங்கே க்ளிக் செய்யவும்
பஞ்சாபில் விவசாய பணிகள் தொடங்கி உள்ளன. லூதியானாவில் கோதுமை அறுவடை செய்யும் விவசாயிகள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
கொரோனா தொற்றால் இந்தியாவில் புதிதாக 1553 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17, 265 ஆக உயர்ந்துள்ளது.