நன்றி நேயர்களே!
நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிகச் செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
இந்தியாவை பொறுத்தவரை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு இன்று மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் 537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிகச் செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த குழுவின் பரிந்துரைப்படி மார்ச் 17 முதல் ஏப்ரல் 4 வரை 2691 கைதிைள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் சுகாதார நிலைமை இதில் கருத்தில் கொல்லப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
அபராதம் செலுத்த முடியாதவர்கள், பிணை நிபந்தனையை நிறைவேற்றாதவர்கள், சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள், விசாரணைக் கைதிகள் ஆகியோர் இதில் அடக்கம்.
இலங்கை சிறைகளில் 10,000 பேர் மட்டுமே அடைக்க வசதி உள்ள நிலையில் 20,000க்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபது ஆயிரத்தை கடந்தது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவின்படி, உலகம் முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்திய நேரப்படி இரவு 7:52 மணிக்கு 60,887ஆக உள்ளது.
அதன்படி, உலக நாடுகளிலேயே அதிகபட்சமாக இத்தாலியில் இதுவரை 14,681 பேரும், ஸ்பெயினில் 11,744 பேரும், பிரான்சில் 6,507 பேரும், பிரிட்டனில் 4,313 பேரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், அமெரிக்காவில் 2,78,568 பேருக்கும், ஸ்பெயினில் 1,24,736 பேருக்கும், இத்தாலியில் 1,19,827 பேருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில், 2,33,930 பேர் இதுவரை நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுத்தளம் கூறுகிறது.
தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் ஏற்கனவே மந்தமாக இருந்த இந்தியாவின் பொருளாதார நிலையை இன்னும் மோசமடைய செய்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், இந்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை கடலில் ஒரு துளி போன்றதுதான் என்கின்றனர் வல்லுநர்கள்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான ஐந்து வயது குழந்தை உயிரிழந்துள்ளது என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த பிரிட்டனின் முதல் குழந்தையான 13 வயதான இஸ்மாயில் முகமது அப்துல் வகாபின் இறுதிச்சடங்கு வெள்ளியன்று நடந்தது.
அந்த சிறுவனின் உடன்பிறந்த இரு குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதால், இதில் அவனது குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.
இதுவரை பிரிட்டனில் 4313 பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர்.
ஏப்ரல் 24 அன்று டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ நிறுவனத்தின் 6E-2403 மற்றும் ஏர் ஏசியா நிறுவனத்தின் 15-765 ஆகிய விமானங்களில் பயணித்தவர்கள் தங்களைத் தாங்களே 28 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவ உதவியை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலேசியா முழுவதும் பதிவாகி உள்ள நோய்த் தொற்று சம்பவங்களில் 44.36 விழுக்காடு கோலாலம்பூரில் நடைபெற்ற மத நிகழ்வுடன் தொடர்புள்ளவை என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 3,483ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்று காரணமாக இதுவரை 57 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று ஒரே நாளில் புதிதாக 150 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட அதே வேளையில், 88 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
விரிவாகப் படிக்க: மத நிகழ்வில் பங்கேற்றவர்களை கண்டறிய முயலும் மலேசிய அரசு
பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் 60ஆவது ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாடும் திட்டத்தை கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஆஃப்ரிக்க நாடான செனகல் ரத்து செய்துள்ளது.
மேற்கு ஆஃப்ரிக்க நாடான செனகலில் இதுவரை 140 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆஃப்ரிக்க கண்டத்தில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக செனகல் உள்ளது.
இதையடுத்து, கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அவசரநிலை சட்டத்தை நிறைவேற்றிய செனகல் அரசு, தனது நிலம், வான் மற்றும் நீர்வழி எல்லைகளை மூடியது.
கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு விடுதிகளில் 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் அதிகரிக்கிறது.
ஏராளமான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமலில் உள்ள நிலையில், பல நாடுகளிலும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
விரிவாகப் படிக்க: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
மார்ச் 31 - 57
ஏப்ரல் 1 - 110
ஏப்ரல் 2 - 75
ஏப்ரல் 3 - 102
ஏப்ரல் 4 - 74
கடைசி 5 தினங்களில் தமிழகத்தில் 418 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதாக தனக்கு தோன்றுவதாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
“டெல்லியில் 435 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 40 பேருக்கு மட்டுந்தான் சமூகப் பரவலின் வாயிலாக இந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து டெல்லி வந்தவர்கள் மற்றும் நிஜாமுதீனில் உள்ள மசூதியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்” என்று அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெயியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது.
இன்று கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 74 பேரில் 73 பேர் டெல்லி நிஜாமுதீனில் உள்ள மசூதியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள 485 பேரில் 422 பேர் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தேனியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருபவரின் மனைவி (வயது 53) மூச்சுத்திணறலின் காரணமாக இன்று (சனிக்கிழமை) மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5ஜி தொழில்நுட்பத்திற்கும் கொரோனா வைரஸுக்கும் தொடர்புள்ளதாக பரப்பப்படும் "ஆதாரமற்ற" கோட்பாடுகளை நம்பி பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் அலைவரிசை கோபுரங்கள் தீயிடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, நேற்று (வெள்ளிக்கிழமை) பிரிட்டனின் பர்மிங்ஹாம் பகுதியிலும், அதற்கு முந்தைய தினம் மெர்செசைடு பகுதியிலும் உள்ள அலைவரிசை கோபுரங்கள் தீயிலிடப்பட்டன.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு, இந்த விவகாரம் தொடர்பாக பரப்பப்பட்டு வரும் தவறான தகவல் குறித்து தங்களுக்கு தெரியும் என்றும், 5ஜி தொழில்நுட்பத்துக்கும், கொரோனா வைரஸுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுவதற்கு “நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் தொலைத்தொடர்பு நிறுவனங்களை கட்டுப்படும் மொபைல் யுகே எனும் அமைப்பு, இந்த தவறான தகவல்கள் மற்றும் கோட்பாடுகள் தீவிரமாக பரப்பப்பட்டு வருவது “கவலையளிப்பதாக” தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அமலாகியுள்ள முடக்கநிலை குறித்து தமிழக முதல்வர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 5) முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபரை நீங்கள் சந்தித்தால், உடனடியாக எச்சரிக்கும் ஒரு செயலியை பயன்படுத்துவதே தொற்றை கட்டுப்படுத்த உதவும் என மருத்துவர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர் யாரையேனும் நாம் சந்தித்துள்ளோமா என அறிய உதவும் புதிய செயலியை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து விரிவாக படிக்க: கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க உதவும் செல்பேசி செயலி - பயன்படுத்தும் முறை
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ள 2,902 பேரில் ஒன்பது சதவீதத்தினர் 0-20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், 42 சதவீதத்தினர் 21-40 வயது பிரிவை சேர்ந்தவர்கள் என்றும், 33 சதவீதம் பேர் 41-60 வயது மற்றும் 17 சதவீதம் பேர் 60 வயதுக்கும் மேலானவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லி நிஜாமுதினீலுள்ள மசூதி ஒன்றில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற 17 மாநிலங்களை சேர்ந்த 1,023 பேருக்கு இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் மொத்த நோய்த்தொற்று பாதிப்பில் 30 சதவீதம் என்று அவர் மேலும் கூறினார்.
“நாடு தழுவிய மிகப் பெரிய தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு தப்லிக் ஜமாத் அமைப்பை சேர்ந்த 22,000 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்."

பட மூலாதாரம், Getty Images
கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 5) இரவு ஒன்பது மணிக்கு மின்விளக்கை அணைத்து, அகல்விளக்கை ஏற்றிவைக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி அறிவித்ததை அடுத்து, இந்த நடைமுறையால் மின்கட்டமைப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்று கிழமை அன்று இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடங்கள் மின்விளக்கை அனைத்து வைக்கவேண்டும் என மோதி கோரியிருந்தார்.
இதனை அடுத்து, மின்விளக்கை அணைக்கும் போது, மற்ற மின் உபகரணங்களை வழக்கம் போல் இயக்கத்தில் வைத்திருக்கவேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
மின்விளக்கை அனைவரும் அணைக்கும் போது மின்சார இணைப்புகளில் இடர்பாடுகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும் உறுதி செய்வதற்கும் அமைக்கப்பட்ட குழுக்களின் கூட்டுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை சந்திக்க எந்த அளவுக்கு தயாராக உள்ளன? நோய்த்தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்துவதற்கு உள்ள வசதிகள், நோய்த்தொற்று பரவல் கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“முகக்கவசங்கள், நோய்த்தொற்று பரிசோதனை கருவிகள், கையுறைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவை தேவையான அளவு உற்பத்தி செய்யப்படுவதை துறைசார் அதிகாரிகள் உறுதி செய்வதற்கு பிரதமர் மோதி உத்தரவிட்டுள்ளார்.”

பட மூலாதாரம், Getty Images