'கொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை இறக்கலாம்' - வெள்ளை மாளிகை எச்சரிக்கை

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் எச்சரித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்கை

    அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் மட்டும் 1 லட்சத்தில் இருந்து 2,40,000 பேர் வரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கணித்துள்ளது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்க மக்கள் கடுமையாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் தனித்து இருத்தல், வீட்டை விட்டு வெளியேறாமல் இருத்தல் உள்ளிட்ட அறிவுரைகளை பின்பற்றுவதை பொறுத்தே இந்த கணிப்பு நிஜமாகுமா அல்லது இந்த கணிப்பைவிட அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்படுமா என்பது தெரிய வரும் என அமெரிக்க சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

  2. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு

    தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவருமே டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டார். இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இவர்கள் அனைவருமே டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் கூறினார்.

  3. 'எந்த நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை?'

    இந்த கேள்விக்கான விடையை பலர் கூகுளில் தேடியுள்ளனர். அதற்கான பதிலும் பலருக்கு கிடைத்துள்ளது. இந்த கேள்விக்கான பதிலில் மார்ஷல் தீவு, சமோவா, மற்றும் மலாவி உள்ளிட்ட இடங்கள் இடம்பெற்றுள்ளன.

    ஆனால் இந்த இடங்களுக்கும் கூட கொரோனா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையோ, அங்கெல்லாம் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றே கருதப்படுகிறது.

    அல்லது அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சரியாக வெளியிடவில்லை என்றும் கருதப்படுகிறது.

    எனவே, கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த செய்திகளையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்தும் தொடர்ந்து நாம் தெரிந்து வைத்துக் கொண்டு, விடுமுறைக்காக பயணம் மேற்கொள்ளும் கனவுகளை தற்சமயம் நிறுத்தி வைப்பது அனைவருக்குமே சிறந்த நன்மை அளிக்கும்.

  4. மன்னிப்பு கேட்ட மலேசிய அரசு

    மலேசியாவில் தற்போது பாதியளவு முடக்கநிலை அமலில் உள்ளநிலையில், அந்நாட்டின் பெண்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட கார்ட்டூன் ஒன்றுக்கு அந்நாட்டின் அரசு மன்னிப்பு கோரியுள்ளது.

    முடக்கநிலை அமலில் உள்ளநிலையில், வீட்டில் இருக்கும் பெண்கள் தங்கள் கணவர்களுக்கு பிடித்தவகையில் நன்கு உடையுடுத்த வேண்டுமென்றும், அலங்காரம் செய்துகொள்ள வேண்டுமென்றும், அதே வேளையில் வீட்டில் இருக்கும் கணவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அந்த கார்ட்டூன்களில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

    இது பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என சமூக ஊடகங்களில் பரவலாக எதிர்ப்பு பதிவுசெய்யப்பட்ட நிலையில், இந்தகார்ட்டூன், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் வெளியிட்டது அல்ல என விளக்கமளித்து அரசு சார்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

  5. இரானில் 3000ஆக அதிகரித்த உயிரிழப்பு

    இரானில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 138 பேர் உயிரிழந்துள்ளனர், இதனால் அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000ஆக அதிகரித்துள்ளது.

    இதே காலக்கட்டத்தில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,987ஆக உள்ளது. எனவே இரான் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கபட்டவர்கள் 47,593 பேர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

  6. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1637 ஆனது

    டெல்லி நிஜாமுதீனில் உள்ள ஒரு மசூதியில் நடந்த தப்லிக் ஜமாஅத் நிகழ்வில் கலந்துகொண்ட 1800 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நேற்று முதல் இந்தியா முழுவதும் 386 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பு நாடு முழுவதும் இருக்கும் பொதுவான போக்கல்ல என்று அந்த அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் டெல்லி தப்லிக் ஜமாஅத் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் நாடு முழுவதும் பயணித்ததுதான் என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் கூறுகிறது.

    தற்போதுவரை இந்தியா முழுவதும் 1637 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது. அவர்களில் 132 பேர் குணமடைந்துள்ளனர். 38 பேர் இறந்துள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பா - சமீபத்திய தகவல்கள்

    ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றால் உண்டான மரணங்களின் எண்ணிக்கை 30,000 கடந்துள்ளது சமீபத்திய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    செவ்வாயன்று பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் ஒரே நாளில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

    பிரான்ஸில் 499 பேரும், ஸ்பெயினில் 849 பேரும் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் உடல்நிலை மோசமாக உள்ளவர்களை பாரிஸிலிருந்து குறைவாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

    இதேபோல் ஸ்பெயினிலும் திட்டமிட்டு வருகின்றனர். ஜெர்மனியில் மக்கள் வெளியே வர விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் எத்தனை காலம் நீடிக்கும் என்பது குறித்து சான்சலர் ஏங்கலா மெர்கல் அந்நாட்டின் மாநில தலைவர்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளார்.

    ஜெர்மனியில் இதுவரை 67,366 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 732 பேர் அந்த தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது.

    அந்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,428ஆக உள்ளது. இந்த வருடம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் வரை வீழ்ச்சி இருக்கும் என்பதே நிதர்சனம் என அந்நாட்டின் தொழில் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    ஸ்லோவேனியாவில், மருத்துவமனைகளின் இயக்குநர், அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிகையாளர் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதி ஆகியோருக்கு உடல்நலம் குன்றினால் சிகிச்சை அளிக்க மாட்டேன் என்று கூறியதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

    Coronaviru

    பட மூலாதாரம், Getty Images

  8. கொரோனா தொற்று யாருக்கும் இல்லை: மறுக்கிறது ஈஷா

    கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஃபிப்ரவரி 21ஆம் தேதியன்று மகா சிவராத்திரிக்கென லட்சக்கணக்கானவர்கள் திரண்ட நிலையில், அதில் யாருக்கும் கொரோனா இல்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஜனவரி மாத இறுதியிலேயே இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுவிட்ட நிலையில், இந்த மகா சிவராத்திரி விழாவில் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடியது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

    isha foundation

    பட மூலாதாரம், isha foundation facebook page

  9. ஊரடங்கு பிறப்பிக்க மறுக்கும் பாகிஸ்தான் பிரதமர்

    இம்ரான் கான்

    பட மூலாதாரம், Getty Images

    பாகிஸ்தானில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் தெரிவித்துள்ளார்.

    உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது பாகிஸ்தான்.

    அந்நாட்டில் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1900க்கும் மேல் உள்ளது. இருப்பினும் வைரஸ் தொற்றை ’அறிவால்’ வெல்ல வேண்டும் என அந்நாட்டு மக்களிடம் பிரதமர் இம்ரான்கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

    நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும், பல மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.

    பிற தெற்காசிய நாடுகளில் என்ன நிலை?

    வங்கதேசத்தில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளால் அங்குச் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். நேபாளத்தில் இதுவரை ஐந்து பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலிருந்து வெளியேறும் அந்நாட்டுத் தொழிலாளர்களின் விவரங்களை நேபாளம் திரட்டி வருகிறது.

    இந்தியாவில் சிக்கியிருக்கும் நேபாள மக்களை அனுமதிக்காமல் நாட்டின் எல்லை மூடப்பட்டதற்கு பெரும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கையில் நேபாளம் ஈடுபட்டுள்ளது.

  10. கொரோனா வெளியே வந்த ஆமைகள்

    ஒரு பக்கம் மனிதர்கள் கொரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்க இன்னொரு பக்கம் ஏறத்தாழ 8 லட்சம் ஆமைகள் கடலிலிருந்து வெளியே வந்துள்ளன.

  11. கனடாவில் தொடர்ந்து உயரும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

    கனடாவில் தொடர்ந்து உயரும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா வைரஸ் காரணமாக கனடாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அங்கு இந்த வைரஸ் தொற்றால் 8,500 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    அந்நாட்டில் உள்ள 10 மாகாணங்களிலும் அசவர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர் தனது மனைவி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமாகி வந்திருந்தாலும், தான் தனிமையில் இருக்கப்போவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

  12. அமெரிக்காவின் நிலை

    அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4000த்தை கடந்ததாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.

  13. கொரோனா வைரஸ்: உலகத்தையே உருக வைத்த ஒரு காதல் கதை

    காதல் எனப்படுவது யாதெனில்? - இவர்களின் கதையைக் கேளுங்கள். உயிரே போனாலும் உன்னை விலக மாட்டேன் பேரன்பே - உலகத்தையே உருக வைத்த ஒரு காதல் கதை.

    காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ்: உலகத்தையே உருக வைத்த ஒரு காதல் கதை Corona Love Story
  14. செய்தித்தாள்கள் அச்சடிப்பது நிறுத்தம்

    ஆஸ்திரேலியாவில் சுமார் 60 செய்தித்தாள்கள் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அச்சடிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

    மீடியா க்ரூப் நியூஸ் கார்ப் என்ற நிறுவனம், இணைய சேவைக்கு மாறவுள்ளதாக தெரிவித்திருக்கிறது

  15. நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் க்ரூஸ் கப்பல்கள்

    நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் க்ரூஸ் கப்பல்கள்

    பட மூலாதாரம், AFP

    தென் அமெரிக்காவிலிருந்து அமெரிக்கா சென்று கொண்டிருக்கும் இரண்டு க்ரூஸ் கப்பல்கள் துறைமுகம் கிடைக்காமல் கடலில் சிக்கியுள்ளன.

    பனாமா கால்வாய் வழியாக சென்ற எம்எஸ் சான்டாம் மற்றும் எம்எஸ் ரோட்டர்டாம் என்ற இரண்டு க்ரூஸ் கப்பல்கள் ஃப்ளோரிடாவிற்கு சென்று கொண்டிருக்கின்றன.

    ஆனால், நோய்வாய்ப்பட்ட பயணிகள் இருக்கும் இரு கப்பல்களும், தங்கள் துறைமுகத்திற்கு வரக்கூடாது என்று ஃப்ளோரிடா ஆளுநர் ரான் டிசான்டிஸ் கூறினார்

    "அவர்கள் இங்கு வந்து இறங்கினால், மருத்துவமனை வசதிகளை பெரும்பாலும் அவர்களே எடுத்துக் கொள்வார்கள். எங்களிடம் போதிய படுக்கை வசதிகள் இருக்கின்றன. ஆனால், அவை ஃப்ளோரிடா மக்களுக்கு இல்லாமல் போகும் நிலை எனக்கு வேண்டாம்" என அவர் தெரிவித்தார்.

    சான்டாம் கப்பலில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியிருக்கும் நிலையில், அந்த கப்பலைத் தென் அமெரிக்காவிற்கும் செல்ல அனுமதி கிடைக்கவில்லை தற்போது இரு கப்பல்களும் துறைமுகம் கிடைக்காமல் தவித்து வருகின்றன.

    கப்பலில் உள்ள பயணிகள் மற்றும் பணியாளரக்ள உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. சான்டாம் கப்பலில் உயிரிழந்த இருவர் கோவிட் 19 தொற்றால் இறந்ததாக நம்பப்படுகிறது.

  16. "இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்"

    "இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்"

    பட மூலாதாரம், Getty Images

    இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.

    கடந்த காலத்தில் நிகழ்ந்திராத ஒரு பெரு மந்தநிலை இதனால் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் ஏற்படக்கூடிய சமூக பொருளாதார தாக்கம் குறித்து ஐ.நாவின் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 8,50,000ஆக உயர்ந்துள்ளது. இதனால் 41,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸால், அமெரிக்காவில் 3,600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட அதிகமாகும்.

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள்படி, அமெரிக்காவில் 1,81,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போதைய நிலவரப்படி அங்கு நான்கில் ஒரு அமெரிக்கர் ஏதேனும் ஒரு வகையில் இந்தத் தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ளார் அல்லது முடக்கப்படுவார்.

    இதே நேரத்தில் வைரஸ் தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 849 மரணங்கள் பதிவாகி உள்ளன.

    பிரிட்டனில் மார்ச் 30ம் தேதி அன்று மட்டும் 381 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,789ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 13 வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளதாக லண்டன் கிங்க்ஸ் கல்லூரி மருத்துவமனை அறக்கட்டளை கூறுகிறது.

    குட்டாரஸ் பேசியது என்ன?

    நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் பேசிய குட்டாரஸ், "சமூகத்தை மோசமாக தாக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்று, மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் காவு வாங்கி வருகிறது" என்றார்.

    ஐ.நா தொடங்கப்பட்டதில் இருந்து, நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக கோவிட் - 19 தொற்று உள்ளது"

    இத்தொற்றைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்த சுகாதார நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். இந்த நோய்த் தொற்று பரவலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

    வளர்ந்த நாடுகள், மற்ற நாடுகளுக்கு உதவுமாறு வலியுறுத்திய குட்டரஸ், அப்படி இல்லையென்றால், இந்த வைரஸ் தொற்று காட்டுத்தீ போலப் பரவும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

    உலகளவில் இந்த வைரஸ் தொற்றால் சுமார் 25 மில்லியன் பேர் வேலையிழப்பார்கள் என ஐ.நா அறிக்கை கூறுகிறது.

    உலகளாவிய அந்நிய நேரடி முதலீடுகள், 40 சதவீதம் வரை கீழ்நோக்கி செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

  17. கொரோனா வைரஸ் இந்த உலகை எப்படி மாற்றியுள்ளது?

    கொரோனா வைரஸ் இந்த உலகை எப்படி மாற்றியுள்ளது தெரியுமா? உலகின் பல்வேறு நகரங்களில் ஆள் நடமாட்டமே இல்லை. இதில் பெரிய பெரிய சுற்றுலா தலங்களும் அடங்கும். பல நாடுகளில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் தேவையான பொருட்களை மக்கள் விரைவாக வாங்குகின்றனர்.

    காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ் இந்த உலகை எப்படி மாற்றியுள்ளது?
  18. கொரோனா சிகிச்சை: 'மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து'

    கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள், மருத்துவர்களைவிட மோசமான சவால்களை எதிர்கொண்டுள்ள செவிலியர்கள் போன்றவற்றை விளக்குகிறார் லண்டனில் உள்ள தமிழ் மருத்துவர்.

    காணொளிக் குறிப்பு, கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு என்ன கட்டுப்பாடு - பிரிட்டன் தமிழ் மருத்துவர்
  19. மியான்மரில் முதல் கொரோனா வைரஸ் மரணம் பதிவானது

    மியான்மரில் முதல் கொரோனா வைரஸ் மரணம் பதிவானது

    பட மூலாதாரம், Ge

    மியான்மரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தற்போது முதல் மரணம் பதிவாகியுள்ளது.

    புற்று நோய் இருந்த 69 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால், தலைநகர் யங்கூனில் உயிரிழந்தார்.

    அவர் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், வரும் வழியில் சிங்கப்பூருக்கும் சென்றதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக மியான்மரில் இந்த வைரஸால் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை என்று அந்நாடு தெரிவித்திருந்தது. எனினும் இதுகுறித்து பல வல்லுநர்களும் சந்தேகம் எழுப்பினர்.

    மியான்மர் மக்களின் "வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையால்" இத்தொற்று அவ்வளவாகப் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்று அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். தற்போது இந்த வைரஸ் தொற்றால் அங்கு 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  20. வரும் நாட்கள் "வலி மிகுந்தவையாக" இருக்கும், "வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களை தயாராக்கிக் கொள்ளுங்கள்"

    வரும் நாட்கள் "வலி மிகுந்தவையாக" இருக்கும்

    பட மூலாதாரம், Getty Images

    "வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்" என அமெரிக்க மக்களிடம் கூறியுள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் நாட்கள் "வலி மிகுந்தவையாக" இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

    அமெரிக்காவில் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இரண்டரை லட்சம் பேர் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    "இது வலி மிகுந்ததாக இருக்கும்... அடுத்த இரண்டு வாரங்கள் மிக மிக மாேசமாக இருக்கும்" என வைரஸ் தொற்று பரவலைக் கொள்ளை நோய் என்று விவரித்து பேசிய டிரம்ப் தெரிவித்தார்.

    "வரும் கடினமான நாட்களுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும் தயாராக வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்" என வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப் குறிப்பிட்டார்.