ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் திறக்க எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் எதிரே முழக்கம்

காணொளிக் குறிப்பு, ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் திறக்க எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் எதிரே முழக்கம்

ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மக்கள் முழக்கம் எழுப்பினர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ஏற்கெனவே சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக கூறி மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, தம்மை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கும்படி கேட்டது.

இதற்கு அனுமதி அளிக்கலாம் என்று மத்திய அரசு வழக்குரைஞரும் உச்ச நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இப்பிரச்சனையில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. இதை ஒட்டிதான், ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே மக்கள் முழக்கம் எழுப்பினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: