டெல்லியில் பொதுமுடக்கம்: பேருந்து நிலையத்தில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் - மீண்டும் திரும்பும் காட்சிகள்

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஆறு நாட்கள் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்திருந்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளிகள் டெல்லியை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட காரணத்தால் தங்கள் வாழ்வாதாரம் குறித்து அச்சம் கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் டெல்லியை விட்டு வெளியேற டெல்லியின் பேருந்து நிலையங்களில் குவிந்தனர்.

கொரோனா இரண்டாம் அலையில் இந்திய மாநிலங்கள் பல தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீப நாட்களாக இந்தியாவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டு லட்சத்தை தாண்டி வருகிறது.

அதில் டெல்லியின் நிலை மிக மோசமாக உள்ளது.

கடந்த வருடம் இந்தியா முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர்.

தற்போது அதே சம்பவங்கள் மீண்டும் திரும்பவது போல தோன்றும் காட்சிகளாக இவை உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: